Exclusive: " கவிலியா காதல்.. சேரன் செய்வது பச்சை அயோக்கியத்தனம், கேவலம்" சாரு நிவேதிதா செம காட்டம்

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 82 : Kavin friend visit BB House

சென்னை: சேரனை பற்றி கடுமையாக விமர்சித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா வெளியிட்ட பதிவை கவின் ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றனர்.

கவின் - லாஸ்லியா காதல் கதை தான் இணையத்தின் இப்போதைய ஹாட் டாபிக். லாஸ்லியா அப்பா வந்து செம டோஸ்விட்டப் பிறகு கவினுடனான காதலை முறித்துக்கொண்டார் அவர்.

இது பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. காதலை பிரிக்க ஏன் இப்படி பாடுபடுகிறார்கள் என பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

வசந்த பாலனின் பதிவு

வசந்த பாலனின் பதிவு

இதுகுறித்து இயக்குனர் வசந்த பாலன் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், கவின் - லாஸ்லியா காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அதை ஏன் சேரன் பிரிக்கப் பார்க்கிறார். தமிழகத்தில் காதலிப்பது இன்னமும் குற்றமாகப் பார்க்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

 சாரு நிவேதிதா காட்டம்

சாரு நிவேதிதா காட்டம்

இந்நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் சேரனை விமர்சித்து பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக் பாஸ் வீட்டில், லாஸ்லியா - கவின் விவகாரத்தில் சேரன் செய்வது அயோக்கியத்தனம், அராஜகம் எனவும், கேவலம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அயோக்கியத்தனம்

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "சேரனைப் போன்ற அராஜகப் பேர்வழியை நான் தினசரிகளில்தான் படித்திருக்கிறேன். அவருடைய (நிஜ) மகள் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார் என்ற செய்தி இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. தன் காதலைத் தடுத்து, தன் காதலனை மிரட்டுகிறார் என்றே அவர் புகார் கொடுத்தார். இப்போது அவர் லாஸ்லியா - கவின் விஷயத்தில் நடந்து கொள்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். கேவலம்", என குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த பதிவு?

ஏன் இந்த பதிவு?

ஏன் இந்த திடீர் கோபமான பதிவு என சாருவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அதற்கு அவர், "பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். கவின் - லாஸ்லியா செயல்பாட்டில் எந்த தவறும் இல்லை. சேரன் செய்வது தான் அராஜகம். தன் மகள் விவகாரத்தில் சேரன் நடந்துகொண்டது அனைவருக்கும் தெரியும். எனவே தான் இந்த பதிவை போட்டேன். இதற்காக அவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்", என்றார் காட்டமாக.

கவின் ஆர்மி

சாரு நிவேதிதாவின் இந்த பேஸ்புக் பதிவை கவின் ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றனர். இதன் மூலம் நாமினேஷனில் உள்ள கவினின் வாக்குகளை அதிகரிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே கவினின் நண்பர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று, பொளேர் என கவினை அறைந்த காட்சிகள் புரொமோவில் காட்டப்படுகின்றன. இதனால் கவின் மீது ஒரு சிம்பத்தி ஏற்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X