மறுபடியும் அன்சீனை எல்லாம் புரமோவா போடுறீங்களா.. பிக் பாஸ் எடிட்டரை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

சென்னை: என்ன தான் அச்சு நம்ம பிக் பாஸ் எடிட்டருக்கு, அன்சீன் காட்சிகளை மூன்றாவது புரமோவிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் காட்சிகளை அன்சீன் புரமோவிலும் மாற்றி மாற்றி போட்டு கடுப்பேத்துகிறாரே?

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task

என ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள், தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவை பார்த்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்த முறை பிக் பாஸ் சீசனில் மார்னிங் டாஸ்க் என்கிற பெயரில் போடப்படும் மொக்கை ஜோசியம் சீனை ஏன்டா இன்னும் கன்டினியூ பண்றீங்க என்றும் விளாசி வருகின்றனர்.

பாலா மீம்ஸ்

பாலா மீம்ஸ்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் ரம்யா பாண்டியன் வந்து எழுப்பியும் பாலாஜி முருகதாஸ் தூங்கிகிட்டு இருக்கிறார் என்பதை பார்த்த ரசிகர்கள், ஏகப்பட்ட மீம்களையும், ட்ரோல்களையும் போட்டு, மாட்டிச்சிடா கெடா ஆடு என பயில்வான் பக்கிரி சாமியை ஒரே வெட்டாக வெட்டி வருகின்றனர்.

அது போன மாசம்

அது போன மாசம்

பாலாவை சனம் ஷெட்டி எட்டி உதைத்ததும், அதற்கு ‘தறுதலை' சண்டை நடந்ததும் போன மாசம் பிரச்சனை. இப்போ என்னன்னா மறுபடியும் சனம் ஷெட்டி கூட ஒட்டி உறவாடுறாரு பாலா. அந்த கருமத்தை எல்லாம் பார்க்கக் கூடாதுன்னு நேத்து அந்த சீனையே அன்சீன்ல வச்சது வேற விஷயம்.

மொக்கை புரமோ

மொக்கை புரமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியையும் ஒரு புரமோவையும் விடாமல் பார்க்கும் இந்த தீவிர பிக் பாஸ் ரசிகர், "எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா.. நல்ல சீன் எபிசோட்ல இருக்கும்.. ஆனா மொக்க சீன தான் புரோமோவா போடுறானுங்க" ஓ பிக் பாஸ்ல நல்ல சீன் வேற இருக்குதா பாஸ் என மற்ற ரசிகர்கள் இதற்கு பதில் கமெண்ட்டும் அடித்து கலாய்த்து வருகின்றனர்.

பாலாஜிக்கு இத்தனை பட்டங்களா?

பாலாஜிக்கு இத்தனை பட்டங்களா?

டுபாக்கூர் பாலாஜி, தூங்குமூஞ்சி பாலாஜி, தறுதலை பாலாஜி, சொம்பு பாலாஜி, எருமமாடு பாலாஜி, பயில்வான் பாலாஜி, பாத்ரூம் பாலாஜி, பாடிசோடா பாலாஜி, குடிகார பாலாஜி என ஏகப்பட்ட டைட்டில்களையும் பாலாஜி முருகதாஸுக்கு நெட்டிசன்கள் வைத்து அதற்கு ஹாஷ்டேக்கை எல்லாம் போட்டும் வேற லெவல் பண்ணி வருகின்றனர்.

காலக் கொடுமை

காலக் கொடுமை

"காலக் கணிப்பு டாஸ்க் புரமோக்களை பார்ப்பது காலக் கொடுமை பாசு" என இந்த பிக் பாஸ் ரசிகர், மூன்றாவது புரமோவை பார்த்து தலையில் கை வைத்தபடி கமெண்ட் செய்துள்ளார். மணிக்கூண்டாக இருக்கும் போது, அர்ஜென்ட்டா பாத்ரூம் வந்தா என்ன பண்ணுவாங்க, என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் காலக் கொடுமையான கமெண்ட்களை அடித்து வருகின்றனர்.

கொரோனா 2020

கொரோனா 2020

2020ம் ஆண்டு சொல்லும் ராசி பலன்களை பார்த்தால், கொரோனா வைரஸ் "இந்தா வச்சுக்கோ" என சொல்வது போலவே இருக்கு என மூன்றாவது புரமோவை பார்த்து உண்மையான கமெண்ட்டை அடித்துள்ளார் இந்த நெட்டிசன். அர்ச்சனாவின் அட்டகாசம் ரொம்ப ஓவர் என்றும், விஜய் டிவி அவரை ரொம்பவே புரமோட் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X