சனம், சோம், சுரேஷ்.. வரிசையிலேயே யார் எலிமினேட்டடுன்னு சொல்லீட்டீங்களே கமல்.. பரபரக்கும் புரமோ!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்பதை கமல் மறைமுகமாக ரிவீல் செய்துள்ளார்.

Recommended Video

நீதிபதியாக சுச்சி செய்தது தவறு, கமல்ஹாசன் வருத்தம் | Bigg boss 4 Tamil

அது தான் எல்லாருக்கும் நல்லாவே தெரியுமே என ரசிகர்கள் புரமோவை பார்த்து விட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சனம் ஷெட்டி, சோமசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி என கமல் வரிசைப்படுத்தியதில் இருந்தே யார் வெளியே போகப் போறாங்கன்னு தெரிந்து விட்டது.

எவிக்‌ஷன் நாள்

எவிக்‌ஷன் நாள்

சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை கமல்ஹாசன் யார் யார் சேவ் ஆனார்கள் என்று சொல்லவில்லை. ஒரு வேளை அதனால், இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்காதோ? என்கிற சந்தேகமும் எழுந்தது. ஆனால், இன்றைய புரமோவில் எவிக்‌ஷன் கார்டுடன் வந்த கமலை பார்த்ததும், அப்போ சுரேஷ் தாத்தா வெளியே போவது உறுதி தான் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டனர்.

காப்பாற்றப்பட்டவர்கள்

காப்பாற்றப்பட்டவர்கள்

இன்றைய முதல் புரமோவில் சுசித்ராவின் நீதிபதி நடிப்பு பற்றி விளாசித் தள்ளினார் கமல்ஹாசன். இந்நிலையில், இரண்டாவது புரமோவில், சனம், சோம், சுரேஷ் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேறுகிறார் என்பதை காட்டி உள்ளனர். அதன் காரணமாக அர்ச்சனா, அனிதா, ஆரி மற்றும் பாலாஜி ஆகியோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகி உள்ளது.

பாலாஜிக்கு ரெட் கார்டு இல்லை

பாலாஜிக்கு ரெட் கார்டு இல்லை

விஜய் டிவி பற்றி கஸ்தூரி சொன்னது போலத் தான், சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட அந்த டெலிடட் சீன் பற்றியும், அதில் இருந்த அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம் குறித்தும் கமல் கேட்கவில்லை. பாலாஜிக்கும் ரெட் கார்டு கொடுக்காமல் வழக்கம் போல காப்பாற்றி விட்டனர்.

மூன்று பேருமே கிளம்புறீங்களா

மூன்று பேருமே கிளம்புறீங்களா

இரண்டாவது புரமோவில் மூன்று பேருமே கிளம்புறீங்களா என கமல் கேட்டதும், அப்பாடா அப்படி ஏதாவது வழி இருந்தாலும், துரத்தி விடுங்க, பிக் பாஸ் வீட்டில் ஓவர் கிரவுடாக இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர். சுரேஷ் தாத்தா சனம் மற்றும் சோம் கையை பிடித்துக் கொண்டிருந்த நிலையில், கமல் அப்படி சொன்னார்.

சூசகமாக சொன்ன கமல்

சூசகமாக சொன்ன கமல்

இந்த வாரம் எவிக்‌ஷன் யார் என்று தெரிந்த நிலையில், அதுக்கு ஒரு புரமோ போட்டு அதில், கமல் சூசகமாக யார் வெளியே போகிறார் என்பதை பார்ப்பதற்கே பாவமாகத்தான் இருக்கிறது. சனம், சோம், சுரேஷ் என கமல் சொன்ன வரிசையில் இருந்தே சனம் ஷெட்டி மற்றும் சோமசேகர் காப்பாற்றப்படுகிறார்கள், சுரேஷ் வெளியேறுகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X