For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மொட்டை சுரேஷை வெளுப்பாருன்னு பார்த்தா.. ரம்யா பாண்டியனை தூக்கி சுத்துறாரு.. வாட் இஸ் திஸ் ரியோ?

  |

  சென்னை: விஜய் டிவி மீண்டும் ரியோவை வைத்து புரமோஷன் தேட ஆரம்பித்து விட்டது என்றே கடந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

  ரியோ ராஜ் குறித்து எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் அறையில் அப்படி ஓப்பனாக பேசிய சுரேஷ் சக்கரவர்த்தியை, வெளியே வந்ததும் வெளுத்து விடுவார் என பார்த்தால், ரம்யா பாண்டியனை தூக்கி சுற்றுகிறார்.

  அட போங்கய்யா.. உள்ளே அடிச்சுக்கிட்டாங்கன்னு சொன்னதெல்லாம் பொய்யா என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டனர்.

  கண்கலங்கிய சனம் ஷெட்டி.. கவலைப்படாத ஷிவானி.. எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எனக்கு வேண்டாம்... வேற லெவல்மா நீ!

  ஒண்ணுமே நடக்கலையே

  ஒண்ணுமே நடக்கலையே

  நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெருசா சண்டை வெடிச்சது, கைகலப்பு நடந்துடுச்சு, உள்ளே இருக்கிற சிலர் அடிச்சிக்கிட்டாங்க என சில நெருங்கிய வட்டாரங்கள் அடிச்சி விட்டன. ஆனால், நிகழ்ச்சியில் அப்படி ஒண்ணுமே ஆனது மாதிரி தெரியலை. மேலும், நம்ம வில்லன் மொட்டை பாஸ் நல்லா சோத்தை போட்டு சாப்பிடுறாரு.

  போட்டுக் கொடுத்த பிக் பாஸ்

  போட்டுக் கொடுத்த பிக் பாஸ்

  பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல பிக் பாஸ் இந்த டாஸ்க்கையே மொட்டை தலை சுரேஷ் சக்கரவர்த்திக்கு வேட்டு வைக்க வேண்டும் என்றே செய்தது போல இருந்தது. அவர் மத்தவங்களை பத்தி பேசும் போது மட்டும் டிவி போட்டு பப்ளிக் பண்ணி வேலையை காட்டி விட்டார் பிக் பாஸ்.

  கொந்தளித்த ரியோ

  கொந்தளித்த ரியோ

  மொட்டை தலை வெளியே வரட்டும் அவன் மண்டையை ரெண்டா பொளந்துடுறேன் பாரு என்கிற ரேஞ்சில் புரமோவுக்கு மட்டும் சீன் காட்டி கொந்தளித்த ரியோ ராஜ், கொந்தளிக்க மட்டும் தான் செஞ்சாரு. இதுல ஆஜீத்துக்கும், ரம்யா பாண்டியனுக்கும் ஃப்ளையிங் கிஸ் வேற..

  டம்மி டப்பாசு

  டம்மி டப்பாசு

  ஆனால், வெளியே வந்த போது சுரேஷ் சக்கரவர்த்தியின் சட்டையை பிடித்து ரெண்டு அப்பு அப்புவான்னு பார்த்தா, நறுக்குன்னு நாலு இல்லை ஒரு வார்த்தை கூட ரியோ ராஜ் கேட்கல. அனிதா சம்பத், சனம் ஷெட்டி எகிறும் போது, அவங்களை அய்யய்யோ நீங்க பேசாதீங்க, நீங்க பேசாதீங்கன்னு அவரை ஃப்ரீயா எஸ்கேப் பண்ணி விட்டுட்டு மத்தவங்க மேல பழிய போட்டுட்டாரு.. என்ன ரியோ இப்படி சொதப்பிட்டீங்க.

  ரம்யா பாண்டியனை அலேக்கா தூக்கிய ரியோ

  ரம்யா பாண்டியனை அலேக்கா தூக்கிய ரியோ

  மொட்டை தலை சுரேஷை லெஃப்டு ரைட்டுன்னு வாங்குவாருன்னு பார்த்தா, அவரை பாத்ரூம் போக விட்டுட்டு, அந்த ரூமை விட்டு வெளியே வந்த ரம்யா பாண்டியனை அலேக்கா இடுப்பை புடிச்சு தூக்கி சுத்த ஆரம்பிச்சுட்டாரு. இதெல்லாம் உங்க பொண்டாட்டி பார்ப்பாங்களேன்னு தோணலையா உங்களுக்கு..

  பத்தவச்சிட்டீயே பரட்டை

  பத்தவச்சிட்டீயே பரட்டை

  யாரு வேணா என்ன வேணா சொல்லுங்க, நமக்கு சோறு தான் முக்கியம் என சோத்தை போட்டு, சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, அவரை பார்த்த டைனிங் டேபிள் கேமராவை பார்த்து, பத்தவச்சிட்டீயே பரட்டை என டிவி போட்டுக் காட்டிய பிக் பாஸை பார்த்து பங்கம் பண்ணி சிரித்த சுரேஷ் சக்கரவர்த்தி இந்த எபிசோடை ஹிட்டாக்கவும் செமையா விளையாடி உள்ளார்.

  English summary
  Bigg Boss Tamil 4 fans upset with Rio Raj not put a big fight with Suresh Chakaravarthy. And also they trolled Rio for lifting Ramya Pandian.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X