Just In
- just now
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 16 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
- 20 min ago
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
- 34 min ago
லவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி!
Don't Miss!
- News
பழனி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா... பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் - அரோகரா முழக்கம்
- Sports
ஆட்டோ டிரைவரின் மகன்.. செல்லப்பிள்ளை சிராஜ் வாங்கிய பல கோடி ரூபாய் சொகுசு கார்.. எல்லாம் உழைப்பு!
- Automobiles
விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் வாக்குகள் தான் மகுடம் சூட்டப் போகிறது.. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே எத்தனை மணிக்கு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே குறித்த புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
வரும் ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நடக்க போகிறது. தற்போது அந்த அறிவிப்புடன் கமல்ஹாசன் பேசும் அதிரடி புரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
யார் ஜெயிக்கப் போறாங்கன்னு நினைக்கிறீங்க, உங்கள் வாக்குகள் தான் மகுடம் சூட்டப் போகிறது என கமல் அசத்தலாக பேசியுள்ளார்.
ஆரி எனக்கு கணவராகி.. குழந்தையெல்லாம் பொறந்து.. இங்கே பேரெல்லாம் வச்சோம்.. அர்ச்சனாவின் கதை எதுக்கோ?

அக்டோபர் மாதத்தில்
இந்த சீசன் கொரோனா பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் தாமதமாக ஒளிபரப்பப்பட்டது. கிராண்ட் ஓப்பனிங் செரிமோனி கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கியது. வரும் ஜனவரி 17ம் தேதி இந்த 4வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் மகுடம் சூட்டி அறிவிக்கப்படும்.

கிராண்ட் ஃபினாலே எப்போ
இன்றைய எபிசோடின் அன்சீன் புரமோ வரை ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தற்போது திடீரென கிராண்ட் ஃபினாலே புரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. திரையில் தோன்றிய உலகநாயகன் கமல்ஹாசன், வரும் ஞாயிறு மாலை 6 மணி முதல் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

யாரு ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறீங்க
தற்போது தட புடலாக வெளியாகி உள்ள கிராண்ட் ஃபினாலே புரமோவில், யாரு ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறீங்க என்ற கேள்விய கமல் சார் எழுப்ப, முதல் ஆளாக ரியோவை காட்டி பின்னர், பாலா, கேபி, ரம்யா மற்றும் ஆரியை காட்டுகின்றனர். சோமசேகரை அந்த இடத்தில் காட்டவில்லை.

மகுடத்தை தரும் ஓட்டுக்கள்
நினைக்காதீங்க.. ஓட்டுப் போடுங்க, உங்கள் வாக்குகள் தான் மகுடம் சூட்டப் போகிறது உங்களின் வாக்குகள் தான் வெற்றியாளரை நிர்ணயிக்கப் போகிறது. நியாத் தீர்ப்பு தரும் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது, பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே என கமல் பேசும் அசத்தல் புரமோ தற்போது செம டிரெண்டாகி வருகிறது.

நியாத் தீர்ப்பா
கமல் சொல்வதை கேட்டால், நல்லாத்தான் இருக்கு, மக்கள் வாக்குகள் தான் டைட்டில் வின்னரை தேர்வு செய்யும் என்றால், கடந்த வாரம் மக்கள் போட்ட ஓட்டுக்களை வைத்தே ஆரி தான் டைட்டில் வின்னர் என்று சொல்லி விடலாம். ஆனால், கமல் சொல்வது போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நியாத் தீர்ப்பு எல்லாம் கிடைக்காது, போங்க பாஸ், காமெடி பண்ணாதீங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அப்போ ஆரி தான்
கமல் பேசுவது ஒரு வேளை உண்மையாகும் பட்சத்தில் அப்போ பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தான். அந்த மகுடமும் ஆரிக்குத்தான் சூட்டப்படும். பார்க்கலாம், இந்த சீசனிலாவது நேர்மைக்கும், மக்கள் வாக்குகளுக்கும் வெற்றி கிடைக்கிறதா என்பதை என ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

போன வாரமே
கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை எபிசோடு முடிந்த கையோடு, கமல் சாரை வைத்து இந்த புரமோவையும் எடுத்து விட்டனர் என்றும் இந்த வாரம் கிராண்ட் ஃபினாலேவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து விடுமே என்றும் ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகமும் சோகமும் கலந்த மன நிலையுடன் பதிவுகளை போட்டு வருகின்றனர்.