ப்பா எப்படி முறைக்குது அர்ச்சனா.. கமல் வச்சு விளாசியதும் கோபம் பொத்துக்கிட்டு வருதே.. தேவைதான்!

சென்னை: சனம் ஷெட்டி கத்திய உடனே என்னை ஏதுன்னு விசாரிக்காம, மன்னிப்பு கேளுங்க, மன்னிப்பு கேளுங்க என சுரேஷை கார்னர் பண்ணிய அர்ச்சனாவை நேற்றைய எபிசோடில் கமல் வச்சு விளாசினார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil | மனிதருக்கு மரியாதை குடுங்க • Sanam Suresh

நாட்டாமை பண்ணாதீங்கன்னு ஓப்பனா சொல்லாமல், ஆங்கரிங் பண்ணாதீங்க என மறைமுகமாக சாடினார் கமல்.

ஆனால், கமல் வச்சு விளாச தொடங்கியதும், தாங்கிக் கொள்ள முடியாமல், அர்ச்சனா முகம் மாறியதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கி விட்டனர்.

நாட்டாமைக்கு ரொம்ப அவசரம்

நாட்டாமைக்கு ரொம்ப அவசரம்

பிக் பாஸ் வீட்டின் நாட்டாமையாக நடந்து கொண்டு வருகிறார் அர்ச்சனா அக்கா, அவர் ஒரு தலை பட்சமாக நடக்கிறார் என்பதை அந்த வீட்டிலேயே பாலாஜி முருகதாஸ் மட்டுமே ஓப்பனா உடைச்சி சொல்கிறார். இந்நிலையில், நேற்றைய எபிசோடில், கமல் சாரும் சனம் அய்யோ அடிச்சிட்டான்னு கத்துணதும், மன்னிப்பு கேளு, மன்னிப்பு கேளுன்னு அர்ச்சனா பெயரை சொல்லாமல் விளாசத் தொடங்கினார்.

ஒரு நிமிஷம் அர்ச்சனா

ஒரு நிமிஷம் அர்ச்சனா

கமல் சார் அர்ச்சனா பேரை சொல்லாத நிலையில் அவங்களே வான்டட் ஆக குறுக்கிட்டு, சார் ஒரு நிமிஷன் சார் என கமல் முன்னாடியே ஒரு நிமிஷம் அர்ச்சனாவாக மாறி விட்டார். நான் உங்களை குறிப்பிட்டு சொல்லலையே எல்லாரும் தான் சுரேஷை டார்கெட் பண்ணாங்கன்னு, எல்லாருக்கும் ஒரு ஆப்பை அடித்து விட்டு அர்ச்சனாவுக்கு பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.

கோபம் பொத்துக்கிட்டு வருதே

கோபம் பொத்துக்கிட்டு வருதே

சனம் ஷெட்டி சொன்னதும், நான் அப்படியே சுரேஷ் சாரை டார்கெட் பண்ணல், நிஷாவை விசாரிச்சேன், ரம்யா பாண்டியனை விசாரிச்சேன் அப்புறம் தான் நாட்டாமை பண்ண ஆரம்பிச்சேன் என பொத்துக்கிட்டு வந்த கோபத்தை கொப்பளிக்கத் தொடங்கினார் அர்ச்சனா. சனம் ஷெட்டியை மன்னிப்பு கேட்க சொல்லலையே நாட்டாமை.. அதைத் தானே அவர் சொல்ல வராரு!

ஆங்கரிங் பண்ணாதீங்க

ஆங்கரிங் பண்ணாதீங்க

மேலும், ஜீ தமிழ் ஆங்கரான அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டிலேயும் ஆங்கராக இருக்கிறார் என்கிற மக்களின் குற்றச்சாட்டையே உலகநாயகனும் அர்ச்சனாவிடம் முன் வைத்தார். அதற்கும், ஒப்புக் கொள்ளாமல், நான் ஆங்கரிங்லாம் பண்ணல சார் என ரொம்பவே திமிர்த்தனமாக ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனாவை சோஷியல் மீடியாவில் வெளுத்து வருகின்றனர்.

விருமாண்டி கதை

விருமாண்டி கதை

கோபப்படுத்தியாச்சு, அப்படியே அவங்களை சமாதானம் படுத்தும் முயற்சியாக, விருமாண்டி கதையை சொல்ல ஆரம்பித்தார் கமல். விருமாண்டி படத்தை நான் தான் இயக்கினேன். எல்லாரையும் சரி பார்த்த நான், கடைசியில் என்னை சரி பார்க்கவே இல்லை. முதல் நாள் ஷூட்டிங் எல்லாம் முடிச்சுட்டு, ரஷ் பார்த்தா, இந்த ஆளை எங்கயோ பார்த்திருக்கேன்னு தோணுச்சு..

சாகேத் ராம்

சாகேத் ராம்

ஆஹா.. நான் எழுதின விருமாண்டி இல்லையே இவன், இவன் ஹேராம் படத்துல வர சாகேத் ராம் ஆச்சே என கமல் சொல்லும் போது, ஆமாம், எனக்கும் அப்படித் தான் தெரிஞ்சுது என அந்த ரஷ்ஷை அர்ச்சனாவும் பார்த்தது போல ரியாக்ட் பண்ணது எல்லாம் ரொம்பவே ஓவர். அதன் பிறகு, லீவெல்லாம் எடுத்துக்கிட்டு விருமாண்டியாக மாறி நடித்தேன் என்றார்.

அர்ச்சனாவுக்கு ஏறிச்சா

அர்ச்சனாவுக்கு ஏறிச்சா

கமல் சொன்ன விருமாண்டி கதை மொத்தமும் அர்ச்சனாவுக்குத் தான் என்பது அவரது மண்டையில கொஞ்சமாவது ஏறிச்சான்னே தெரியல.. முன்னாடி ஆரிக்கு அட்வைஸ் பண்ணாதீங்கன்னு கமல் டிப்ஸ் கொடுத்தாரு, அதை அவர் கடைசி வரை கேட்கலை, அதே போலத்தான் அர்ச்சனாவும் பண்ணுவாங்களா? இல்லை மறுபடியும் நாட்டாமை பண்ணுவாங்களான்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஒரே ஹேப்பி

ஒரே ஹேப்பி

முத்துப் பரலா.. மாணிக்கப் பரலா.. என்பதை கூட விசாரிக்காமல் அர்ச்சனா ஒரு தலை பட்சமாக தவறான தீர்ப்பு கொடுத்தார். வேல்முருகனிடம் விசாரித்து இருந்தாலே சனம் ஷெட்டியின் நாடகம் அம்பலமாகி இருக்கும் என கமல், அர்ச்சனாவின் போங்கு நாட்டாமைத் தனத்தை பற்றி கேட்டு விளாசியதை பார்த்த ரசிகர்கள் ஒரே ஹேப்பி ஆகிட்டாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X