ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஷோவுக்கான முதல் புரமோ இன்று வெளியாகி உள்ளது.

கருப்பு நிற கோட் அணிந்து கொண்டு கலக்கலாக கமல்ஹாசன் என்ட்ரி கொடுத்த அதிரடி புரமோ தற்போது வைரலாகி வருகிறது.

இறுதிப் போட்டியாளர்களான ஆரி, பாலா, ரம்யா, ரியோ மற்றும் சோம் என அனைவருமே செம சூப்பரா இருக்காங்க..

லைவ் ஆடியன்ஸ்

லைவ் ஆடியன்ஸ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி நாள் வந்துவிட்டது. இந்த சீசனின் கடைசி முதல் புரமோவை விஜய் டிவி சற்று முன் வெளியிட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவை பார்க்க லைவ் ஆடியன்ஸாக போட்டியாளர்களின் குடும்பங்களும், இந்த சீசனின் முன்னாள் போட்டியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கலக்கும் கமல்

கலக்கும் கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் வித விதமான உடைகளில் கமல்ஹாசன் வந்து கலக்குவார். இந்நிலையில், கிராண்ட் ஃபினாலேவை முன்னிட்டு கருப்பு நிறத்தில் கண்ணை பறிக்கும் க்ளிட்டர் கோட் அணிந்து கமல் கிராண்ட் ஃபினாலே என சொல்வதே அட்டகாசம் தான். இதற்கு அடுத்து அடுத்த சீச்ன பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் மீண்டும் கமல் சாரை வார வாரம் சின்னத்திரையில் பார்க்க முடியும்.

பக்காவாக ரெடி

பக்காவாக ரெடி

கிராண்ட் ஃபினாலேவுக்காக பக்காவாக ரெடியாகி உள்ள ரம்யா பாண்டியன், சோமசேகர், ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோ ராஜ் என அனைவரையும் இந்த முதல் புரமோவில் காட்டி உள்ளனர். இப்போதான் எல்லாரும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்காங்க.. டைட்டிலை தட்டிச் செல்லப் போவது யார் அந்த தருணம் எப்படி இருந்தது என்பதை இன்றைய ஷோவில் கண்டு ரசிக்கலாம்.

அர்ச்சனா டான்ஸ்

அர்ச்சனா டான்ஸ்

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி 6 மணி நேரம் நடைபெற உள்ளது. என்ன இருக்கும்னு நினைத்த ரசிகர்களுக்கு, எவிக்ட் ஆன போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகள், அவர்கள் பேசும் பேச்சுக்கள், முகேன் ராவின் பட அறிவிப்பு உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது. ஆஜீத் வழக்கம் போல பாட்டுப் பாட, சம்யுக்தா, அர்ச்சனா டான்ஸ் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

யார் ரன்னர் அப்

யார் ரன்னர் அப்

ஆரி தான் அதிக ஓட்டுக்களுடன் டைட்டில் வின்னர் என்கிற தகவல் பரவி வருகிறது. ஆனால், ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ் என்றும், இல்லை ரியோ ராஜ் தான் என்றும் மாறுபட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. யார் ரன்னர் அப் ஆகப் போகிறார் என்பதை காணவும் இன்றைய பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே கண்டு ரசிக்க மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X