காஞ்சனா வீடாக மாறிய பிக் பாஸ் வீடு.. நடு நிசி பேய்களின் அட்டகாசங்களை அன்சீனில் வச்சிட்டாங்களே!

சென்னை: விஜயதசமி, தீபாவளி என சாமி வீடாக மாறி இருந்த பிக் பாஸ் வீடு, இப்போ காஞ்சனா வீடாக மாறி உள்ளது.

நள்ளிரவிலும் தொடர்ந்த மணிக்கூண்டு டாஸ்க்கின் நடுவே, சில போட்டியாளர்கள் பேய்களை போல வேஷம் போட்டு தூங்கிக் கொண்டு இருக்கும் மற்ற போட்டியாளர்களை எழுப்பி ரகளை செய்கின்றனர்.

இந்த சீன் எப்படியும் நிகழ்ச்சியில் இருக்கும், எதுக்குத்தான் இதை அன்சீன் புரமோவில் எடிட்டர் வைத்தாரோ தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

காஞ்சனா வீடு

காஞ்சனா வீடு

மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள், இதை அன்சீனில் வைத்திருக்கலாமே என கலாய்த்துத் தள்ளிய நிலையில் அன்சீன் புரமோவை பார்த்த ரசிகர்கள், வழக்கம் போல புரமோவை மாற்றி விட்டார் எடிட்டர் என கிண்டல் செய்து வருகின்றனர். பிக் பாஸ் வீடு, இப்போ பேய்கள் நடமாடும் காஞ்சனா வீடாக மாறி உள்ளது.

ஆவியான பாவிகள் யார்

ஆவியான பாவிகள் யார்

வெள்ளை நிற உடை அணிந்து கொண்டால் ஆவி என்றும் பேய் என்றும் இன்னமும் விளையாட்டு பிள்ளைகளை போலவே நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் ஆவிகளாக நடித்து மற்ற போட்டியாளர்களை அலற விடுவது வேற யாருமில்லை நம்ம ரியோ, கேபி மற்றும் ஆரி கேங் தான்.

அலறிய நிஷா

அலறிய நிஷா

ரியோவால் ஈஸியா பயமுறுத்தக் கூடிய நிஷாவையே டார்கெட் செய்து, அந்த ஆவி குரூப் மிரட்டுகிறது. ஆவியை பார்த்த நிஷாவும் அலறி துடித்து பயப்படுவது போல ஆக்டிங் கொடுக்கும் காட்சிகளை அன்சீன் புரமோவில் வெளியிட்டுள்ளனர். மேலும், நாமெல்லாம் ஆவி ஆகிட்டோம் என ரியோ சொல்லும் வசனம் செம காமெடி.

பாலாவை பயமுறுத்த

பாலாவை பயமுறுத்த

ஷிவானி நாராயணன், சுசித்ரா என யாரையும் விடாமல் இந்த பிக் பாஸ் ஆவிகள் பயமுறுத்தும் கலகலப்பான காட்சிகள் நிச்சயம் இன்றைய நிகழ்ச்சியில் காட்டப்படும் என்றே தெரிகிறது. பயில்வான் பாலாவை தூக்கத்தில் இருந்து எழுப்பி பயமுறுத்துகின்றனர். இதனால், தான் காலையில் அவர் எழுந்திருக்க முடியாமல் போனது என சீன் போடுவாரோ என்றும் கேள்விகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X