திரும்பவும் வாத்து என கலாய்த்த கஸ்தூரி.. பொங்கியெழுந்த வனிதா.. டிவிட்டரில் நடந்த குடிமிப்பிடி சண்டை

வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் இடையே டிவிட்டரில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Unseen : Kasthuri-யை வம்புக்கு இழுக்கும் Vanitha- வீடியோ

சென்னை: வனிதாவை மீண்டும் வாத்து எனக் கூறி கலாய்த்துள்ளார் நடிகை கஸ்தூரி. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும், வனிதா மற்றும் கஸ்தூரி இடையே மோதல் நீடித்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் சண்டை கோழியாக சுற்றிக்கொண்டிருந்தவர் வனிதா. அதன் காரணமாகவே முதலில் அவர் வெளியேற்றப்பட்டார். பிறகு மீண்டும் அவர் வைல்ட் கார்டு மூலம் ரீஎண்ட்ரி ஆனார்.

இதற்கிடையே கஸ்தூரியை வீட்டிற்கு அழைத்து வந்து கண்டெண்ட் எடுக்க நினைத்தார் பிக் பாஸ். ஆனால் அவரால் பெரிய அளவில் கண்டெண்ட் கொடுக்க முடியவில்லை.

வாத்து சண்டை

வாத்து சண்டை

பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி கொடுத்து ஒரே பெரிய கண்டெண்ட் வனிதாவை வாத்து என குறிப்பிட்டு வம்பிழுத்தது தான். வாத்து என கஸ்தூரி அழைத்ததை பொறுத்துகொள்ள முடியாத வனிதா, கஸ்தூரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். வார்த்தை போரில் வனிதாவிடம் தோற்றுப் போன கஸ்தூரி.

வனிதா செய்த பிரச்சினை

வனிதா செய்த பிரச்சினை

கடைசியில் அவரிடம் சாரி கேட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தாலும் வனிதா, கஸ்தூரி இடையே அதன் பிறகும் உரசல் இருந்து கொண்டே இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து இருவரும் வெளியேறிவிட்ட நிலையில் அந்த மோதல் மறைந்து போயிருக்கும் என்றே ரசிகர்கள் நம்பினர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியிலும் அது தொடர்கிறது.

வாத்து எமோஜி

பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியது குறித்து வனிதா டிவீட் செய்திருந்தார். அதை குறிப்பிடும் வகையில் கஸ்தூரி போட்ட டிவீட்டில், "என்னதான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா" என அவர் தெரிவித்திருந்தார். மேலும் அந்த டிவீட்டின் இறுதில் ஒரு வாத்து எமோஜியையும் கஸ்தூரி சேர்த்து பதிவிட்டிருந்தார்.

கடுப்பான வனிதா

கஸ்தூரியின் இந்த டிவீட்டை ரசிகர் ஒருவர் வனிதாவை டேக் செய்து ரீடிவீட் செய்தார். அதை பார்த்து கடுப்பான வனிதா, "உனக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் உன்னைப் பற்றி குறிப்பிட இணையத்தில் ஒரு எமோஜி கூட இல்லை. அதனால் அந்த இடத்தை வெறுமையாக விடுகிறேன்". என பதிலளித்தார்.

கஸ்தூரி பதிலடி

வனிதாவின் இந்த டிவீட்டுக்கு பதில் டிவீட் செய்துள்ள கஸ்தூரி, " அன்பான வனிதா, உன்னை போல் வார்த்தைகளை பயன்படுத்த இந்த இணையத்தாலேயே முடியவில்லை. இந்த வார்த்தை போரில் ஜெயித்துவிட்டதாக நினைத்து உனக்காக நீயே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்", என பதிலடி கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் அட்வைஸ்

ரசிகர்கள் அட்வைஸ்

பிக் பாஸ் வீட்டில் தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டீர்கள். வெளியே வந்த பிறகும் ஏன் இப்படி அடித்து கொள்கிறீர்கள் என ரசிகர்கள் தலையில் அடித்து கொள்கின்றனர். "ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்", என ரசிகர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X