அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவிலும் புயலும் மழையுமாக வெளுத்து வாங்குகிறது.

ஆனால், இந்த முறை வித்தியாசமாக சனம் ஷெட்டிக்கும் ரியோவுக்கும் இடையே சண்டை கிளம்பி இருக்கிறது.

அனிதாவையும், சனம் ஷெட்டியையும் தனியா ஒரு குரூப் என ரியோ முத்திரை குத்தி விடக் கூடாது என்பதற்காக இந்த சண்டை நடக்கிறதா என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டு ரசிப்போம்.

டிஆர்பி குறைஞ்சிடுச்சா

டிஆர்பி குறைஞ்சிடுச்சா

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இந்த வாரம் சண்டை வாரம் போல தெரிகிறது. என்ன டி.ஆர்.பி. ரேட்டிங் கொஞ்சம் ஓவரா அடி வாங்கிடுச்சா, எல்லா ஹவுஸ்மேட்களையும் இப்படி மோத விட்டு வேடிக்கை பார்க்கிறாரே பிக் பாஸ் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களில் ரகளைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.

சூடு பிடித்துள்ளது

சூடு பிடித்துள்ளது

வெளியே கிளைமேட் ஊட்டியை எல்லாம் விஞ்சும் அளவுக்கு இருந்தாலும், பிக் பாஸ் வீடு நல்லாவே அனல் பறக்குது. புயல் எச்சரிக்கை ஏதாவது ஹவுஸ்மேட்களுக்கு கொடுத்தீங்களாப்பா என்றும் கேட்டு வருகின்றனர். இத்தனை வாரங்களில் இந்த வாரம் கொடுத்த கஸ்டமர் கேர் டாஸ்க் வேற லெவலில் ஹவுஸ்மேட்களின் கோபத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

கேபி சோம் நட்பு

கேபி சோம் நட்பு

இன்றைய முதல் புரமோவில் கேபிக்கும் சோமசேகருக்கும் உள்ள நட்பு நல்லாவே வெளிப்பட்டுள்ளது. அது பிடிக்காமல் மற்ற போட்டியாளர்கள் என்ன செய்கின்றனர் என்பதை நிகழ்ச்சியில் கண்டு ரசிக்கலாம். இருந்தாலும், கேபி அப்படி தனது விளையாட்டை அடுத்தவருக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது என்றே பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரியோவுக்கும் சனம்க்கும் சண்டை

ரியோவுக்கும் சனம்க்கும் சண்டை

இது என்னடா புது காம்பினேஷனாக இருக்கே என பிக்பாஸ் ரசிகர்களே ஷாக் ஆகும் அளவுக்கு ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே இரண்டாவது புரமோவில் சண்டை மூட்டி விட்டுள்ளார் பிக் பாஸ். சீக்கிரமே ரியோவுக்கும் அர்ச்சனா மற்றும் நிஷாவுக்கும் இடையே கூட சண்டையை கொளுத்திப் போடுவார் போல தெரிகிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

புரமோவை பார்த்தால், அனிதா சம்பத்துக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே இருக்கும் நட்பு நல்லா இருக்கு என ரியோ சொன்னதை, கேபிக்காக நம்ம கிட்ட பிரச்சனைக்கு ரியோ வருகிறார் என புரிந்து கொண்டு சனம் கத்துவது போலவே தெரிகிறது. என்ன ஆச்சுன்னு நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

மைண்ட் யுவர் வேர்ட்ஸ்

மைண்ட் யுவர் வேர்ட்ஸ்

ரியோ ஆஜித்திடம் கால் பண்ணி பேசிய பிறகு தான் இந்த சண்டை வெடித்துள்ளது என்பதை புரமோவை பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. தப்பான காலர் என ஆஜித்தை இழுத்ததும், ஆஜீத் திரும்பி முறைப்பதும், இது என்னோட ஒப்பினியன் என சனம் சொல்ல, மைண்ட் யுவர் வேர்ட்ஸ் என ரியோ கத்துவதுமாக இரண்டாவது புரமோ காரசாரமாக முடிகிறது.

கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்

கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்

இங்கே இவ்வளவு பிரச்சனை நடக்கும் போது, டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு பாலாஜி முருகதாஸும், ஷிவானி நாராயணனும் சிரித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பிக் பாஸ் எடிட்டர் கட் பண்ணி புரமோவில் போட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் அந்த இரண்டு கரடிக்கும் என்ன ஒரு ஆனந்தம் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X