போன வாரமே அர்ச்சனா தலைவர் இல்லையா? அடுத்த பிக் பாஸ் ஆகிடுவாங்களோ.. பங்கம் பண்ணும் மீம்ஸ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியை தினமும் விஜய் டிவி ஒரு பக்கம் புரமோட் பண்ணி வந்தால், மற்றொரு புறம் இப்படி வைரல் மீம்களை போட்டு நெட்டிசன்கள், மீம் கிரியேட்டர்கள் புரமோட் செய்து வருகின்றனர்.
தினமும் வெளியாகும் பிக்பாஸ் புரமோ வீடியோக்களையும் நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு, ஏகப்பட்ட ரசிகர்கள் மீம்களை போட்டு அந்த நிகழ்ச்சி பற்றியே பேசி வருவது தான் அதற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
நீங்க கழுவி ஊத்தினாலும், அது எங்களுக்கு டி.ஆர்.பி தான் என பிக் பாஸ் நிகழ்ச்சி கொடிகட்டி பறக்கிறது.

தலைவர் அர்ச்சனா
வேறு ஏதாவது டாஸ்க் வைத்து இந்த வார தலைவரை தேர்ந்து எடுத்திருக்கலாம். அர்ச்சனா அக்காவின் தம்பி, தங்கைகளிடம் கேட்டால், அவங்களைத் தான் தலைவர் ஆக்குவார்கள் என்றும், ஓ அவங்க போன வாரமே தலைவர் இல்லையா? ரியோவுக்கு பதில் சுரேஷ், சனம் பிரச்சனையை அவங்க நாட்டாமை பண்ணதை வச்சி நல்லாவே ஓட்டி வருகின்றனர்.

மிங்கிள் ஆகாத ஷிவானி
விஜயதசமியை முன்னிட்டு இன்று 4 மணி நேரம் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக போகிறது என விஜய் டிவி மணிக்கு ஒரு முறை விளம்பரப்படுத்தி ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்கி வருகிறது. மேலும், அந்த புரமோவில் கூட ஷிவானி இன்னும் ஹவுஸ்மேட்களுடன் மிங்கிள் ஆகவில்லை என்பதை உணர்கிறார் போதி தர்மர் என்ற மீம் வேற லெவல்.

இப்போ நயன்தாரா வந்தே ஆகணும்
போன வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தெலுங்கு பிக் பாஸை நாகார்ஜுனாவுக்கு பதிலாக சமந்தா வந்து தொகுத்து வழங்கியதை பார்த்த ரசிகர்கள், இப்போ தமிழ் பிக் பாஸை தொகுத்து வழங்க நயன்தாரா வந்தே ஆகணும் என விஜய் டிவியின் கழுத்தை நெறிப்பது போல மீம் போட்டு வருகின்றனர்.

அடப்பாவி சண்டாளா
நடிகர் ஆரி அர்ஜுனாவுக்கு பிக் பாஸ் வீட்டில் அட்வைஸ் ஆரி என பெயர் வைத்ததே நான் தான் அவரிடமே ரொம்ப கூலாக பாலாஜி சொல்வதை பார்த்த ரசிகர்கள் அதையும் சுவாரஸ்யமான மீமாக போட்டு கலாய்த்துள்ளனர். அடப்பாவி சண்டாளா நீயாடா எனக்கு பேர் வச்ச என போட்டு கிண்டல் அடித்துள்ளனர்.

எதுக்கு
போன எபிசோட்ல, தேவையே இல்லாமல் அர்ச்சனாவுக்கும், அனிதா சம்பத்துக்கும் இடையே நடந்த ஒரு மொக்கை சீனையை காட்டிய நிலையில், அதையும் விடாம நோட் பண்ணி ‘எதுக்கு' என மீம் போட்டு பங்கம் பண்ணி உள்ளனர். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலை முடுக்கு என ஒவ்வொரு ஃபிரேமையும் ரசிகர்கள் ரசிப்பதால் தான் அந்த நிகழ்ச்சி டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











