For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன எடிட்டர்.. புரமோவிலே எலிமினேஷன் யாருன்னு காட்டிட்டீங்க? இன்னைக்கு இவர் தான் ஜோசியக்காரர்!

  |

  சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பதை முதல் புரமோவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

  இதுல என்ன சர்ப்ரைஸ் இருக்கு அதான் வெள்ளிக்கிழமையே லீக் ஆகிடுச்சேன்னு ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  பிக் பாஸ் எவிக்‌ஷனில் இவ்வளவு பெரிய ஓட்டை இருப்பதை எப்போது தான் அவர்கள் சரி செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

  கொரோனா காரணமா..? பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய அந்த பிரபலம்.. ரசிகர்கள் வியப்பு!

  முதல் புரமோ வந்துடுச்சு

  முதல் புரமோ வந்துடுச்சு

  சனி மற்றும் ஞாயிறுகளில் முதல் புரமோ எப்போ வரும் எப்படி வரும் என தெரியாது. ஆனால், வர வேண்டிய நேரத்துக்கு கண்டிப்பா வந்து விடும். அது போல, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அட்டகாசமான முதல் புரமோ வந்துடுச்சு. கமல் வரும் போதே, கையில் எவிக்‌ஷன் லிஸ்ட்டை எடுத்துட்டு வருவது செம சூப்பர்.

  தப்பித்த தங்கங்கள்

  தப்பித்த தங்கங்கள்

  சனிக்கிழமை எபிசோடில் சனம் ஷெட்டி முதலில் சேவ் ஆனார். அதனை தொடர்ந்து, ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ், பாலா உள்ளிட்டோர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதில்லை என கமல் அதிரடியாக அறிவித்து அந்த தங்கங்களை தப்பிக்க வைத்தார்.

  5ல் ஒன்று

  5ல் ஒன்று

  மொத்தம் 11 பேர் எவிக்‌ஷன் லிஸ்ட்டில் இம்முறை நாமினேட் செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை அன்று 6 பேர் வெளியே போக வில்லை என்பதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மீதமுள்ள 5 பேரில் ஒருவர் இன்று வெளியேற உள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், நிஷா, ஆஜீத் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேரில் ஒருவர் இன்று வீட்டை விட்டு கிளம்புகிறார்.

  கத்தியை திருப்பிய கமல்

  கத்தியை திருப்பிய கமல்

  இரண்டாவது வாரம் ரேகா வெளியே போவாங்க என ஆருடம் சொல்லி பிக் பாஸ் வீட்டின் குட்டி ஜோசியர் ஆன ஆஜீத்திடம் இந்த வாரம் யார் வெளியே போறாங்க ஆருடம் சொல்லுங்க என்றதும், போன வாரமே நம்மள அனுப்பினாங்க, எவிக்‌ஷன் பாஸ் வேற இல்லை என பயந்து நடுங்க, எச்சி முழுங்குறாரே வேல்முருகன் என கத்தியை அந்த பக்கம் திருப்பினார்.

  புது ஜோசியர்

  புது ஜோசியர்

  எனக்கென்னவோ நான் தான் இந்த வாரம் வெளியே போவேன்னு நினைக்கிறேன் சார் என வேல்முருகன் சொல்ல, இப்போ நீங்க ஜோசியர் ஆகிட்டீங்களா, கன்ஃபார்மாகவேவா என கேட்டு விட்டு, அதையும் தாண்டி புனிதமானது என கமல் சொல்லும் போதே, வேல்முருகன் வெளியேறுவது உறுதியாகி விட்டது.

  எடிட்டர் பார்த்த வேலை

  இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியே போறாங்கன்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க என கடைசி ஸ்லைடில் எடிட்டர் தனது வேலையை காட்டி, டோர் திறந்து வெளியே போகும் காட்சியை புரமோவிலே வைத்து விட்டார். அந்த கூட்டத்தில் வேல்முருகன் இல்லாததை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அவர் தான் போகிறார் என்பதை உறுதி செய்து விட்டனர். அந்த காட்சியில் கோட்டை கழட்டி விட்டு வெயிஸ்ட் கோட்டுடன் நிற்கும் ஆஜீத் தெளிவாக தெரிவதாலும், சுரேஷ், நிஷா, சோம் இருப்பதாலும், வேல்முருகன் வெளியேறியது உறுதியாகி உள்ளது.

  ரொம்ப லீக் ஆகுதே

  ரொம்ப லீக் ஆகுதே

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு யார் போட்டியாளராக வரப் போகிறார். இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்குமா? இருக்காதா? யார் வெளியே போக போகிறது என அனைத்துமே முன் கூட்டியே கசிந்து விடுகிறது. இது லைவ் நிகழ்ச்சி அல்ல என்பதால், அந்த ஒரு பிரச்சனை பெருசாவே இருக்கு. ஆனாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் இதனை விரைவிலேயே சரி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

  English summary
  Bigg Boss Tamil 4 Day 28 Promo 1 revealed the elimination secret. Already leaked information about Velmurugan elimination is confirmed.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X