twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெள்ளை சட்டை போட்ட ரவுடி.. தேவ அசுரர்களுக்கு சூப்பர் விளக்கம்.. நாயகன் பற்றியும் பேசிட்டார்!

    |

    சென்னை: நாடா? காடா? செட்டிங் கொடுத்ததை எல்லாரும் அப்படியே எடுத்துக்க வேண்டாம். அது உங்களுக்குள் அந்த விதையை திணிக்கும் ஒரு முயற்சி தான் என சொன்ன கமல், தேவர்கள் குறித்தும் அசுரர்கள் குறித்தும் சூப்பரான விளக்கத்தையும் கொடுத்தார்.

    சனிக்கிழமையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோடிலும் அந்த நாடா? காடா? டாஸ்க் பிரச்சனை தொடர்ந்தது.

    அதை ஏன் அவர் சொன்னாருன்னா, அதுக்கு அப்புறமும் அதை வச்சி ஒரு கேம் இருப்பதால் தான் என்பது பின்னாடி புரிந்தது.

     அர்ச்சனாவை தலைவராக்க சா பூ த்ரி ஆட சொன்ன கமல்.. சனம் சத்தியமா தலைவர் பதவிக்கு லாயக்கில்லை! அர்ச்சனாவை தலைவராக்க சா பூ த்ரி ஆட சொன்ன கமல்.. சனம் சத்தியமா தலைவர் பதவிக்கு லாயக்கில்லை!

    சூப்பர் விளக்கம்

    சூப்பர் விளக்கம்

    அசுரர்களாக வேஷம் போட்டதை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், அரசர்களாக வேஷம் போட்டதை யாரும் பெருமையாக எண்ணிக் கொள்ள வேண்டாம் என்பதற்காக, தேவ அசுரர்களை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லி சூப்பரான விளக்கத்தையும் கமல் கூறி அசத்தினார்.

    அரசியல்வாதிகளை தாக்கிய கமல்

    அரசியல்வாதிகளை தாக்கிய கமல்

    சினிமாக்களில் எல்லாம் கட்டம் போட்ட சட்டை போட்டவங்களத்தான் ரவுடிகளாக காட்டுவாங்க.. ஆனால், எனக்கு தெரிந்த ரவுடிகள் எல்லாம் வெள்ளை சட்டை போட்டுத்தான் இருக்காங்க என கமல் அரசியல்வாதிகளை மறைமுகமாக சாடியதை புரிந்து கொண்ட ஹவுஸ்மேட்ஸ் உடனே விழுந்து விழுந்து சிரித்து விட்டனர்.

    செஸ் கேம்

    செஸ் கேம்

    கருப்பு, வெள்ளை காய்களுடன் ஆடப் படும் சதுரங்க ஆட்டமான செஸ் கேமில் வெள்ளை காய்களை வைத்து விளையாடுபவர்கள், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை வைத்து விளையாடுவார்கள். அதை போலத் தான் தேவர்களும், அசுரர்களும் அவர் அவர் பார்வையிலே. என்னை அரக்கன்னு சொல்றியா? ஆமாம் நான் தான் இப்ப என்ன என கமல் மீசையை முறுக்கி செம மாஸ் காட்டினார்.

    நாயகன் ஒரு ஸ்மக்லர்

    நாயகன் ஒரு ஸ்மக்லர்

    கடந்த அக்டோபர் 21ம் தேதி நாயகன் படம் வெளியாகி 33 வருடம் ஆனதை சினிமா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல் நாயகன் நல்லவரா? கெட்டவரா? என்பதை தாண்டி அவர் ஒரு ஸ்மக்லர். அது தான் அவரது வேலை. கடைசியில கோர்ட் படி ஏற வந்துடுச்சுல என அந்த படத்தையே தேவ, அசுரர்களுக்கு உதராணமாக்கினார்.

    டெவில் பெயர் எப்படி வந்தது

    டெவில் பெயர் எப்படி வந்தது

    மித்தாலஜி எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு, அப்படியே சரித்திரத்தை பிடித்துக் கொண்டு கைபர் கனவாய் வழியாக மத்திய கிழக்குக்கு சென்றால், அங்கே தெய்வமாக வணங்கப்படும் அரசனுக்கு பெயர் அசுர் பனி பால் என்றார். அந்த ஊர் வில்லனுக்கு என்ன பெயர் தெரியுமா? தேவ் என்றார். டெவில் என்ற பெயரே தேவ் என்பதில் தான் வந்தது என்கின்றனர் என ஏகப்பட்ட கதைகளை சொல்லி போட்டியாளர்களை ஆசுவாசப்படுத்தினார்.

    English summary
    Kamal Haasan explain about Dev and Asura concept. Also he talks about Asurbanipal mythology and Chess game and Nayagan movie concept too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X