போனா போகுதுன்னு கன்னத்துல கிஸ் பண்ணா.. லிப்ல கிஸ் கேக்குறாங்க பிக்பாஸ்.. கதற விடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: போன வாரம் ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய பிக் பாஸ் அதுக்குள்ள முதல் வார இறுதிக்கு வந்துவிட்டது.
இன்னைக்கு கமல் வந்து யாரை எல்லாம் கதற விடப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு முன்னதாக மீம் கிரியேட்டர்கள் முதல் மற்றும் இரண்டாம் புரமோவை வைத்து கமலையே கதறவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் ஜாலி மீம்களை இங்கே பார்க்கலாம்.

என்ன எழவுயா இது
பிக் பாஸ் அன்சீனில், நடிகை ரேகா, அறந்தாங்கி நிஷாவிடம் கன்னத்திலும், உதட்டிலும் முத்தம் கேட்டு பண்ண டார்ச்சரை பார்த்த ரசிகர்கள், அதனை மீம்களாக போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். புருஷனுக்கே லிப்ல கிஸ் கொடுத்தது இல்லை என நிஷா சொன்ன நிலையில், நண்பன் காமெடி சீனை போட்டு, என்ன எழவுயா இது என கலாய்த்துள்ளனர்.

குறும்படம் இருக்கா இல்லையா
யாரென்று தெரிகிறதா.. இவன் தீயென்று புரிகிறதா என மீண்டும் கமலுக்கு பில்டப் கொடுக்கும் புரமோக்கள் வெளியானதை ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், இன்னைக்கு அனிதா சம்பத்தும், மொட்டை மாமா சுரேஷும் கேட்ட குறும்படம் இருக்கா இல்லையா? என கேட்டு போட்டுள்ள மீம் வேற லெவல்.

உப்பு போட்டு சாப்டுறவன்
உப்பு போட்டு சாப்டுறவன் கிச்சன் டீம்ல இருக்க மாட்டான்னு சொல்லிட்டு, நடையை கட்டிய சுரேஷ் சக்கரவர்த்தி, மறுபடியும் கிச்சன் டீம்ல என்ன பண்ணாரு என்கிற கேள்வியை நிச்சயம் இன்னைக்கு கமல் கேட்பாரு, இன்னைக்கு சம்பவம் இருக்கு என்றும் மீம் போட்டு தெறிக்கவிட்டுள்ளனர். அப்படியே அந்த பப்பரப்பா கால் பத்தியும் கேட்டு கிழிச்சா நல்லாருக்கும் பார்த்து பண்ணுங்க நம்மவரே!

வாய்ல கொடுக்க சொல்றாங்க பிக்பாஸ்
நடிகை ரேகா இன்னும் புன்னகை மன்னன் படத்தை மறக்கவில்லை போலத் தான் தெரிகிறது. ஆஜித்துக்கு அவர் கிஸ் கொடுக்கும் போதே ரசிகர்கள் வேற லெவலில் வச்சு செய்த நிலையில், அறந்தாங்கி நிஷாவிடம் உதட்டில் முத்தம் கொடுக்க சொல்லி கேட்டு, வசமாக சிக்கி உள்ளார். போனா போகுதுன்னு கன்னத்துல கிஸ் கொடுத்தா.. வாய்ல கொடுக்க சொல்றாங்க பிக் பாஸ் என நிஷா கதறுவது போல மீம் க்ரியேட் பண்ணி பங்கம் பண்ணி வருகின்றனர்.

புரமோ பரிதாபங்கள்
அக்டோபர் 4ம் தேதி கருப்பு கோட் அணிந்து செம ஹேண்ட்ஸம் ஆக வந்த உலக நாயகன், ஒரு வாரம் கழிச்சு, பிக் பாஸ் போட்டியாளர்களை வெளுக்கப் போகிறாரா? ஆதரிக்கப் போகிறாரா? பாராட்டப் போகிறாரா? என்பதை புரமோவில் காட்டுவாங்கன்னு பார்த்தா, கமல் நடந்து வருவதை மட்டுமே புரமோவாக போட்டு வைத்துள்ளார்கள். இதனால் அப்செட்டான ரசிகர்கள், என்னடா புரமோவில ஒண்ணுமே இல்ல என விஜய் டிவி எடிட்டரை சும்மா வச்சு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











