For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பெண் போட்டியாளர்கள் லிஸ்ட் செமயா இருக்கு.. பசங்க சைடு வீக்கா இருக்கே.. பார்த்து பண்ணுங்க பிக்பாஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் தொடங்கும் என்கிற அறிவிப்பு நேற்று வெளியாகி ரசிகர்களை வெயிட்டிங்கிலேயே வெறியேற்றி வருகிறது.

  கிட்டத்தட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பட்டியல் உறுதியாகி விட்டது.

  இதில், பெண்கள் அணி மிகவும் பலமானதாகவும், ஆண்கள் அணி ரொம்ப வீக்காகவும் இருப்பதாக ரசிகர்கள் ஃபீல் பண்றாங்க..

  வாவ்.. தனக்குத்தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி.. அண்ணாத்த படத்தின் அசத்தல் அப்டேட்!

  பிரம்மாண்ட துவக்க விழா

  பிரம்மாண்ட துவக்க விழா

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக துவங்குகிறது. இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை அதற்கான படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இதுகுறித்த அறிவிப்பு கமல்ஹாசனின் அசத்தலான புரமோவுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  பலம் பலவீனம்

  பலம் பலவீனம்

  இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களா? அல்லது 14 போட்டியாளர்களா? என்பது தெரியவில்லை. இதுவரை 8 பெண் போட்டியாளர்கள் மற்றும் 6 ஆண் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், பெண் போட்டியாளர்கள் அணி பலம் வாய்ந்ததாக தெரிகிறது.

  இடுப்பு மடிப்பால்

  இடுப்பு மடிப்பால்

  ஜோக்கர், ஆண் தேவதை, டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களிலும் குக் வித் கோமாளி எனும் விஜய் டிவியின் சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானவர் ரம்யா பாண்டியன். சேலையில் இவர் வெளியிட்ட அந்த இடுப்பு மடிப்பு போட்டோ ஓவர் நைட்டில் இவருக்கு ஏகப்பட்ட புகழை தேடி தந்தது குறிப்பிடத்தக்கது.

  5 மணி பஸ்

  5 மணி பஸ்

  பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இந்த லாக்டவுனில் சீரியல் ஷூட்டிங் இல்லாத நிலையில், தினமும் மாலை 5 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை களமிறக்கி ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை வசியம் செய்தார். 5 மணி பஸ் என்றே இவரை பெயர் வைத்தும் ரசிகர்கள் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

  ஜெமினி கிரண்

  ஜெமினி கிரண்

  ஜெமினி, வில்லன், அன்பே சிவம், நியூ, ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்து கோலிவு ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை கிரண். இந்த லாக்டவுனில் அவரும் தனது ஹாட்டான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இன்னும் சிங்கிளாக இருக்கும் இவர், யாருடன் பிக்பாஸ் வீட்டில் மிங்கிளாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  கடலோரக் கவிதைகள்

  கடலோரக் கவிதைகள்

  கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் நடித்த கிரண் போலவே உலக நாயகன் உடன் புன்னகை மன்னன் படத்தில் நடித்த நடிகை ரேகாவும் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவது உறுதியாகி உள்ளது. சாஃப்ட்டா இருப்பாரா? அல்லது ரோஜாக் கூட்டம் போலீஸ் அதிகாரி மாதிரி சண்டை செய்வாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  விஜே அர்ச்சனா

  விஜே அர்ச்சனா

  விஜய் டிவி, ஜி தமிழ் என பிரபல தொகுப்பாளினியாக கலக்கி வரும் விஜே அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும், இந்த சீசனிலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரிந்து விட்டது. தனது செல்ல மகள் சாரா வினித்தை பிரிந்து வருவதால், அழுகாட்சிகளுக்கும் பாசத்தை பிழியும் நிகழ்வுகளும் அரங்கேறும்.

  மாடல் அழகி சம்யுக்தா

  மாடல் அழகி சம்யுக்தா

  மிஸ் சென்னை பட்டம் வென்ற மாடல் அழகி சம்யுக்தாவும் இந்த சீசனில் டஃப் போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதிகா சரத்குமார் உடன் இணைந்து சந்திரகுமாரி டிவி சீரியலில் நடித்துள்ள சம்யுக்தா கார்த்திக் எப்படி எல்லாம் டிரெஸ் பண்ணிட்டு ரசிகர்களை திணறடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  பிரண்ட்ஸ் அபிநயஸ்ரீ

  பிரண்ட்ஸ் அபிநயஸ்ரீ

  தளபதி விஜய், சூர்யா, தேவயாணி, வடிவேலு நடிப்பில் உருவான பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை அபிநயஸ்ரீ இந்த சீசனில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறாராம். காமெடி, கவர்ச்சி, காரசாரமான சண்டை என இவரிடம் ஏகப்பட்ட வித்தைகள் இருக்கும் என தெரிகிறது. என்னதான் செய்கிறார் என பார்ப்போம்.

  குட்டிக் குழந்தை

  குட்டிக் குழந்தை

  குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கேப்ரில்லா, இப்போ இளம்பெண்ணாக மாறி உள்ளார். ஆனால், இந்த சீசனில் பெண்கள் அணியில் பார்த்தால், அவர் குட்டிக் குழந்தை தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்காக பலவித கவர்ச்சி போட்டோஷூட்களை எடுத்து வெளியிட்ட இவர், இந்த சீசனில் எப்படி கலக்குகிறார் என்பதை பார்ப்போம்.

  ஆண்கள் அணி

  ஆண்கள் அணி

  8 வலுவான பெண்கள் அணிக்கு சவால் கொடுக்கும் விதத்தில் இந்த சீசனில் ஆண்கள் அணி இருக்கிறதா? என்றால், இதுவரை வெளியான போட்டியாளர்கள் குறித்த தகவலில் அப்படியொன்றும் பெரிதாக தெரியவில்லை. நடிகர் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் தான் டஃப் கொடுக்க வேண்டும். அனு மோகன், சூப்பர் சிங்கர் அஜித் (இன்னொரு குட்டிக் குழந்தை), சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Bigg Boss Tamil season 4 girls contestant guessing list is more powerful than boys list. If any surprise male content will land by Bigg Boss team.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X