For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த வாரம் பிக் பாஸ் கேப்டன் யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் புரமோ.. இளைஞர்களுக்கு வாய்ப்பு!

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்த வாரமும் யாரும் கண்ணாடி அறைக்குள் செல்ல மாட்டார்கள் என்றே தெரிகிறது.

    சோமசேகர், நிஷா, கேபி, ஆஜீத்தை தலைவர் போட்டிக்காக ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்கின்றனர். நிஷாவுக்கும் சோமுக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

    எவிக்‌ஷன் இல்லை

    எவிக்‌ஷன் இல்லை

    இந்த வாரத்தின் முதலிலேயே போட்டியாளர்கள் பட்டாசுகளை கொளுத்திப் போட்டும் தீபாவளி வாரம் என்பதால், யாரும் எவிக்‌ஷன் இல்லை என பிக் பாஸ் காப்பாற்றி விட்டார். 6 வாரங்களில் வெறும் 3 பேரை வெளியே அனுப்பிவிட்டு, இரண்டு பேரை சேர்த்துள்ள பிக் பாஸ், அடுத்த இரண்டு மாதத்தில் எத்தனை பேரை எப்படி கழித்துக் கட்ட போகிறார் என தெரியவில்லை.

    ரசிகர்களுக்கு திண்டாட்டம்

    ரசிகர்களுக்கு திண்டாட்டம்

    தீபாவளி வாரத்தை முன்னிட்டு ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள், பரிசுகள் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், நல்ல டாஸ்க் கொடுக்காமல், போரிங்காக விளையாடும் போட்டியாளர்களையும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பார்க்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே திண்டாட்டமாக இந்த சீசன் மாறி உள்ளது.

    பிக் பாஸ் ஜெயில்

    பிக் பாஸ் ஜெயில்

    இந்த வாரமும் பிக் பாஸ் ஜெயிலுக்கு லீவு தான் போல, எல்லா போட்டியாளர்களும் நல்லாவே விளையாடினார்கள். ஜித்தன் ரமேஷ் கூட, இந்த வாட்டி சனம் ஷெட்டியுடன் ரொமான்ஸ், செங்கல் டாஸ்க், ரியோ, அனிதாவுடன் போட்டி என கோதாவில் இறங்கினார். அந்த பிக் பாஸ் டாஸ்க் கொடுப்பவரை தூக்கி அந்த ஜெயில்ல போடுங்க!

    முதல் புரமோ

    முதல் புரமோ

    பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, இன்னைக்காவது தரமான சம்பவம் இருக்குமா என பிக் பாஸ் புரமோவைத் தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், இன்றைய முதல் பிக் பாஸ் புரமோ அடுத்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் புரமோவாக வெளியாகி உள்ளது. அடுத்த புரமோக்கள் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும் என தெரிகிறது.

    தலைவர் ஆவாரா சோம்

    தலைவர் ஆவாரா சோம்

    சம்யுக்தா தலைவர் ஆகும் போதும் சோமசேகர் போட்டியில் இருந்தார். ஆரி தலைவராகும் போதும் சோம் டஃப் ஆன போட்டி கொடுத்தார். இந்நிலையில், இந்த முறையும் சோமசேகரின் பெயரை பாலாவே பரிந்துரைத்த நிலையில், சோமசேகர் தலைவர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம்.

    இளைஞர்களுக்கு வாய்ப்பு

    இளைஞர்களுக்கு வாய்ப்பு

    மேலும், பிக் பாஸ் வீட்டின் செல்லக் குட்டிகளான கேபி மற்றும் ஆஜீத்தையும் ஆரி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர். கேபிக்கு நிறையவே தலைமை பண்பு இருக்கு என்றும், அதனை அவர் வெளிக்காட்ட வேண்டும் என்றும் ஆரி சொன்னது, ஒரு நல்ல கேப்டனின் அடையாளமாகவே தெரிகிறது. இந்த வாரம் அவர் சிறப்பாகவே பல இடங்களில் செயல்பட்டார்.

    நிஷாவுக்கும் சான்ஸ் இருக்கு

    நிஷாவுக்கும் சான்ஸ் இருக்கு

    பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே யாரிடமும் பெரிய சண்டையை உருவாக்கிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் ரசிகர்களையும் சிரிக்க வைத்து வரும் நிஷாவுக்கும் இந்த முறை வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நிஷாவுக்கு பதிலாக சம்யுக்தா மாற்றப்பட்டது மற்றும் போன டாஸ்க்கிலும் நிஷா போட்டியிட்டது என சோமுக்கு சமமாக நிஷாவுக்கும் தலைவராக முழு தகுதியும் திறமையும் இருக்கிறது.

    English summary
    Bigg Boss Tamil 4, Day 40 promo 1 out now and Bigg Boss contestants selects next week captain in the promo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X