தாத்தா.. தாத்தான்னு சொல்லியே இந்த சீசனை ஓட்டிடுவீங்க போல.. 3வது புரமோவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றிகரமாக 2வாரத்தை நிறைவு செய்யவிருக்கிறது.
தற்போது வெளியாகி உள்ள தாத்தா பாசம் நிறைந்த பிக்பாஸ் சீரியல் புரமோவை பார்த்த ரசிகர்கள், அதனை பங்கமாக ட்ரோல் பண்ணி ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
புரமோ வீடியோக்களை விட ரசிகர்களின் ரகளை தான் செம சுவாரஸ்யமா இருக்கு.
தாத்தா பேத்தி ஸ்க்ரிப்ட்
முதல் வாரத்தை ஹார்ட் பிரேக் வைத்து ஓட்டிய நிலையில், இரண்டாவது வாரத்துக்கான ஸ்க்ரிப்ட் தாத்தா பேத்தி ஸ்க்ரிப்ட்டா என ரசிகர்கள் மூன்றாவது புரமோவை பார்த்து கேள்வி கேட்டு வருகின்றனர். என்னதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஓட்டினாலும், அதை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இந்த சீசன் முழுவதும்
மொட்டை தாத்தா சுரேஷுக்கு போட்டியா அனிதா டஃப் கொடுப்பாங்க, ரேகா டஃப் கொடுப்பாங்கன்னா யாருமே இதுவரை அவருக்கு ஈடாக இல்லை. புதுசா வந்த அர்ச்சனா, முதல் நாளே நமத்துப் போன பட்டாசு பட்டத்தை சனம் ஷெட்டி கழுத்தில் இருந்து வாங்கி மாட்டிக்கிட்டாங்க, இந்நிலையில், இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், இந்த சீசன் முழுவதும் தாத்தாவை சுற்றித்தான் கதை நகரும் போல இருக்கே என நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.
லாஸ்லியா புரமோவை பீட் பண்ணும்
இப்போ வெளியாகி உள்ள சுரேஷ் மற்றும் கேபி புரமோ, கடந்த சீசனில் ஒளிபரப்பான லாஸ்லியா மற்றும் அவரது தந்தையின் புரமோவை பீட் பண்ணி புது ரெக்கார்ட்டை க்ரியேட் பண்ணும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். ஆனால், சிலர், அந்த அளவுக்கு இல்லை, வேண்டும் என்றால் பின்னாடி பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளனர்.
சுரேஷ் சார் ஒரு நல்ல பாடம்
பிக் பாஸ் தமிழ் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள சுரேஷ் சக்கரவர்த்தியை வெறுத்தாலும் நேசித்தாலும் அவர் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகவும், பாடமாகவும் உள்ளது என தெய்வத்திருமகள், விஸ்வாசம் போட்டோக்களை போட்டு பாராட்டி உள்ளார். இந்த சீசனில் மற்ற போட்டியாளர்களை பார்க்கும் போது இவர் தான் இப்போ ஹீரோவாக தெரிகிறார்.
ஆவுன்னா எதுக்குடா
சுரேஷ் சக்கரவர்த்தி, கேபி டாஸ் பத்தி பேசும் போது எதுக்கு தேவையில்லாம லவ் பிஜிஎம் போடுறீங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த ரசிகர் கொஞ்சம் ஓவராக டென்ஷன் ஆகி, ஆவுன்னா எதுக்குடா லவ் பிஜிஎம் போடுறீங்க என அடிப்பது போன்ற போட்டோவை போட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஹீரோவான வில்லன்
இந்த மொட்ட பாஸ் வில்லன் இப்போ ஹீரோவாகிட்டாரு, கடுப்பை கிளப்பும் ரியோ ராஜ் மற்றும் அனிதா ஜூலி பார்ட் 2 போல மாறிட்டாங்க என இந்த நெட்டிசன் மரண பங்கமாக ஓட்டியுள்ளனர். மேலும், சிலர் இந்த நிஜமாவே ரியாலிட்டி ஷோன்னா சுரேஷ் சார் தான் டைட்டில் வின்னர் என்றும், ஆனால், நீங்க அவருக்கு டைட்டில் கொடுக்க மாட்டீங்க என்றும் ஓப்பனாக கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











