For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பலே பிக் பாஸ் தேவா.. இன்னைக்கு எல்லாரும் டரியல் ஆகப் போறாங்க போல.. இம்சை அரசனான ரியோ!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோக்கள் எல்லாம் வெளியாகி வைரலாகி வருகின்றன.

  Bigg Boss Tamil Season 4 Day 15 Highlights | Nominations

  முதலாவது புரமோவில் இன்றைய நாடக டாஸ்க் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது.

  அரச குடும்பத்துக்கும் அரக்கர்கள் குடும்பத்திற்குமான போட்டியாக இன்றைய நிகழ்ச்சி களைகட்டப் போகிறது என்பது புரமோவிலே தெரிகிறது.

  நான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும் கண்ணீர்விட்ட அனிதா!

  இம்சை அரசனான ரியோ

  இம்சை அரசனான ரியோ

  விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ரியோவை வச்சு எந்த அளவுக்கு இந்த சீசன் பிக்பாஸை ஓட்ட முடியுமோ ஓட்ட நினைத்து விட்டார்கள் போல. இன்றைய எபிசோடிலும், மீசையை எடுத்து, இம்சை அரசன் கெட்டப்பில் கலக்குகிறார் ரியோ. அவரை மொட்டை சுரேஷ், பாத்ரூம் ஏரியாவிலேயே ஓட்டுவது எல்லாம் சரியான லூட்டி.

  குரங்கு மாதிரி

  குரங்கு மாதிரி

  நடிகர் ரியோ, மீசையை மொத்தமாக வழித்து விட்டபடியே, மீசை எல்லாம் எடுத்தா நான் குழந்தை மாதிரி மாறிடுவேன் டா என்கிறார். ஆனால், அவரை பார்த்த ஆடியன்ஸ்கள் எல்லாம் குழந்தை மாதிரி இல்ல குரங்கு மாதிரி இருக்கீங்க என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஃபன்னாக பேசி வந்த ரியோ, இப்போ சீரியஸ் ஆக மாறி இருப்பது ரசிகர்களுக்கு எரிச்சலை கிளப்பி வருகிறது.

  பாடி காட்டிய பாலாஜி

  பாடி காட்டிய பாலாஜி

  பனியன் கூட அணியாமல் ஒட்டுமொத்த பாடியையும் காட்டி புரமோவிலே இளம் பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு செம ஹாட்டாக தனது சிக்ஸ் பேக் பாடியை காட்டி அசத்துகிறார் பாலாஜி முருகதாஸ். ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட உடைகளை அணிந்து கொண்டு ஃபேஷன் டிரெஸ் காம்படிஷனுக்கு ரெடியாவது போல ஆகி வருகின்றனர்.

  டெவில் ஷிவானி

  டெவில் ஷிவானி

  புரமோவில் ஒரே ஒரு ஷாட் காட்டப்பட்டாலும், ஷிவானி நாராயணனின் அந்த பிளாக் டிரெஸ் டெவில் லுக்கை பார்த்துத் தான் ரசிகர்கள் மயங்கி விழுகின்றனர். இன்றைய ஷோவிலாவது நல்லா பர்ஃபார்ம் பண்ணுமா ஷிவானி என அவரது ரசிகர்கள் புரமோவை பார்த்த நொடியில் இருந்து கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர்.

  அய்யய்யோ இதை எப்படி நாம சொல்றது

  அய்யய்யோ இதை எப்படி நாம சொல்றது

  ரியோ ராஜுக்கு அடுத்ததாக செம அட்டகாசமாக மேக்கப் போட்டு இருப்பது நம்ம எமகாதக மொட்டை பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி தான். அதிலும், பாத்ரூம் ஏரியாவில், ரியோ ஷேவ் பண்ணுவதை பார்த்து, "அய்யய்யோ இதை எப்படி நாம சொல்றது" என செம டோனில் சுரேஷ் கலாய்ப்பது வேற லெவல்.

  என்ன டாஸ்க்

  என்ன டாஸ்க்

  ராஜ குடும்பத்தை அரக்கர்களும், அரக்கிகளும் என்னதான் தொந்தரவு செஞ்சாலும், எந்தவொரு ரியாக்‌ஷனும் காட்டாமல், அப்படியே சிலையாக இருக்கணும், என இன்றைய டாஸ்க் குறித்த கண்டிஷனை படித்த ரியோவுக்கு இன்னைக்கு சிறப்பான சம்பவம் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் இருந்து இருக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

  English summary
  Devil vs Good character drama task in today Bigg Boss Tamil season 4. Rio Raj changed as Imsai Arasan and Suresh Chakaravarthy troll him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X