சூப்பர் ரீயூனியன்.. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலங்கள் சந்திப்பு.. வைரலாகும் போட்டோ!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் வெளியேறிய பிரபலங்கள் ஒன்றாக சந்தித்துக் கொண்ட அழகான தருணம் நிகழ்ந்துள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்களான சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, வேல்முருகன் மற்றும் ரேகா ஆகியோரின் ரீயூனியன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சனம் ஷெட்டி இந்த புகைப்படத்தில் மிஸ் ஆனது ரசிகர்களுக்கு சற்றே வருத்தத்தை கொடுத்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் 4

பிக் பாஸ் தமிழ் 4

இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், சற்றே தள்ளிப் போய் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கோலாகலமான தொடக்க விழாவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி, 70வது நாளை அடைந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை இந்த முறையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் எவிக்‌ஷன்

முதல் எவிக்‌ஷன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எவிக்‌ஷன் இல்லாமல் இருந்த நிலையில், இரண்டாவது வார எவிக்‌ஷனில் முதல் ஆளாக நடிகை ரேகா வெளியேறினார். கடலோரக் கவிதைகள், புன்னகை மன்னன் என கமலுடன் நடித்த நடிகை ரேகாவின் எவிக்‌ஷன் ஹவுஸ்மேட்களை ரொம்பவே பாதித்தது.

வேல்முருகன் வெளியேற்றம்

வேல்முருகன் வெளியேற்றம்

நடிகை ரேகாவை தொடர்ந்து அடுத்த எவிக்‌ஷனாக வேல்முருகன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து 28வது நாளில் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் வெளியேறினார். வேல்முருகனின் வெளியேற்றம் பிக் பாஸ் ரசிகர்களை பெரிதாக பாதிக்கவில்லை.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் வீட்டில் மிக்சர்கள் தின்னுட்டு இருக்கும் போட்டியாளர்களை தங்க வைத்துக் கொண்டு நல்லா கொளுத்திப் போட்டு இந்த சீசன் பிக்பாஸை ரசிகர்களை பார்க்க வைத்து டிரெண்டிங்காக இருந்த சுரேஷ் சக்கவர்த்தியை திடீரென பிக் பாஸ் வீட்டில் இருந்து 35வது நாள் வெளியேற்றினார்கள். ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சியடைந்தனர்.

சம்யுக்தா வெளியேற்றம்

சம்யுக்தா வெளியேற்றம்

டம்மி மம்மி என நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்ட சீனியர் மாடல் சம்யுக்தா பிக் பாஸ் வீட்டிலிருந்து 56வது நாள் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தாவின் வெளியேற்றம் பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், ஆஜீத் உள்ளிட்டோரை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

ரீயூனியன்

ரீயூனியன்

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன் மற்றும் சம்யுக்தா ஆகிய 4 பேர் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டு எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி வைல்டு கார்டாக வர வாய்ப்பில்லை என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.

தலைவி மிஸ்ஸிங்

தலைவி மிஸ்ஸிங்

இந்த ரீயூனியன் போட்டோவை பார்த்த ரசிகர்கள் தலைவி சனம் ஷெட்டி மிஸ்ஸிங் என்கிற வருத்தத்தை ஃபீல் பண்ணி கமெண்ட் செய்து வருகின்றனர். பாடகி சுசித்ரா பற்றி எந்தவொரு ரசிகரும் கவலைப்பட்டு கமெண்ட் செய்ததாக தெரியவில்லை. சீக்கிரமே அர்ச்சனா கேங் ரீயூனியன் போட்டோவும் வரும் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X