For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அந்த பெருசுகிட்ட வாயை கொடுக்காம இருந்தா.. அனிதா சம்பத்துக்கு அட்வைஸ் பண்ணும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் நான்காம் நாளுக்கான முதல் புரமோ வெளியாகி உள்ளது.

  The first big fight of Big Bigg Boss Tamil | promo 1

  சன் நியூஸ் சேனலில் செய்திகள் வாசித்து வந்த அனிதா, தனது சோகக் கதை கூறுவதும், சக போட்டியாளர்கள் மத்தியில் அழுது புலம்புவதுமாக இந்த புரமோ உள்ளது.

  இதனை பார்த்த நெட்டிசன்கள், அனிதாவுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக அவரது ஓவர் ஆக்டிங்கை கண்டு கலாய்த்து வருகின்றனர்.

  க்ரைம் ரேட் ஏறுதே.. அனிதா சம்பத் ரொம்ப ஆட்டியூட் காட்றாங்கப்பா.. வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா!

  தொடர்ந்து சண்டை

  தொடர்ந்து சண்டை

  மூன்றாம் நாளான நேற்றும் தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியிடம் வேண்டும் என்றே வம்பிழுத்து சண்டை செய்து வருகிறார் அனிதா. மேலும், புரமோவில் உங்களை காட்டணும்னு தான் இப்படி பண்றீங்க என அவரை அனிதா குற்றம்சாட்டுவதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், அந்த பிளானில் இப்படி பண்ணுவது நீதான்மா என ஓட்டி வருகின்றனர்.

  அடுத்த வனிதா

  பிக் பாஸ் முதல் சீசனில் காயத்ரி ரகுராம், இரண்டாம் சீசனில் ஐஸ்வர்யா தத்தா, மூன்றாம் சீசனின் வனிதா விஜயகுமார் மாதிரி இந்த 4வது சீசனில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இரிடேட்டான முகமாக மாறி வருகிறார் அனிதா சம்பத் என இந்த பிக் பாஸ் ரசிகர் பயங்கரமான மீம் ஒன்றை போட்டு பங்கம் செய்துள்ளார்.

  சினேக் டான்ஸ்

  சினேக் டான்ஸ்

  மேலும், அனிதா சம்பத் அப்படியே மற்ற சீசன் போட்டியாளர்கள் செய்தது போல செய்ய முயற்சி பண்றாங்க, வீட்டிக்குள் நுழைந்தவுடன் எப்படி எல்லாம் சண்டையை ஆரம்பிக்கலாம் என்று பக்காவா பிளான் பண்ணி விளையாடுறாங்க, போன சீசனில் பங்கேற்ற சாக்‌ஷி அகர்வால் போல சினேக் டான்ஸ் வேற அப்படியே ஆடுறாங்க என அனிதாவுக்கு எதிராக இப்போ ஒரு ஆர்மியே திறண்டு விட்டது.

  சனமே பரவாயில்லை

  சனமே பரவாயில்லை

  "அனிதா தனக்கு கெட்ட பேர் வந்துருமோனு பயப்படறாங்க! ஷனம் ஷெட்டி எப்படி தன் மேல சொன்ன குற்றச்சாட்டை எல்லாம் பெருந்தன்மையா ஏத்துகிட்டு அமைதியா இருக்காங்களோ அது மாதிரி தான் அனிதாவும் நடந்துக்கணும்" என்றும், சனம் ஷெட்டியே பரவாயில்லை அனிதா கூட கம்பேர் பண்ணும் போதும் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

  சீரியல்ல நடிக்கலாம்

  "எப்ப எங்கப்பா அனிதா ஆர்மி கொஞ்ச ஆறுதல் சொல்லுங்க அனிதாவுக்கு! இருந்தாலும் நீ நியூஸ் ரீடர் பதில் சீரியல் நடிக்கலாம்.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து பிறகு Try பண்ணலாம்!" என இந்த நெட்டிசன், அனிதா சம்பத் அட்டாகாசங்களை கண்டு கொண்டு அவரை அலற விட்டுள்ளார். அனிதா சம்பத்தின் ஆர்மி அப்படியே அமைதியாகி விட்டது.

  வேணும்னு பண்ணல

  வேணும்னு பண்ணல

  "பொண்ணு நல்ல பொண்ணுதான் ஆனா எதாவது தப்பு பண்ணிடுவனோ அப்படிங்குற பயத்துலயே தெரியாம பண்ணிட்டு இருக்குறா.. என்ன பொறுத்த வரை வேணும்னு பண்ணுற மாதிரி தெரியல.. மத்தவங்க எப்படி பார்ப்பாங்க அப்படிங்ககுற இந்த ஒரு பார்வைல இருந்து அவ வெளிய வரணும்" என அனிதாவின் ஆர்மியினர் அவருக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

  சன் டிவி மேல விஜய் டிவிக்கு காண்டு

  "Suntvமேல எப்பவுமே விஜய்டிவிக்கு காண்டு.. செந்தில் கப்பல்ல வேல வாங்கி தரேன்னு கவுண்டமணி வேலைய விட்டுட்டு வந்த கதையா அனிதா கதை ஆகிடும் போல.. எந்த Bigboss contestantம் நல்ல நிலைமைல இல்ல.. ஓவியா நடிச்சது பிட்டு படம், எதுக்கு அங்க போறிங்க, சம்பாரிக்கத்தானே அனுபவிங்க" என இவர் பயங்கர உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

  அந்த பெருசுகிட்ட

  "அந்த பெருசுகிட்ட வாயை கொடுக்காம இருந்திருந்தா இந்நேரம் எங்கேயோ போயிருப்ப அனிதா" என இந்த பிக் பாஸ் ரசிகர் அனிதா சம்பத் மீதுள்ள தப்புகளை சுட்டிக் காட்டி உள்ளார். எச்சில் சண்டை, எரும மாட்டு பிரச்சனை என மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அனிதா தான் மல்லுக்கு நின்றார் என பலரும் அனிதாவை அட்டாக் செய்துள்ளனர்.

  செய்தி வாசிச்சே இப்ப பேர கெடுத்துக்கிட்டியே

  "பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசித்து பேர் வாங்கினே!... பிக்பாசுல செய்தி வாசித்து பேரை கெடுத்துகொண்டாயேமா!" என இந்த நெட்டிசன் சன் டிவியின் பெயரை கூட பயன்படுத்தாமல் நாசுக்காக நறுக்கென அனிதாவின் மண்டையில் ஒரு குட்டு வைத்துள்ளார். அனிதா சம்பத் வேண்டும் என்றே அட்டென்ஷன் க்ரியேட் பண்ண செய்தி வாசிப்பது, யூடியூபர் போல பேசுவது என ஸ்கோர் செய்ய முயற்சி செய்து ரசிகர்களின் வெறுப்புகளை சம்பாதித்துக் கொண்டுள்ளார் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் கருதுகின்றனர். அடுத்தடுத்த எபிசோடில் அனிதா பற்றிய கருத்துக்கள் மாறுமா? தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  English summary
  Bigg Boss Tamil season 4 Day 4 promo 1 released now, netizens trolled Anitha Sampath for her over acting and also compare her to Vanitha Vijayakumar.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X