twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ச்சே எவ்ளோ கேவலம்.. 60 நாள்ல என்ன பண்ணேன்னு சொல்லவே தெரியல.. இவங்களாம் டைட்டிலுக்கு ஆசைப்படுறாங்க?

    |

    சென்னை: ஹேர் ஸ்டைல் பண்ணி விட்டுருக்கேன், பஸர் எப்போ அடிப்பீங்க என மூன்றாவது புரமோவில் பிக் பாஸிடம் போட்டியாளர்கள் அசடு வழிவதை பார்த்தாலே இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்று தெரிகிறது.

    முதல் இடம் வேண்டும், இரண்டாவது இடம் வேண்டும், டைட்டில் வின் பண்ண ஆசை என பேச தெரியும் இவர்களுக்கு கடந்த 60 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் என்ன செய்தார்கள் என்று சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம் என்று தான் தெரியவில்லை.

    ஏதாவது உருப்படியா செய்திருந்தால் தானே சொல்வார்கள் என ரசிகர்களும் விளாசி வருகின்றனர்.

    இந்தியாவின் முதல் செங்குத்து காடு கட்டிடத்தை பாருங்கள்

    60 நாட்கள் என்ன பண்ணீங்க

    60 நாட்கள் என்ன பண்ணீங்க

    50 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பா விளையாடாதீங்க, தனித்துவத்தை காட்டுங்கன்னு கமல் படிச்சு படிச்சு சொல்லிட்டு போனாரு, ஆனால், 60 நாட்கள் ஆகியும் பிக் பாஸ் வீட்டில் பலரும் ஆயம்மா வேலையையும், ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்கும் வேலையையும் செய்து வருகின்றனர்.

    பெண்டு நிமிர்த்தல

    பெண்டு நிமிர்த்தல

    60 நாட்களா பிக் பாஸ் வீட்டில் இத்தனை மிக்சர் தின்னிகளை ஏன் வச்சிருக்கீங்க, நீங்க என்ன பண்ணீங்க பிக் பாஸ் என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பேசுவதை தடுக்கவும் இல்லை. சவாலான போட்டிகளையோ, மைண்ட் கேம் போட்டிகளையோ போட்டியாளர்களுக்கு கொடுக்காமல் நல்லா சேஃப் கேம் ஆட விட்டு விட்டார்.

    பாவம் ரசிகர்கள்

    பாவம் ரசிகர்கள்

    இன்றைய மூன்றாவது புரமோவில் சுவாரஸ்யமே இல்லாமல் விளையாடி வரும் நபர்களாக டார்கெட் பண்ணியே பிக் பாஸ் எடிட்டர் புரமோ போட்டுள்ளார் என்கிற பேச்சுக்களும் எழுந்துள்ளன. 60 நாட்கள் அப்படி என்ன பிக் பாஸ் வீட்டில் கிழிச்சிட்டீங்கன்னு ரசிகர்களுக்கு சொல்லுங்க, தினம் தினம் ஏதாவது சுவாரஸ்யமா இருக்குமா? என எதிர்பார்த்து ஏங்குபவர்கள் அவர்கள் தானே என ரசிகர்களிடம் கோர்த்து விட்டுள்ளார் பிக் பாஸ்.

    தலை குனிந்த கேபி

    தலை குனிந்த கேபி

    புரமோவின் ஆரம்பத்திலேயே சோமசேகர், நிஷா, ரம்யா பாண்டியன், கேபி, ஷிவானி, ஜித்தன் ரமேஷை மட்டுமே காண்பித்து, இந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என அனிதா வாய்ஸ் ஓவரில் புரமோ ஓடியது. கேபியிடம் கேட்கும் போது, "பிக் பாஸ்" என அப்படியே தலை குனிந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

    எதுக்கு கேட்டீங்க பிக் பாஸ்

    எதுக்கு கேட்டீங்க பிக் பாஸ்

    வெறும் பிக் பாஸ் வீட்டில் நடனம் ஆடிக் கொண்டு, ரியோ, சோம், ஆஜீத்துடன் ஜாலியாக அரட்டை அடிப்பதையே வேலையாக செய்து கொண்டு இருக்கும் கேபியால் பதில் சொல்ல முடியவில்லை. அவரை தொடர்ந்து அந்த ஸ்பெஷல் சேரில் உட்காரும் ஆஜீத், எதுக்கு கேட்டீங்க பிக் பாஸ் என்று உடல் நடுங்குகிறார். பாலாவுக்கு மைக் எடுத்துட்டுப் போய் தரேன், கமல் சாருக்கு பர்த்டே சாங் பாடினேன்னு சொல்லேன் பா! என ரசிகர்கள் ரகளை செய்கின்றனர்.

    டைம் கேட்கும் ரமேஷ்

    டைம் கேட்கும் ரமேஷ்

    ஏற்கனவே 60 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வைத்ததே பெரிய டைம் தான். இதில், கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா பிக் பாஸ் என யோசிக்க ஆர்மபித்து விட்டார் ஜித்தன் ரமேஷ். இதுல இவரு, நிஷா, ரியோ கூட ஃபைனலுக்கு போகணும்னு ஆசை வேற படுறாரு.. என்ன சொல்லப் போறாரோ!

    நெளியும் ரம்யா

    நெளியும் ரம்யா

    ரம்யா பாண்டியன் டைட்டில் வின்னர், சிரிச்சிக்கிட்டே ஊசி போடுறாங்க, சைலன்ட் கில்லர் என ஏகப்பட்ட பில்டப்புகள் கிளப்பி விட்டாங்க, சுரேஷ் சக்கரவர்த்திக்கு அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்காமல் செய்ததை தவிர வேறு எதுவும் பெருசா செய்யல.. அப்பவே சுரேஷ் தாத்தாவுக்கு கிடைத்திருந்தால், அந்த வாரமே ஆஜீத் வெளியேறி இருப்பார்.

    ஹேர்ஸ்டைல் பண்ணி விட்ருக்கேன்

    ஹேர்ஸ்டைல் பண்ணி விட்ருக்கேன்

    60 நாள்ல எவ்ளோவோ சண்டை போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுத்த அனிதா சம்பத் கமல் சாரை கூட விடாமல் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், ரொம்ப நக்கலாக பிக் பாஸ் நான் நிறைய பேருக்கு ஹேர்ஸ்டைல் பண்ணி விட்ருக்கேன் என அவர் பேசியதும், இந்த மாதிரி பேசுவதற்கு வேற வாய்ப்பு தரப்படும் என பிக் பாஸ் நடு மண்டையிலேயே நறுக்கென குட்டு வைத்துள்ளார்.

    பஸர் எப்போ அடிப்பீங்க

    பஸர் எப்போ அடிப்பீங்க

    பாலாவுக்கு ஊட்டி விட்டு, என்டர்டைன் பண்ணும் வேலையை 60 நாட்களாக பண்ணி வரும் ஷிவானி நாராயணன், எந்த பதிலும் சொல்லாமல், பஸர் எப்போ அடிப்பீங்க என கேட்பது எல்லாம் ரொம்பவே கேவலம். எந்த போட்டியாளரும் போட்டியை ஒழுங்கா விளையாடாமல் பஸர் அடித்தவுடன் தப்பித்துக் கொள்ளவே இந்த சீசனில் பார்க்கிறாங்க, பிக் பாஸும் ஏதும் செய்ய முடியாமல் முழித்து வருகிறார். இருக்கு, இன்னைக்கு என்டர்டைன்மெண்ட் இருக்கு!

    English summary
    Bigg Boss Tamil 4 Day 61 promo 3 out now. Bigg Boss contestants struggling to answer for what they done in past 60 days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X