For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எல்லாமே மூன்றெழுத்தா இருக்கே.. சனிக்கிழமை சேவ் ஆனவங்க இவங்க தான்.. யார் யார் தெரியுமா?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ஒரு வழியாக எவிக்‌ஷன் படலம் வந்து விட்டது.

  இம்முறை முதல் வாரம் எவிக்‌ஷன் இல்லாதது போட்டியாளர்களுக்கு செம சந்தோஷத்தை கொடுத்தது.

  ஆனால், இதுக்கு மேல எவிக்‌ஷன் பண்ணலைன்னா, பார்க்குற பார்வையாளர்கள் டென்ஷன் ஆகிடுவாங்க என்பதை உணர்ந்து கொண்டு எவிக்‌ஷன் பற்றிய பேச்சுக்களையும் சனிக்கிழமை எபிசோடில் கமல் ஸ்டார்ட் பண்ணி அமர்களப்படுத்திட்டாரு.

  பிக் பாஸா.. ஓட்ட காசா.. இப்படி எல்லாமே லீக் ஆகுதே.. வைரலாகும் ரேகா எவிக்‌ஷன் மீம்ஸ்!

  சிகப்பு பெட்டி பச்சை பெட்டி

  சிகப்பு பெட்டி பச்சை பெட்டி

  தமிழ் சினிமாவில் காலம் காலமாகவே சிகப்பு ஒயரை கட் பண்ணா பாம் வெடிச்சிடும், பச்சை ஒயரை கட் பண்ணா தப்பிச்சிடலாம் என்பது போல, முதலாவதாக இந்த வாரம் சேவ் ஆன முதல் 3 பேர் பெயர்கள் பச்சைப் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தன. அதனை நம்ம அர்ச்சனா அக்கா தான் வந்து திறந்து பார்த்து அறிவித்தார்.

  மூன்றெழுத்து கொண்ட மூன்று பேர்

  மூன்றெழுத்து கொண்ட மூன்று பேர்

  நிகழ்ச்சியை நடத்தும் கமல் முதல் இந்த சீசனில் கலந்து கொண்ட ஏகப்பட்ட போட்டியாளர்களின் பெயர்கள் மூன்றெழுத்தில் உள்ள நிலையில், இன்று சேவ் ஆன மூன்று பேரும் மூன்றெழுத்து பெயர் கொண்டவர்கள் தான். என்னடா மூன்றெழுத்து படத்தில் வரும் வைரல் வசனம் போல ஷோ போகுதே என பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் பல்லைக் கடித்த சத்தமும் கேட்டன.

  அலாவுதீன் பூதமே இருக்கே

  அலாவுதீன் பூதமே இருக்கே

  இரண்டாவது வாரத்திலேயே வெளியேறிடுவோமான்னு பயந்துகிட்டு இருந்த ஆஜீத்துக்கு அலாவுதீன் பூதம் போல எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்தது. ஆனால், அது அவருக்கு முதல் எவிக்‌ஷனில் தேவைப் படவே இல்லை. அந்த மூன்று பச்சைப் பெட்டியில் இருந்த முதலாவது பச்சை பெட்டியிலேயே ஆஜித்தின் பெயர் இருந்து சேவ் ஆகி விட்டார்.

  ஷிவானி செல்லம் தான்

  ஷிவானி செல்லம் தான்

  அடுத்த பெட்டிக்குள் இருக்கும் பெயரை சொல்லிடாதீங்க, கொஞ்சம் ட்விஸ்ட் வச்சு சொல்லுங்க என சொன்னதும், மூன்றெழுத்து பெயர் என அர்ச்சனா வாய் கூட வராம கையால் சிக்னல் காட்டினார். பின்னர், ரசிகர்கள் கெஸ்ஸிங் படி நம்ம ஷிவானி செல்லம் சனிக்கிழமையே சேவ் ஆகி தனது படை பலத்தை நிரூபித்து விட்டார்.

  தலைவி ரம்யாவும் தப்பிச்சுட்டாரு

  தலைவி ரம்யாவும் தப்பிச்சுட்டாரு

  ஆஜீத்துக்கு எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை சகோதர பாசத்துடன் தூக்கிக் கொடுத்த தலைவி ரம்யா பாண்டியனையும் மக்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சிட்டாங்க, பின்ன மொட்டை பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி கண்ணுலயே விரலை விட்டு ஆட்டுனவங்களாச்சே இன்னும் நிறைய நாள் இந்த வீட்ல இருந்து கலக்குவாங்க.

  4 சிகப்பு பெட்டி எதுக்கு

  4 சிகப்பு பெட்டி எதுக்கு

  எப்படியும் ஒரு ஆள் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போறாங்க, அதுவும் நம்ம நடிகை ரேகா தான் என்று, ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் உறுதியாக கூறி மீம் எல்லாம் போட்டு விட்டனர். ஆனால், இப்போ திடீரென புது ட்விஸ்ட்டாக 4 சிகப்பு பெட்டிகள் எதுக்கு என்ற கேள்வி ரேகாவுக்கே வந்துடுச்சு.

  Anitha Suresh யிடம் சண்டை போட்டக் காரணம் • Bigg Boss 4 Tamil
  சூப்பரா சொன்ன சுரேஷ்

  சூப்பரா சொன்ன சுரேஷ்

  4 சிகப்பு பெட்டியில 4 பேர் பேரெல்லாம் இருக்காது ரேகாம்மா, ஒரே ஒரு பெயர் தான் இருக்கும், மத்ததெல்லாம் காலி பாக்ஸா தான் இருக்கும் என உள்ளே கேம் ஆடுற நம்ம மொட்டை பாஸே கரெக்ட்டா கணிச்சு சொன்னா, பிக் பாஸுக்கு அப்புறம் அந்த வீட்ல என்னதாங்க மரியாதை. சுரேஷ் சொன்னது தான் உண்மையா? இல்லை வேறு ஏதாவது ட்விஸ்ட் வைக்கிறாங்களான்னு பார்ப்போம்.

  English summary
  Bigg Boss Tamil 4 second weekend show was a rollercoaster ride. Aajeedh, Shivani and Ramya Pandian saved from eviction.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X