இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரு வெளியே போறா? டேஞ்சர் ஸோனில் இவங்க தான் இருக்காங்களாம்!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போறது யார் என்பதில் இடியாப்ப சிக்கலே நிலவுகிறது.

பிக் பாஸ் ஓட்டுக்கள் அடிப்படையில் பார்த்தால், 4 பேர் மிக குறைந்த எண்ணிக்கையில் போட்டி போட்டு வருகின்றனர் என தெரிகிறது.

ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத் இந்த 4 பேர் தான் டேஞ்சர் ஸோனில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாமினேஷன் லிஸ்ட்

நாமினேஷன் லிஸ்ட்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டது 7 பேர். அவர்கள் யாரென்றால், ஆஜீத், ஆரி, அனிதா, நிஷா, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் ஆகியோர் தான். இந்த 7 பேரில் ஓட்டுக்களின் அடிப்படையில் 4 பேர் டேஞ்சர் ஸோனில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிக ஓட்டுக்கள்

அதிக ஓட்டுக்கள்

வார வாரம் பயம் காரணமாக ஆரியை நாமினேட் செய்து வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ். ஆனால், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் மற்றும் மக்கள் பலத்தால், வார வாரம் முதல் ஆளாக சேவ் ஆகி விடுகிறார். இந்த வாரமும் அதிக ஓட்டுக்களை பெற்றிருப்பது ஆரி தான் என்கிற கணிப்பு வெளியாகி உள்ளது.

அடுத்த இடத்தில்

அடுத்த இடத்தில்

ஆரியை தொடர்ந்து அடுத்த இடத்தில் சனம் ஷெட்டி அதிக வாக்குகளை பெற்று லீடிங்கில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலாவை நேற்று செருப்பால் அடிக்க வைத்து வெறித்தனம் காட்டிய நிலையில், சனம் ஷெட்டிக்கும் ரசிகர்கள் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர்.

நிஷாவும் சேஃப்

நிஷாவும் சேஃப்

ஆரி, சனம் ஷெட்டியைத் தொடர்ந்து இந்த வாரமும் அறந்தாங்கி நிஷா சேஃப் ஸோனிலே இருக்கிறார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்பதாலும், பிக் பாஸ் வீட்டில் யாரிடமும் தேவையில்லாத பிரச்சனையை கிளப்பாமல் இருப்பதாலும், நிஷாவுக்கு எக்கச்சக்க ஓட்டுக்கள் விழுந்து வருகின்றன.

டேஞ்சர் ஸோனில் 4 பேர்

டேஞ்சர் ஸோனில் 4 பேர்

இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், ஆஜீத் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகிய 4 பேர் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த 4 பேரும் ரொம்பவே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் கடும் போட்டி நடத்தி வருவதால், யார் வெளியேறப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஷிவானி தானா?

ஷிவானி தானா?

ஷிவானி நாராயணனை நாமினேட் செய்து வீட்டுக்கு அனுப்ப திட்டம் போட்டு விட்டார்கள் போலவே தெரிகிறது. இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் துணையால் எக்கச்சக்க ஓட்டுக்களை பெற்று ஷிவானி தப்பிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. மிகவும் குறைவான ஓட்டுக்களில் ஷிவானியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஜீத்தா? அனிதாவா?

ஆஜீத்தா? அனிதாவா?

ரம்யா பாண்டியன், ஆஜீத் மற்றும் அனிதா சம்பத் ஆகியோரையும் ரசிகர்கள் வீட்டுக்கு அனுப்ப திட்டம் போட்டு விட்டனர். அதற்காகத்தான் இந்த வாரம், அனிதா சம்பத் ஓவராக ஸ்கோர் செய்து விளையாடி வருகிறார். அதனால், அவருக்கு ஓட்டுக்கள் கிடைத்தால், இந்த வாரம் அனிதா தப்பித்து, ஆஜீத் வீட்டுக்கு செல்வார் என்றே தெரிகிறது.

சீக்கிரம் லீக் ஆகிடும்

சீக்கிரம் லீக் ஆகிடும்

எப்படியோ நாளைக்கு பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறினார் என்பது சமூக வலைதளங்களில் லீக் ஆகி விடும். அதிகபட்ச வாய்ப்பு ஆஜீத்துக்குத் தான் என ஏகப்பட்ட பேர் கணித்து வருகின்றனர். சிலர், ஷிவானியை அனுப்பிடுங்கப்பா என்றும், சிலர் அனிதா தான் அவுட் ஆவார் என்றும் ரம்யா வெளியேறவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறி வருகின்றனர். பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X