வெறித்தனம் பாட்டுக்கு செம குத்து குத்திய ஹவுஸ் மேட்ஸ்.. பிக் பாஸ் ஓப்பனிங்கே செம அமர்களம்!

சென்னை: ஐயா ஜாலி சனிக்கிழமை வந்துடுச்சு.. கமல் சார பார்க்கலாம் என பிக் பாஸ் பார்க்க விஜய் டிவி முன் ரசிகர்கள் ஆஜர் ஆகி உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் ஒரு பக்கம் ஓடினாலும், இன்னைக்கும் மொக்கை தான் போடுவாங்க, பிக் பாஸ் வைடா என அம்மா மண்டை மேலயே அடித்து ரிமோட் பிடுங்கும் காட்சிகளும் நடந்து வருகின்றன.

எதிர்பார்த்தபடியே உலகநாயகன் கோட் சூட் மாட்டிக் கொண்டு, ஞாபகம் வருகிறதா? என்ற இன்ட்ரோ பாடலுடன் என்ட்ரி கொடுத்தார்.

கமல் என்ட்ரி

கமல் என்ட்ரி

உப்பு போட்டு சாப்டுறேன்னு சொன்னவர் எல்லாம் உள்ளே இருக்காங்க, தேர்ந்தெடுக்காம தலைவர் ஆனவங்க சும்மா இருக்காங்கன்னு வழக்கம் போல அரசியலையும், பிக் பாஸ் போட்டியாளர்களையும் கலந்து கட்டி கமல் பேசி என்ட்ரி கொடுத்தார். வெள்ளிக்கிழமை என்ன ஆச்சுன்னு பாருங்க என பிக் பாஸ் வீட்டை காட்ட, அனிதா, வேல் முருகன், ரம்யா எல்லாம் செம காமெடியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

வெறித்தனம்

வெறித்தனம்

சட்டென மியூசிக் போட்டு பாட்டு போட்ட உடன் அனிதா எக்ஸர்சைஸ் பண்ணுவதை விட்டுவிட்டு, ஆட ஆரம்பித்து விட்டார். தளபதி விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் பாடலுக்கு, ஹவுஸ்மேட்ஸ்களான அனைவரும் ஆஜராகி ஆடத் துவங்கினார்.

ரம்யா பாண்டியன் செம குத்து

ரம்யா பாண்டியன் செம குத்து

இந்த முறை அனிதா, ஷிவானி நாராயணன் நடனத்தை எல்லாம் ஓவர் டேக் செய்து விட்டு, தலைவி ரம்யா பாண்டியன் செம குத்து குத்தி நடனமாடியதை பிக் பாஸ் வீட்டு கேமராக்கள் வேற லெவலில் ஜூம் செய்து காட்டி பிக் பாஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்தாது. சனம் ஷெட்டி, கேப்ரில்லா, எல்லாம் தங்களுக்கு தெரிந்த ஸ்டெப்களை போட்டு ஆடி முடித்தனர்.

வாத்தி கம்மிங்

வாத்தி கம்மிங்

பிக் பாஸ் வீட்டின் முதல் நாளில் தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்கப்பட்டு, பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் செம குத்தாட்டம் போட்டனர். வார இறுதி நாளான நேற்று பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு போட்டியாளர்கள் நடனமாடி அசத்தி உள்ளனர். சமூக வலைதளங்கள் எல்லாம் விஜய் ரசிகர்கள் அது பற்றிய பதிவுகளை பதிவிட்டு, இன்னும் அஜித் பாட்டே போடலையே என சண்டை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X