பிக் பாஸா.. ஓட்ட காசா.. இப்படி எல்லாமே லீக் ஆகுதே.. வைரலாகும் ரேகா எவிக்ஷன் மீம்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் முன்னதாகவே இந்த வாரம் யார் வெளியேறப் போறாங்க என்பது லீக்காகி மீம்களாக பறக்கின்றன.
பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள் இவர்கள் தான் என வெளியான தகவல்கள் அப்படியே ஒவ்வொரு போட்டியாளர்களாக அறிமுகம் ஆகும் போது, இது தானா உங்க செக்யூரிட்டி சிஸ்டம் பிக் பாஸ் என்றே எல்லோரும் கலாய்த்துத் தள்ளினர்.
இந்நிலையில், இரண்டாவது வாரம் முதல் கடைசி வாரம் வரை யாரெல்லாம் எப்போ வெளியப் போவார்கள் என்கிற தகவலும் கசிந்து வைரலானது.

எல்லாமே நடிப்பா பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ என்றே சொல்லப்படுகிறது. ஆனால், அது முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டட் என்றும் முன்கூட்டியே பிளான் போட்டு பண்ணும் டிராமா தான் பிக் பாஸ் என்கிற குற்றச்சாட்டுகளும் அந்த நிகழ்ச்சியை சுற்றி வலம் வருகின்றன. அப்படியெல்லாம் இல்லை அது ஒரு மைண்ட் கேம் என்கிற ஆதரவு கருத்துக்களும் சம அளவில் எழுந்து வருவதே அந்த நிகழ்ச்சியின் வெற்றி ரகசியம்.

ரேகா வெளியே போறாங்க
முதல் வாரத்தில் எவிக்ஷன் இல்லை என்றும், பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா 2வது வாரத்தில் வெளியே போறாங்க என்றும் ஏற்கனவே தகவல்கள் கசிந்து விட்டன. தற்போது, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே ரேகா வெளியேறிய மீம்கள் வைரலாகி வருகின்றன.

கசியும் ரகசியங்கள்
பிக் பாஸ் போட்டியாளர்கள் 16 பிளஸ் 1 என அனைத்து போட்டியாளர்களின் பெயர்களும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே கசிந்து விட்டன. அதே போல, முதல் வார எலிமினேஷன் யார் என்ற தகவலும் முன் கூட்டியே கசிந்ததை பார்த்தால், பிக் பாஸ் வீட்டில் யாரோ ஒரு கருப்பு ஆடு இருப்பதாகவே தெரிகிறது.

முதல் எவிக்ஷன்
பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் நடிகை ரேகா தான் முதல் போட்டியாளராக வெளியேறுகிறார் என மீம்களாக குவிந்து வருகின்றன. அது தொடர்பான ஆதாரங்களும் கசிந்து விட்டதாக இணையதளங்களில் வைரலாக நெட்டிசன்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர். என்ன பிக் பாஸ் நிகழ்ச்சி இப்படி சீக்ரெட்டே இல்லாம சுவாரஸ்யம் குறைகிறதே என்றும் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

ரொம்ப வருத்தம்
கடலோர கவிதைகள், புன்னகை மன்னன் ரேகாவுக்கே தமிழ் மக்கள் ஓட்டுப் போடலையா என பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகி எனக்கு ரொம்ப வருத்தம் பா.. என தனுஷ் சொல்வதை போல ரசிகர்கள் மீம்களை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

யார் யார்
பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் நடிகை அனுயா முதல் நபராக வெளியேறினார். இரண்டாம் சீசனில் மமதி சாரி ஃபர்ஸ்ட் எவிக்ட் ஆனார். போன சீசனில் நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், நடிகை ரேகா தான் இந்த சீசனில் முதல் ஆளாக வெளியேறுகிறார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











