மொட்டை பாஸ் இஸ் பேக்.. எல்லாம் சுசித்ராவோட வேலை தானா? டபுள் கேம் ஆடும் பாலாஜி… ரசிகர்கள் கருத்து!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள், ஒரே குழப்ப மனநிலையில் ஏகப்பட்ட கமெண்ட்டுகளையும் ரியாக்ஷன்களையும் கொட்டி வருகின்றனர்.
எல்லாத்துக்கும் காரணம் டபுள் கேம் ஆடும் பாலாஜி முருகதாஸ் தான்.
பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததும், மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தியை லேசாக பற்ற வைத்து ஆட்டத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார்.

அடங்கிய அர்ச்சனா
சுசித்ராவின் வரவுக்கு பிறகு, கடந்த இரு வாரங்களாக ஆட்டம் போட்ட அர்ச்சனா அக்கா, அப்படியே அடங்கி விட்டார். எல்லாம் சுசித்ரா அவருக்கு கொடுத்த ஷட் அப் பண்ணுங்க ஸ்மைலியின் மேஜிக் தான் போல, அர்ச்சனாவை இப்படி அமைதியா பார்க்கவும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குள்ள நரி பாலாஜி
கழுதை உண்டியலுக்கு பதில் கேபி எடுத்த குள்ள நரி உண்டியலை பாலாஜி எடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். வேல்முருகன் வெளியே போகிறார் என்றதும், அவருக்காக ஒரு நொடி கூட ஃபீல் பண்ணாமல், ஆஜீத்தை அப்படியே கட்டி அணைத்து தூக்கிய பாலாஜியின் செயலை இந்த நெட்டிசன் வன்மையாக கண்டித்துள்ளார்.

சைக்கோ ஆகிடுவான் போல
யோவ் பிக்பாசு.. இந்த பாலாஜி பையன் சைக்கோ ஆகிட்டான். அவருக்கு ஏதாவது ட்ரீட்மென்ட் கொடுங்க என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சனம் ஷெட்டியுடன் அப்படி சண்டை போட்டு விட்டு, இப்போ அவருக்கு சப்போர்ட்டா பாலாஜி பேசியதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே குழம்பி உள்ள்னர்.

சனம் மைண்ட் வாய்ஸ்
கெட்டதும் பண்றான், நல்லதும் பண்றான், இவனை புரிஞ்சிக்கவே முடியலையே முருகா.. இப்படித்தான் சனம் ஷெட்டியின் மைண்ட் வாய்ஸ் இருக்கும் என இந்த பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் கமெண்ட் போட்டுள்ளார். சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் ஒரு நல்ல வேவ் லெந்த் போகுது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அர்ச்சனா பாவம்
பிக் பாஸ் நீதிமன்றத்தில், சுரேஷ் சக்கரவர்த்தி - சனம் ஷெட்டிக்கு எதிரான வழக்கின் போது, சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பாலாஜி பச்சோந்தியாக மாறி பேசியதை கேட்ட இன்ஸ்டன்ட் அம்மா அர்ச்சனாவுக்கு ஹார்ட்டே வெடித்து இருக்கும் என்றும், பாவம் அர்ச்சனா, அர்ச்சனாவுடன் இணைந்து கொண்டது போல பாலாஜி நடிப்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

மொட்டை பாஸ் இஸ் பேக்
பாடகி சுசித்ராவின் வரவுக்கு பிறகு, அர்ச்சனாவின் ஆட்டம் கொஞ்சம் குறைந்திருப்பதால், வீட்டில் சுவாரஸ்யத்தை கூட்ட மீண்டும் மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தியின் ஆட்டத்தை துவங்கி உள்ளனர். ஆம்பளை, பொம்பளைன்னு பார்க்க மாட்டேன்னு சுசித்ராவையே வச்சு விளாசும் சுரேஷை பார்த்த ரசிகர்கள், மொட்டை பாஸ் இஸ் பேக் என கொண்டாடி வருகின்றனர்.

வாய் மேல விரல்
சனம் ஷெட்டிக்கு எதிரான வழக்கில், அர்ச்சனா அக்காவும், ரியோ ராஜும் மொக்கையாக பேசி வாதாடி வெற்றி பெற்றுக் கொடுக்காத நிலையில், சனம் ஷெட்டிக்கு பாலாஜி ஒற்றை ஆளாக நின்று போல்டாக பேசி வெற்றியை பெற்றுத் தந்தார். சுரேஷிடம் அர்ச்சனா சமாதானம் பேச வந்த நிலையில், ஷட் அப் என சுரேஷ் வாய் மேல விரல் வைத்த ஷாட் வேற லெவல் என்றும் பாராட்டுக்கள் குவிகின்றன. பழைய பன்னீர் செல்வமாக சுரேஷ் மாற வேண்டிய நேரம் இது தான்!


Click it and Unblock the Notifications











