Just In
- 2 min ago
திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டார்... நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்!
- 8 min ago
என்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா? இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா?
- 37 min ago
சூர்யாவின் படங்களை மிஸ் பண்ணாம பார்பேன்.. கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேச்சு!
- 48 min ago
Movie Review : ஏலே திரைவிமர்சனம்
Don't Miss!
- Finance
ஓரே நாளில் 5.43 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
- Sports
பேட்டிங்கின்போது சரியான ஷூக்களை உபயோகிக்கணும்... சீனியர் வீரரின் அட்வைஸ்!
- Lifestyle
ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை படிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!
- News
தமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்!
- Automobiles
ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு!
சென்னை: என்னடா மறுபடியும் பிக் பாஸ் புரமோ வராதா, இன்னைக்கு யாரும் சண்டை போட்டுக்க மாட்டாங்களா என பிக் பாஸ் முடிந்ததும் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏகப்பட்ட மீம்களையும் போஸ்ட்களையும் போட்டு வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் ஒரு அதிரடியாக பிக் பாஸ் புரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டு பிக் பாஸ் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
குட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
அது என்னவென்றால், மறுபடியும் முதல்ல இருந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஒளிபரப்பாக உள்ளதாம்.

4வது சீசன்
ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் டர்ன்களுடன் கொரோனா காலத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் முடிவு பெற்றது. ஆரி டைட்டில் வின் பண்ணுவார் என்று ஆரம்பத்தில் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க, ஆனால், அப்படியொரு அபார வெற்றியை ஆரி இந்த சீசனில் வென்றார்.

பரபரப்பு புரமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தினமும் அந்த நிகழ்ச்சியை புரமோட் பண்ணும் விதமாக போடப்படும் 3 புரமோக்களும் ஒரு அன்சீன் புரமோவையும் பார்க்கவே ரசிகர்கள் ரொம்ப ஆவலுடன் இருந்தனர். அந்த புரமோக்கள் வந்ததும் இன்னைக்கு யாருக்கும் யாருக்கும் சண்டை, என்ன சர்ப்ரைஸ் இருக்கு என அறிந்து கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சியையும் பார்த்து வந்தனர்.

பாலா லீலைகள்
இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் தான் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் ஏகப்பட்ட லீலைகள் நடத்தினார். கெட்டவன் டு நல்லவன் கேமை சிறப்பாக ஆடி ரசிகர்களின் ஓட்டுக்களை அள்ளி அன்பு கேங்குக்கு மொத்தமாக ஆப்பு வைத்து ரன்னர் அப் ஆனார். ஆரியும் பாலாவும் சண்டை போட்டுக் கொண்டும் சமாதானம் ஆகியும் இந்த சீசன் வெற்றியாளர்களாக மாறினர்.

மீண்டும் பிக் பாஸ்
இந்நிலையில், தற்போது திடீரென விஜய் டிவியில் இருந்து பிக் பாஸ் புரமோ வந்ததும் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாகவே இருந்தது. கிராண்ட் ஃபினாலேவில் தொடங்கி கிராண்ட் ஓப்பனிங் என காட்டி விட்டு, அந்த திருப்பி இல்லைங்க, மறுபடியும் முதல்ல இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஒரு வாய்ப்பு உங்களுக்கு என புது புரமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

விஜய் மியூசிக்கில்
விஜய் டிவியின் கிளை சேனலான விஜய் மியூசிக்கை பிரபலபடுத்தும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் காட்சிகள் தினமும் இரவு 10.30 மணிக்கு மேல் ஒளிபரப்பி வந்தனர். இந்நிலையில், மீண்டும் விஜய் மியூசிக்கிலேயே பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 25ம் தேதி முதல் மதியம் 2.30 மணிக்கு மிஸ் பண்ணாம பாருங்க..

சுரேஷ் தாத்தா சேட்டைகள்
இந்த சீசனை ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்ற சுரேஷ் தாத்தாவின் சேட்டைகள், சனம் ஷெட்டி, பாலா மோதல், ரியோ நிஷா காமெடி, ஷிவானிக்கு எல்லாரும் ஹார்ட் பிரேக் குத்தியது, வேல்முருகன் மற்றும் ஆஜீத்தின் கச்சேரி, ஆரியை ஹவுஸ்மேட்ஸ் ஒதுக்கியது என மிஸ் பண்ண அனைத்து என்ஜாய்மென்ட்களையும் மீண்டும் ரசிகர்கள் பார்க்க ஒரு வாய்ப்பை விஜய் டிவி உருவாக்கி உள்ளது.

மறுபடியுமா?
இந்த சீசனே செம போர், இதில் மறுபடியும் முதல்ல இருந்து இதை மீண்டும் பார்க்க வேண்டுமா? புதுசா ஏதாவது போடுங்கப்பா.. அடுத்த சீசனை சீக்கிரம் ஆரம்பியுங்க.. அதிலாவது நல்ல போட்டியாளர்களையும், நல்ல டாஸ்க்குகளையும் கொண்டு வாங்க இத்தனை கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை இன்னும் சிறப்பா நடத்துங்க என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.