விக்ரம் பிஜிஎம்மில் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.. முதல் புரமோவே டைரக்ட்டா எலிமினேஷன் தான்.. சூப்பர்!

சென்னை: ஷார்ப்பா காலையிலேயே முதல் புரமோவை பிக் பாஸ் டீம் வெளியிட்டு விட்டது.

வெள்ளை நிற கோட் சூட்டில், விக்ரம் பிஜிஎம்மில் கத்தி சவுண்ட் எல்லாம் தெறிக்க கமல் என்ட்ரியானார்.

முதல் புரமோவிலே டைரக்ட்டா எலிமினேஷன் பற்றி பேசியது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

விக்ரம் பிஜிஎம்மில் மாஸ் என்ட்ரி

விக்ரம் பிஜிஎம்மில் மாஸ் என்ட்ரி

விக்ரம் பிஜிஎம்மில் வெள்ளை நிற கோட் சூட் அணிந்து படு மாஸாக கமல் என்ட்ரி கொடுத்தது வேற லெவல். கமல் சாருக்கு வார வாரம் வித விதமா டிரெஸ் டிசைன் பண்ணிக் கொடுக்கும் அந்த காஸ்ட்யூம் டிசைனரை பாராட்டியே ஆக வேண்டும். செம ஸ்மார்ட்டாகவும் ஷார்ப்பாகவும் கமல் அரங்கை முழுமை செய்கிறார்.

ஆரி, பாலா சேவ்

ஆரி, பாலா சேவ்

நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலா நல்லா சண்டை போட்டது மக்களுக்கு பிடித்து இருக்கிறது. தொடர்ந்து இதே மாதிரி நீங்க அடிச்சிக்கோங்க, அப்போதான் உங்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இடம் இருக்கும் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாக இருவரையும் சேவ் செய்தார்.

டைரக்ட்டா எலிமினேஷன்

டைரக்ட்டா எலிமினேஷன்

இந்நிலையில், இன்றைய முதல் புரமோவில், சுற்றி வளைக்காமல் மற்ற பிரச்சனைகளை பற்றி பேசும் புரமோவை எல்லாம் போடாமல், நேரடியாக எலிமினேஷன் பற்றி பேச ஆரம்பித்தார் கமல். எலிமினேஷன் கார்டையும் கையில் எடுத்ததை புரமோவில் பார்த்த ரசிகர்கள், அதுதான் எங்களுக்கு தெரியுமே என ரியாக்‌ஷன் கொடுத்து வருகின்றனர்.

செம கன்ஃபியூசன்

செம கன்ஃபியூசன்

இந்த வாரமாவது ஜித்தன் ரமேஷை வீட்டுக்கு அனுப்பி தூங்க வைப்பார்கள் என்று பார்த்தால், அது நடக்கவில்லை. கடைசி வரைக்கும் ஜித்தன் ரமேஷா, சம்யுக்தாவா என்று தெரியாமலே இருந்தது. நிஷா எப்படியும் சேவ் ஆகிடுவார் என்று தெரியும். முதல் புரமோவில் கன்ஃபியூசன் ஏற்படுத்தும் பேர் வழியில், நிஷா கையை அர்ச்சனா பிடித்து இருப்பது போலவே காட்றாங்க.. போங்க பாஸ்!

சம்யுக்தா வெளியேற்றம்

சம்யுக்தா வெளியேற்றம்

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் சம்யுக்தா தான் வெளியேறுகிறார் என நேற்றே லீக் செய்யபட்டு விட்டது. சம்யுக்தா பேசிய கலீஜ் பிரச்சனை மற்றும் ஆரியிடம் போட்ட வளர்ப்பு சண்டை குறித்து கமல் பேசி விட்டு அவரை வெளியே அனுப்ப வேண்டும் என்பது பிக் பாஸ் ரசிகர்களின் கோரிக்கை.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil
பாலாவுக்கு சிக்கல்

பாலாவுக்கு சிக்கல்

சம்யுக்தா இந்த வாரம் வெளியேறிவிட்டால், சம்யுக்தா தலைமையில் செயல்படுத்தி வந்த குரூப்பை தானே தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு பாலா தள்ளப்படுவார். அடுத்த வாரம் பாலாவை தலைவராக்கி விட்டால், அர்ச்சனா குரூப் பாலாவை உண்டு இல்லை என பண்ணி விடும். இந்த வாரம் ரியோ சிக்கி சிதைந்து போல பாலா சிக்குவாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X