என்னாச்சு சேரனுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ..? வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்!

தரையில் படுத்திருக்கும் சேரனின் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil Unseen : வெறித்தனம் Overloaded

சென்னை: தரையில் படுத்திருக்கும் சேரனுக்கு முகெனும், தர்ஷனும் முதலுதவி செய்வது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது வயதையும் பொருட்படுத்தாமல், இளவயது போட்டியாளர்களுடன் சரிக்கு சரி நின்று பிக் பாஸ் வீட்டில் போராடி வருகிறார் இயக்குநர் சேரன். இளவயது போட்டியாளர்கள் மட்டும் தான் டைட்டிலை வெல்ல வேண்டுமா, தன்னாலும் முடியும் என்பதை நிரூபிக்க அவர் முயற்சித்து வருகிறார்.

ஆனால் அவரது மனதிற்கு இருக்கும் வலிமை, சமயத்தில் அவரது உடலுக்கு இருப்பதில்லை. இதனால் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே அவர் கஷ்டப்பட்டு தான் வருகிறார். அதிலும் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருவதால், டாஸ்க்குகள் கடினமாக்கப்பட்டுள்ளன. எனவே, சேரன் உடல்ரீதியாக மிகவும் பாதிப்படைந்து வருகிறார்.

கடின டாஸ்க்குகள்

கடின டாஸ்க்குகள்

இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு உடல்ரீதியாக வருத்தும்படி டாஸ்க்குகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அனைவரும் சுற்றுலா வந்தது போல் ஜாலியாக இருக்கிறார்கள் என்ற புகார் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. தற்போது நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில், கடினமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

திணறும் சேரன்

திணறும் சேரன்

ஆனால், இதில் மற்ற ஆறு போட்டியாளர்களுக்கு இணையாக சேரனால் விளையாட இயலவில்லை. பலூன் உடைக்கும் டாஸ்க்கில் அவர் மிகவும் திணறினார். மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓடும் டாஸ்க்கிலும் முதல் ஆளாக வெளியேறினார். தங்க முட்டையை அடை காக்கும் டாஸ்க்கிலும் அவரால் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியவில்லை.

உடல்நலப் பிரச்சினை

உடல்நலப் பிரச்சினை

இதனால் அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. கால்களும் மரத்துப் போய் நடக்கமுடியாத நிலை உண்டானது. அதோடு நள்ளிரவில் முழித்தது, நீண்ட நேரம் தூங்காமல் இருந்தது என பல்வேறு காரணங்களால் அவரது உடல்நிலை கடுமையாக பாதித்தது. எனவே, வேறு வழியின்றி டாஸ்க்கில் இருந்து தானாக வெளியேறினார் சேரன்.

உதவி

உதவி

அவரை மற்ற போட்டியாளர்கள் கைத்தாங்கலாகத் தான் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். நேற்றும் அவர் முதுகுவலிக்கு பெல்ட் மாட்டிக் கொண்டு தான் டாஸ்க்கில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் கட்டிலில் படுக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு, தர்ஷனும், முகெனும் சேர்ந்து ஏதோ உதவி செய்தனர்.

ரசிகர்கள் பயம்

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் சேரன் இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாரே என அவரது ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். உடல்நலக் குறைபாடுகளால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விடுவாரோ என்ற பயமும் அவர்களுக்கு உள்ளது.

வெளியேறும் சேரன்?

வெளியேறும் சேரன்?

ஏனென்றால் இனி செல்லச் செல்ல பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் இன்னமும் கடினமாகும். இதையே சமாளிக்க முடியாமல் சேரன் கஷ்டப்படுகிறார். இனி அவற்றை எல்லாம் அவர் தாங்குவாரா என்றே தெரியவில்லை. அதனால் இந்த வாரம் சேரன் தானாகவே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X