ரியோவையும் சோமசேகரையும் ஓரங்கட்டுகிறார்களா? அன்சீன் புரமோவிலே அவங்க சீன் வருதே? மோசம் பிக் பாஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்றைய தினம் வெளியான 3 புரமோக்களை விட இந்த புரமோ நல்லா இருக்குதுன்னும், இதைப் போய் ஏன் அன்சீன்ல வைச்சீங்கன்னும் கேள்விகள் கிளம்பியுள்ளன.
நேற்றும், பிக் பாஸ் அன்சீன் புரமோவில் தான் ரியோ ராஜை காண்பித்தார்கள்.

ஏமாற்றும் எடிட்டர்
பிக் பாஸ் எடிட்டர் ரொம்பவே சீட்டிங் செய்கிறார் என்றும், ரியோ ராஜ் நல்லா பர்ஃபார்ம் பண்ணும் காட்சிகளை புரமோவில் வெளியிடாமல் பாலாஜி மற்றும் சம்யுக்தாவை மட்டுமே ஹைலைட் செய்கிறார் என்றும் புகார்கள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து அன்சீன் காட்சிகளிலேயே ரியோ ராஜை தள்ளி விடுகிறார்.

நல்ல விவாதம்
நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜும், ரம்யா பாண்டியனும் நல்லாவே வாதாடினாங்க, ரியோ ராஜின் சூப்பர் பர்ஃபார்மான்ஸை ரசிகர்கள் ரொம்பவே ரசித்துப் பார்த்தனர். முன்னதாக அர்ச்சனா அக்காவையும் கோபத்தில் இருந்து கூல் பண்ணார் ரியோ ராஜ்.

மூடி மறைக்க
விஜய் டிவி புராடக்ட்களுக்கு மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை மூடி மறைக்கவே இப்படி தொடர்ந்து, பிக் பாஸ் புரமோக்களில் ஆரி, சம்யுக்தா, பாலாஜியை ஹைலைட் செய்கின்றனர் என்கிற வாதங்களும் வலுத்து வருகின்றன. யார் நல்லா விளையாடினாலும் அவங்களை காட்டலாம். அதில் தப்பே இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்சீன் புரமோ
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் மூன்று புரமோக்களையும் விட இது ரொம்பவே நல்லா இருக்கு என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ரியோ என்ட்ரிக்கு சோமசேகர் சூப்பர்ஸ்டார் மியூசிக் போடுவது போல இருக்கிறது.

குசும்பு புடிச்ச சோமு
அய்யய்யோ மிஸ் ஆகிடுச்சே, திரும்பவும் சரியா வரேன்னு சொல்லிட்டு ரியோ மீண்டும் கதவை திறந்து கொண்டு உள்ளே வரும் போது, அப்படியே கரகாட்டக்காரன் பட காமெடி மியூசிக்கை போட்டு சோமசேகர் பண்ண குசும்புத்தனம் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. இதெல்லாம் நிகழ்ச்சியில் போடலாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











