நான் பத்ரகாளி ஆகமாட்டேன்.. இங்கேயும் முத்த பிரச்சனை தீரலையா.. ரேகாவின் ஹார்ட் சீன் செம!

சென்னை: நடிகை ரேகாவின் ஹார்ட் சீன் கமல் முன்னிலையில் சிறப்பாக அரங்கேறியது.

நிஷாவுக்கு ஹார்ட் கொடுத்தது மட்டுமில்லாமல், முத்தத்தையும் கொடுத்து அந்த இடத்தை கலகலப்பாக்கினார்.

அதே போல, மொட்டை தலை சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஹார்ட் பிரேக் கொடுத்து அடுத்த தீப் பொறியை பற்ற வைத்துள்ளார்.

அன்புக்கு அன்னை தெரசா

அன்புக்கு அன்னை தெரசா

அன்புக்கு அன்னை தெரசா மாதிரி, பிக் பாஸில் அன்பு மழை பொழிய போகிறேன் என வந்ததில் இருந்தே சொல்லி வருகிறார் நடிகை ரேகா. ஆனால், மேக்கப் போட்டு தனது பத்ரகாளி முகத்தை மறைத்து வருகிறார் என்பதை சுரேஷ் சக்கரவர்த்தி பல முறை சீண்டி வெளிப்படுத்தி வருகிறார்.

செம கன்ட்ரோல்

செம கன்ட்ரோல்

அவ்வப்போது சில இடங்களில் தனது கட்டுப்பாடுகளை இழந்தாலும், சிறிது நேரத்திலேயே, செல்லக்குட்டி, அம்முக்குட்டி, புஜ்ஜிக்குட்டி என சக போட்டியாளர்களை கொஞ்சி தனது கோபத்தை கட்டுப்படுத்தி விடுகிறார். ஆனால், இவர் கொஞ்சுவது ஆஜீத் போன்ற போட்டியாளர்களுக்கு எரிச்சலைத் தான் தருகிறது.

தீராத முத்தப் பிரச்சனை

தீராத முத்தப் பிரச்சனை

பிக் பாஸ் வீட்டில் எல்லோர் மனதையும் இதுவரை நிஷா தான் வென்று வருகிறார். அவருக்கு நடிகை ரேகாவும் ஹார்ட் முத்திரையை குத்தி அவரது கன்னத்தில் முத்தமிட்டார். பதிலுக்கு நிஷாவும் ரேகாவுக்கு முத்தம் கொடுக்க, அட போங்கயா உங்க முத்த பிரச்சனை இங்கேயும் தீரலையா என்பது போல ரசிகர்கள் செம கடுப்பானார்கள்.

கிள்ளி குத்தி முத்தமும்

கிள்ளி குத்தி முத்தமும்

போன தடவை ஷிவானிக்கு ஹார்ட் பிரேக் கொடுத்தேன், இந்த முறை கேப்ரில்லாவுக்கு கொடுக்கப் போகிறேன் என அவரை அழைத்த நடிகை ரேகா, அவருக்கு ஹார்ட் பிரேக் கொடுத்து விட்டு, சாரி செல்லக்குட்டி என முத்தமும் கொடுத்தார். அதை பார்த்த கமல் சும்மா இருப்பாரா? இதைத் தான் கிள்ளி குத்தி முத்தமும் கொடுக்கிறது என்பார்கள் என ரேகாவை ஓட்டினார்.

பத்ரகாளி ஆகமாட்டேன்

பத்ரகாளி ஆகமாட்டேன்

மொட்டை தல சுரேஷுக்கும் ரேகாவுக்கும் சமையல் கட்டில் சண்டை ஆரம்பிக்காத நிலையில், சுரேஷுக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டு இருந்த ரேகா, இந்த முறை சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஹார்ட் பிரேக் கொடுத்தார். மேலும், நான் எப்போதுமே இந்த வீட்டில் பத்ரகாளி ஆகமாட்டேன் எனக் கூறினார்.

மேக்கப் போட்டு மறைக்கிறாங்க

மேக்கப் போட்டு மறைக்கிறாங்க

சுரேஷ் சக்கரவர்த்தி தொடர்ந்து நடிகை ரேகாவை சீண்டி வருவதாலும், மேக்கப் போட்டு தனது ஆத்திரத்தை எல்லாம் அவர் மறைத்து வைக்கிறார் என கமெண்ட் செய்ததாலும் தான் இப்போ கூப்பிட்டு வச்சு ரேகா வைத்து செய்தார். ரேகாவுக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று பார்த்தார் ஆனால், அதை சுரேஷ் அழகாக கடைசியில் தட்டிச் சென்று விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X