முகெனுக்கு ரெட் கார்டு.. வனிதாவை அறைந்தது மட்டும் காரணமல்ல.. மறைந்திருந்து தாக்கும் பிக் பாஸ்?

பிக் பாஸ் வீட்டில் முகெனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி இருக்கிறது.

சென்னை: முகெனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கு உண்மையான காரணம் வனிதாவை அறைந்ததாகக் கூறப்படுவது நம்பும்படி இல்லை.

இம்முறை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே கோபம் வந்தால் எல்லை மீறும் குணாதிசயம் கொண்டவர் முகென் தான். ஏற்கனவே பல சம்பவங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளது. யாராவது அவரை அளவுக்கு மீறி கோபமேற்றினால், அவர் தன்னிலை மறந்து கோபத்தில் வன்முறையில் ஈடுபடுகிறார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அவர் வனிதாவை அறைந்து விட்டதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

வனிதா:

வனிதா:

ஆனால் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வனிதா, பல குட்டி கலாட்டாக்களை தினமும் அரங்கேற்றி வருகிறார். இதனால் பிக் பாஸ் வீட்டிலுள்ளவர்கள் அனைவருமே வனிதா மீது கோபத்தில் தான் உள்ளனர்.

நம்புவது கடினம்:

நம்புவது கடினம்:

அப்படி ஏதாவது ஓர் சண்டையில் கூட வனிதாவை முகென் தாக்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் எப்போதும் அவரைக் கண்காணித்தபடியே இருக்கிறார்கள் தர்ஷன், கவின் மற்றும் சாண்டி. அவர்களை மீறி வனிதாவை முகென் அடித்தார் என்பது நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி:

ரசிகர்கள் அதிர்ச்சி:

இது ஒருபுறம் இருக்க, வனிதாவை அடித்ததற்காக முகெனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக சமூகவலைதளத்தில் வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சரவணன் விவகாரம் போலவே, ‘வேறு' எதையோ மனதில் வைத்துக் கொண்டு தான், பிக் பாஸ் முகெனுக்கு இப்படி ஒரு தண்டனையைத் தந்திருக்க வேண்டும் என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சரவணன் விவகாரம்:

சரவணன் விவகாரம்:

கமலை ஒருமையில் பேசியதால் தான் சரவணன் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் எனக் கூறப்படுகிறது. தற்போதும் அதே போல், முகென் இரு வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டின் கட்டிலை அடித்து உடைத்தார். அதை மனதில் வைத்துக் கொண்டு தான் தற்போது புதிய பிரச்சினைகளை உருவாக்கி அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பார்க்கிறார் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X