அலேகா தூக்கி.. கட்டிப்பிடிச்சு முத்தம்.. சாண்டி, தர்ஷனுக்கு எஸ்டிஆர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாண்டி மற்றும் தர்ஷனை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் நடிகர் சிம்பு.
Recommended Video
சென்னை: நடிகர் சிம்புவை நேரில் சந்தித்துள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாண்டி.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் சிம்புவுக்கும் இடையே சீசன் தோறும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. முதல் சீசனில் சிம்புவின் மனம் கவர்ந்த போட்டியாளராக ஓவியா இருந்தார். இரண்டாவது சீசனில் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் போட்டியாளராக கலந்து கொண்டார்.
மூன்றாவது சீசனிலும் சிம்புவிற்கு பிடித்த போட்டியாளராக இருந்தவர் நடன இயக்குநர் சாண்டி தான். ஏற்கனவே சிம்புவுக்கும், சாண்டிக்கும் இடையே நட்பு இருந்து வந்தது.பட புரொமோசனுக்காக மஹத் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது கூட, சிம்பு மிகவும் விசாரித்ததாக சாண்டியிடம் கூறினார்.

2வது இடத்தில் சாண்டி
இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார்.

சிம்புவின் வாழ்த்து
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாண்டிக்கு திரையுலகப் பிரபலங்கள் நேரிலும், சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சிம்புவை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார் சாண்டி. அப்போது சாண்டியுடன் தர்ஷன் மற்றும் மஹத் இருந்துள்ளனர்.

மகிழ்ச்சி
இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ ஒன்றை சிம்பு தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிம்புவைப் பார்த்த மகிழ்ச்சியில் சாண்டி துள்ளிக் குதிக்கிறார். அப்போது அவரை சிம்பு தூக்கி சுற்றுகிறார். பின்னர் தர்ஷனிடம் கை குலுக்கிறார் சிம்பு.

வைரல் வீடியோ
சாண்டிக்கு சிம்பு ஏதோ பரிசும் தருகிறார். அதை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியில் குருநாதா எனக் கத்துகிறார் சாண்டி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து சுற்றுலா முடிந்து சிம்பு தாடியுடன் திரும்பிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











