அனிதாவை காண்டாக்கிய சுரேஷ்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ்!
சென்னை : எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் மிக விறுவிறுப்பாக தொடங்கிய நாள் முதலே சென்று கொண்டு இருக்கிறது.
Recommended Video
சனம் ஷெட்டிக்கும் ஷிவானிக்கும் முதல் நாளே முட்டிக் கொள்ள அது பிக்பாஸ் ரசிகர்களை பரவசப்படுத்தியது.
இந்நிலையில் செய்திவாசிப்பாளர் அனிதா தனது பாணியில் பிக் பாஸ் வீட்டைப் பற்றி செய்தி வாசித்து காட்ட அதை கலாய்கின்ற தோனியில் சுரேஷ் பேசியது பிக் பாஸ் வீட்டுக்குள் இப்பொழுது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.

கலகலப்பாக செல்ல
அறந்தாங்கி நிஷாவின் கலக்கல் காமெடியில் முதல் நாள் பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக செல்ல இரண்டாம் நாளே ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கொண்டுள்ளது.

கடுப்பாகி உள்ளார்
எப்பொழுதும் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் சுரேஷின் பேச்சால் இப்பொழுது கடுப்பாகி உள்ளார்.

பிரமிப்புடன் ரசித்தவாறு
செய்தி வாசிப்பாளரான அனிதா பிக் பாஸ் வீட்டை குறித்து தனது பாணியில் செய்தி வாசிப்பில் கட கட கட வென பேசி காட்ட அதை மாற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிரமிப்புடன் ரசித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தனர்.

எச்சில் தெறிக்கும்
பிரச்சனைகளை விலைக்கு வாங்கும் வகையில் சுரேஷ் அனிதாவை பாராட்டியது போல் பாராட்டி விட்டு பொதுவாக செய்தி வாசிப்பாளர்கள் வணக்கம் சொல்லும்போது "எச்சில் தெறிக்கும்" என கூறியது அவரை காயப்படுத்தி இருந்தது.

லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்
எனினும் அந்த இடத்தில் அதை வெளிக்காட்டாது கிச்சனில் சுரேஷை கூப்பிட்டு அவர் சொன்ன வார்த்தைகள் தன்னை காயப்படுத்தி விட்டது என லெப்ட் ரைட் வாங்கிவிட்டார் அனிதா.

பிரச்சனை பூகம்பமாக
கடைசி வரையில் தனது தவறை ஒப்புக் கொள்ளாத சுரேஷ் தொடர்ந்து தன்னை நியாயப்படுத்த இப்பொழுது இந்தப் பிரச்சனை பூகம்பமாக வெடித்துள்ளது.

குறும்படம்
இதுமட்டுமல்லாமல் சுரேஷ் நான் பேசியதில் என்ன தவறு என தன்னை நியாயப்படுத்திக் கொண்டு பேச பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களையும் இந்த விஷயம் காண்டாக்கியுள்ள நிலையில், இந்த வாரம் குறும்படம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











