ஷிவானி எங்கே காணோம்.. ஜோடி ஜோடியா நிற்கும் பிக் பாஸ் பிரபலங்கள்.. வைரலாகும் கொண்டாட்ட போட்டோ!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

Recommended Video

பிக்பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்… ஷிவானி மட்டும் மிஸ்ஸிங்.. கவலையில் ரசிகர்கள்…

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோமசேகர், சம்யுக்தா, ஆஜீத் மற்றும் கேபி ஜோடி ஜோடியாக நிற்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

இந்த குரூப்பில் ஷிவானி நாராயணன் எங்கே காணோம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் கொண்டாட்டம்

பிக் பாஸ் கொண்டாட்டம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கடந்த ஜனவரி 17ம் தேதி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் கோலாகலமாக முடிவடைந்தது. அதன் பின்னர் நடந்த பார்ட்டி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. கவின் மற்றும் லாஸ்லியாவும் பார்ட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

ஜோடி ஜோடியாக

ஜோடி ஜோடியாக

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிக் பாஸ் பிரபலங்களான பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோமசேகர், சம்யுக்தா, ஆஜீத் மற்றும் கேபி ஜோடி ஜோடியாக நிற்கும் போட்டோ வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த போஷ் கேங்கும் உள்ளனர் என்றும், அன்பு கேங்கில் உள்ள இருவரும் இதில் இடம்பெற்றுள்ளனர் என்றும் கூறி வருகின்றனர்.

சோம்யா

சோம்யா

அந்த புகைப்படத்தில் ஜோடியாக நிற்கும் சோமசேகர் மற்றும் ரம்யா பாண்டியனின் போட்டோவை மட்டும் கட் செய்து, சோம்யா ஹாஷ்டேக்கை உருவாக்கி சோம் மற்றும் ரம்யா ஆர்மியினர் இது போதும் எங்களுக்கு என ஜோடி சேர்த்து வருகின்றனர். போகிற போக்கை பார்த்தால், சோமசேகரும் ரம்யாவும் ரியலாவே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பாங்க போல?

ஷிவானி எங்கே

ஷிவானி எங்கே

கேபியுடன் ஆஜித், ரம்யாவுடன் சோம் ஜோடி போட்டு நிற்கும் நிலையில், பாலாஜி முருகதாஸ் சம்யுக்தாவுடன் ஜோடி போட்டு நிற்கிறார். மேலும், மற்றொரு பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படத்தில், ஆரி, சனம் மற்றும் அனிதா உள்ளனர். ஆனால், ஷிவானியை காணவே இல்லை. இதனால், பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கு கூட ஷிவானி நாராயணன் வரவில்லையா என்ன ஆச்சு என அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

செம டான்ஸ்

கோட் ஷூட் அணிந்திருக்கும் ரம்யா பாண்டியன் மற்றும் சம்யுக்தா இணைந்து பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோவும் செம வைரல் ஆகி வருகிறது. சீக்கிரமே விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டத்தை போடுங்கடா வெயிட்டிங்கிலேயே வெறி ஏறுது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X