கெஸ் பண்ணது வீண் போகல.. அர்ச்சனா தான் கேப்டன்.. அடுத்த வாரமும் சேஃப்.. மீண்டும் சொதப்பிய பாலா!
சென்னை: இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை பாலா கேப்டன் ஆக மாட்டார் போல தெரிகிறது.
தற்போது வெளியான முதல் புரமோவிலேயே அர்ச்சனா தான் கேப்டன் டாஸ்க்கில் வின் பண்ணியதாக காட்டப்படுகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே கெஸ் பண்ணது போலவே, அடுத்த வாரமும் அர்ச்சனாவை காப்பாற்ற பிக் பாஸ் குழு தீட்டிய திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.

முதல் புரமோ
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ சரியான நேரத்திற்கு வந்து விட்டது. முதல் புரமோவிலே கேப்டன் டாஸ்க்குக்கான போட்டியில் அர்ச்சனா, பாலா மற்றும் ரம்யா கடும் போட்டி இடுகின்றனர். கம்பி வளையத்துக்குள் கை விட்டபடி பைகளை நகர்த்தி அதிக பைகளை வைக்க வேண்டும் என்பதே போட்டி.

சொதப்பிய பாலா
இந்த முறையாவது பாலாஜி முருகதாஸ் கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள முதல் புரமோவிலே அவர் கேமில் சொதப்பியது தெளிவாக தெரிகிறது. இந்த முறையும் தோற்றுவிடுவேனோ என்கிற கோபத்தில் கத்துவதையும் புரமோவில் காட்டியுள்ளனர்.

வாம்மா மின்னல்
முதல் புரமோவில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது அர்ச்சனாவும் பாலாவும் தான். ரம்யா பாண்டியனை ஒரே ஒரு செகண்ட் ஷாட் மட்டுமே காண்பித்துள்ளார் எடிட்டர். வாம்மா மின்னல் என்பது போல வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. எப்படியோ ரம்யா வின் பண்ணியிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

மீண்டும் கேப்டன்
ரியோ ராஜ், ரம்யா பாண்டியனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக கேப்டன் பதவியை அர்ச்சனா தட்டி செல்கிறார் என்றே தெரிகிறது. பைனலுக்கு கொண்டு செல்ல இவர்களை இப்படி பிக்பாஸ் குழு தலைவராக்கி வருகிறதா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அர்ச்சனா சேவ்
புரமோவை பொறுத்தவரையில் அர்ச்சனா ஜெயிப்பது போல் தான் தெரிகிறது. அடுத்த வாரம் கேப்டனாக அர்ச்சனா மாறி விட்டால், இந்த வாரமும் அடுத்த வாரமும் காப்பாற்றப்படுவார் அர்ச்சனா என்றே கணிக்க முடிகிறது. அர்ச்சனாவை விட பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஏகப்பட்ட டிக்கெட்டுகள் இருப்பதால், அவர் சேவ் ஆவார் என்பது நிச்சயம்.

கிளம்புங்க ஆஜீத்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது நாளை கசிந்துவிடும். ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் தற்போது ஆஜீத் மீது தான் திரும்பியுள்ளது. ஹீரோவாக வேண்டும் என நினைக்கும் ஆஜீத்தின் கனவு நிறைவேற அவர் வெளியே கிளம்பட்டும் என்றே பிக் பாஸ் ரசிகர்கள் வழியனுப்ப தயாராகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











