யாருங்க அவரு? பிக் பாஸ் தமிழ் 4ல் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துல நடிச்ச நடிகர் இருக்காரு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலம் சூர்யாவின் சூரரைப் போற்று படத்திலும் நடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசனின் 3ம் நாள் புரோமோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன.
அனிதா அடுத்த வனிதாவா? இல்லை சுரேஷ் சக்கரவர்த்தியா? என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

சூரரைப் போற்று படத்தில்
இந்த சீசன் பிக் பாஸ் தமிழ் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் நடிகர் சூர்யா நடிப்பில் வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ள தகவல் லீக்காகி உள்ளது. அந்த பிரபலம் யார் என ரசிகர்கள் ஆவலுடன் தேடி வருகின்றனர்.

யார் அந்த பிரபலம்?
பிக் பாஸ் வீட்டுக்குள் பத்தாவது போட்டியாளராக நுழைந்த சோமசேகர் தான் அந்த பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. MMA என அழைக்கப்படும் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் ஜாம்பவனான இவர், ஏகப்பட்ட விளம்பர படங்களிலும், சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இவர் நடித்துள்ள காட்சியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சிக்கி உள்ளார் தலைவர்.

கேப்ஷனில் சூர்யா டேக்
ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் என குறிப்பிட்டு IAF அதிகாரி வேடத்தில் நடித்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சோமசேகர், அதற்கு கேப்ஷனாக கொடுக்கும் இடத்தில் நடிகர் சூர்யாவையும் டேக் செய்துள்ளார். இதன் மூலம், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் இவரும் நடித்துள்ளது அம்பலமாகி உள்ளது.

டீ விளம்பரம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான உதய கிருஷ்ணா நெய் விளம்பரத்தில் ஆடி பாடி நடித்துள்ள இவரை பிக் பாஸ் ரசிகர்கள் தோண்டி துருவி கண்டுபிடித்து வருகின்றனர். நெய் விளம்பரம் மட்டுமின்றி ப்ரூக் பாண்ட் த்ரி ரோசஸ் விளம்பரத்தில் நடிகை ரெபா மோனிகா ஜான் உடன் இணைந்து நடித்துள்ள புகைப்படத்தையும் ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

லவ் பண்ணலாம்
30 வயதாகும் சோமசேகர் இந்த பிக் பாஸ் வீட்டில் யாரையாவது லவ் பண்ணும் காட்சிகள் இடம்பெறும் என்றே தெரிகிறது. அனிதா சம்பத்திடம் உங்களை ட்ரிகர் பண்றாங்க என இன்றைய புரமோவில் சீன் போட ஆரம்பித்துள்ள இவருக்கு, அவர் திருமணம் ஆனவர் என்கிற உண்மை தெரியுமா? தெரியாதா? என்றும் ரசிகர்கள் கேட்டு பங்கம் பண்ணி வருகின்றனர்.

வாய்ப்பில்லை
வரும் அக்டோபர் 30ம் தெதி சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள நிலையில், தான் நடித்த படத்தை சோமசேகரால் பார்க்க முடியாது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரே அந்த படத்தை அவர் பார்க்க வாய்ப்புகள் உருவாகும் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. இன்னும் பிக் பாஸ் பிரபலங்கள் என்ன என்ன செய்துள்ளார்கள் என்பதை ஒவ்வொன்றாக தேடி கண்டுபிடிப்போம்.


Click it and Unblock the Notifications











