அப்போ கேபி தான் டீம் கேப்டன்னு அறிவிச்சிடலாமா.. என்ன ஒரு ஸ்பீடு.. பாவம் சோம்க்கு மிஸ்சான வாய்ப்பு!
சென்னை: பாலாஜி முருகதாஸே நாமினேட் செய்த பிறகும் தலைவர் போட்டிக்கு இந்த முறையும் சோமசேகர் தேர்வாகவில்லை என்பது 2வது புரமோவை பார்த்தாலே தெரிகிறது.
கேபி அட்டகாசமாக பந்தை உடைக்கும் வேகத்தை பார்த்தால் அவர் தான் அடுத்த வார கேப்டன் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
நிஷா அக்கா இந்த முறையும் நல்லாவே முயற்சி செய்றாங்க, சூப்பர்.

சோம்க்கு மிஸ்சான வாய்ப்பு
இந்த வாரம் பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க்கில் திருடனாக பக்காவாக தனது டாஸ்க்கை செய்து அசத்தினார் சோமசேகர். பாலா, சோம்க்கு அருகில் நின்று கொண்டு, பத்திரத்தை எடுத்தது எவன் டா என அப்படி கத்தும் போதும் கொஞ்சம் கூட அவசரப்படாமல் கேம் ஆடிய சோமசேகரை ஏகப்பட்ட ரசிகர்களுக்கும் பிடித்து விட்டது. ஆனாலும், இம்முறையும் தலைவர் டாஸ்க்கில் அவர் தேர்வாகவில்லை.

இளைஞர் படை
சுரேஷ் தாத்தா, அர்ச்சனா, ஆரி என பிக் பாஸ் வீட்டை தலைமை தாங்கிய நிலையில், இந்த முறை குட்டி சுட்டீஸ் ஆன கேபி மற்றும் ஆஜீத் லீடு செய்ய ஒரு நல்ல வாய்ப்பை ஆரி முன் மொழிய பலரும் வழி மொழிந்துள்ளனர். ஜெம்ஸ் டாஸ்க்கில் தனது தனித் திறமையை வெளிப்படுத்திய ஆஜீத், கேபியை தோற்கடித்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

இப்படி தான் கேம் கொடுக்கணும்
டீம் டீமா விளையாட விட்டா, ஓசி காஜி அடிச்சிட்டு போயிடுவாங்க, இப்படித் தான் தனித் தனியா விளையாட விட்டால் தான், போட்டியாளர்களின் தனித் திறமை தெரிய வரும். மக்கள் அவங்க இருக்கலாமா, வேணாமான்னு முடிவு பண்ணுவாங்க, ஒரு வழியா பிக் பாஸ் வீட்டில் மிக்சர் பாக்கெட் காலி போல!

என்ன ஸ்பீடுப்பா
முள் வைத்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு, கொக்கு போல, டொக்கு டொக்குன்னு எகிறி எகிறி பலூன்களை உடைத்துக் கொண்டே சென்ற கேபியின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், ப்பா.. என்ன ஒரு ஸ்பீடுப்பா.. நிச்சயம் கேபி தான் ஜெயித்து இருக்கும் என புரமோவை பார்த்தே முடிவு கட்டி உள்ளனர். யார் அதிக டோக்கன்களை பெற்றுள்ளனர் என்பதை நிகழ்ச்சியில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.

பிசிக்கல் டாஸ்க்கில் கலக்கும் நிஷா
ஜெயிக்கிறோமோ? தோற்கிறோமோ? அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. போட்டி போட வேண்டும். பிசிக்கல் டாஸ்க்கில் ஆண் போட்டியாளர்களுடனும் சரி, இளைஞர்களுடனும் சரி.. சரிக்கு சமமாக நின்று போட்டிப் போட்டு அந்த போட்டிக் களத்தையும் காமெடியாக மாற்றும் நிஷா அக்காவுக்கு கேப்டன்சி பொறுப்பு கிடைத்தாலும் அந்த வாரம் நல்லா ஜாலியாத்தான் போகும்.


Click it and Unblock the Notifications











