நடிகை ரேகாவிடம் ஆஜீத் வாங்கிய முத்தம்.. மீம் போட்டு பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்.. இது வேற லெவல்!

சென்னை: சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலந்து கொண்டு கலக்கிய ஆஜீத், இப்போ பிக் பாஸ் வீட்டிலும் கலக்கி வருகிறார்.

பெருசா பிரச்சனைகளில் ஏதும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் அவருக்கு நடிகை ரேகா கொடுத்த முத்தக் காட்சி வைரலாகி வருகிறது.

அதை பார்த்த நம்ம மீம் கிரியேட்டர்ஸ் சும்மா இருப்பங்களா? வச்சு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

கடைசியாக

கடைசியாக

கடந்த அக்டோபர் 4ம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழாவில் இறுதியாக 16வது போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார் சூப்பர் சிங்கர் ஆஜீத். வேல் முருகன் நாட்டுப்புற பாடல்களை பாட, ஆஜீத் நியூ சாங்ஸ் பாடி ரசிகர்களையும், ஹவுஸ் மேட்ஸையும் கவர்ந்து வருகிறார்.

குட்டி பாபி சிம்ஹா

குட்டி பாபி சிம்ஹா

வீட்டுல இருக்கிற இடமே தெரியாம சாமர்த்தியமா கேம் விளையாடினாலும், மீம் கிரியேட்டர்கள் கண்களில் இருந்து சூப்பர் சிங்கர் ஆஜீத் அவ்வளவு எளிதாக தப்பி விடவில்லை. குழந்தையாக பார்த்த ஆஜீத்தை இப்போ இளைஞனாக பார்த்த நிலையில், அவர் பார்க்க அப்படியே குட்டி பாபி சிம்ஹா மாதிரி இருக்கார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஷிவானி அக்கா

ஷிவானி அக்கா

பிக் பாஸ் போட்டியாளராக மாறி உள்ள ஆஜீத், தன்னை விட சின்ன வயசு பொண்ணான சீரியல் நடிகை ஷிவானியை பார்த்து அக்கா என சொன்னதையும் மீம் க்ரியேட்டர்கள் ஓட்டினார்கள். அடப்பாவி அவ உன்னைவிட 2 வயசு சின்னப் பொண்ணுடா என மீம் போட்டு கலாய்த்துத் தள்ளினர்.

ரேகா கொடுத்த முத்தம்

ரேகா கொடுத்த முத்தம்

தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் போர் அடிக்கும் போது ஆஜீத்தை பாட சொல்லி கேட்டு வருகின்றனர். அப்படி ஆஜீத் பாடியதை கேட்டு மெச்சிய நடிகை ரேகா அவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில், அம்மா மகனுக்கு கொடுத்தது போன்ற முத்தத்தையும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

அம்பியான ஆஜீத்

அம்பியான ஆஜீத்

நடிகை ரேகா ஆஜீத்துக்கு முத்தம் கொடுத்த காட்சியை போட்டு, என்னடா பாட்டு பாடி கேபியை கரெக்ட் பண்ண பாக்குறியா என அந்நியன் படத்தில் அம்பியை பார்த்து விவேக் கேட்பது போல மீம் போட, அதற்கு பதிலாக, இல்லை நான், ரேகா மேடமை கரெக்ட் பண்றேன் என ஆஜீத் சொல்வது போல போட்டு கலாய்த்துத் தள்ளி உள்ளனர்.

Recommended Video

BIGG BOSS S4 TROLL | FILMIBEAT TAMIL
ஆஜீத்துக்கு பிடிக்கவில்லை

ஆஜீத்துக்கு பிடிக்கவில்லை

மேலும், பிக் பாஸ் வீட்டில் செல்லக் குட்டி, புஜ்ஜுக்குட்டி என நடிகை ரேகா பேசி வருவதை விமர்சித்துள்ள பிக் பாஸ் ரசிகர்கள், டேபிள் க்ளீன் பண்ண சொல்லி ஆஜீத்தை ரேகா வேலை வாங்கியது பிடிக்காமல் தான் அவருக்கு புரோக்கன் ஹார்ட் கொடுத்தார். முத்தம் கொடுக்கும் போதும், ஆஜீத் அதை விரும்பவில்லை என கிளப்பி விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X