என்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ!

சென்னை: என்னடா இன்னைக்கு இதுவரை வெளியான புரமோக்களில் டான்ஸ் மிஸ் ஆகிடுச்சேன்னு நினைச்ச ரசிகர்களுக்காக தற்போது வெளியான 4வது புரமோவில் அந்த குறையும் தீர்ந்தது.

தமிழ் சினிமான்னாலே, ஆக்‌ஷன், ரொமான்ஸ், டான்ஸ், சென்டிமென்ட் தானே, ஆனால், 4வது புரமோவில் ஷிவானி நாராயணன் நடனம் ஆடுவது பாலாஜி கூட இல்லைங்க வேல்முருகன் கூடத்தான்.

பாலாஜி கூட ரொமான்ஸ் பண்றதையே தாங்கிக்க முடியாத ஷிவானி ஆர்மி, இதை எல்லாம் எப்படித் தான் தாங்கிக் கொள்ள போகிறார்களோ?

அன்சீன் புரமோ

அன்சீன் புரமோ

விஜய் மியூசிக்கில் தினமும் இரவு 10.30 மணிக்கு பிக் பாஸ் அன்சீன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காலை 9 மணிக்கு முதல் புரமோவும், 12 மணிக்கு 2வது புரமோவும் 3 மணிக்கு 3வது புரமோவும் வெளியாகும். (சில நேரங்களில் மாறும்) மாலை 6 மணிக்கு விஜய் மியூசிக்கில் அன்சீன் புரமோ வெளியாகி வருகிறது.

வேல்முருகனுடன் ஆடும் ஷிவானி

வேல்முருகனுடன் ஆடும் ஷிவானி

தற்போது வெளியாகி உள்ள அந்த புரமோவில் மேயாத மான் படத்தின் எங்க வீட்டு குத்து விளக்கு பாட்டுக்கு, பாடகர் வேல்முருகனுக்கு நடனம் சொல்லி தருகிறார் ஷிவானி. இருவரும் இணைந்து நடனமாடும் செம காமெடியான புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மினி சினேகன்

மினி சினேகன்

ஏற்கனவே சனம் ஷெட்டி உடன் வேல்முருகன் "வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" பாட்டுக்கு நடனம் ஆடுவதை பார்த்தே ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அதன் பிறகு சனம் ஷெட்டியை பஞ்சாமிர்தம் பிழிவது போல பிடித்து அவர் தூக்கியதையும் கட்டிப் பிடித்ததையும் பார்த்த ரசிகர்கள் அவருக்கு மினி சினேகன் பட்டத்தையே கொடுத்து விட்டனர்.

பார்த்தும்மா ஷிவானி

பார்த்தும்மா ஷிவானி

இரண்டாவது புரமோவில் பாலாஜி முருகதாஸ் உடன் ரொமான்ஸ் பண்ணும் ஷிவானி அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருந்தால் கூட ரசிகர்கள் பெரிதாக ஃபீல் பண்ணியிருக்க மாட்டார்கள். வேல்முருகனுக்கு ஷிவானி டான்ஸ் சொல்லித் தருவதை பார்த்த நெட்டிசன்கள், பார்த்து பத்திரமா ஷிவானி என அலர்ட் செய்து வருகின்றனர்.

காக்கா வலிப்பு

காக்கா வலிப்பு

ஷிவானி நாராயணன் அழகா சிரிச்சுக்கிட்டே க்யூட்டா ஸ்லோ ஸ்டெப்களை சொல்லிக் கொடுத்துட்டு இருக்கும் போது, திடீரென காக்கா வலிப்பு வந்தது போல, எகிறி குதித்தெல்லாம் வேல்முருகன் ஆடியதை பார்த்த ரசிகர்கள் அரண்டு போய் விட்டனர். யாராவது அவர் கையில இரும்பு சாவியை கொடுங்க என்று சொல்வது போல கமெண்ட்டுகளை தெறிக்கவிடுகின்றனர்.

இவர் தான் வெளியே போறாரா?

இவர் தான் வெளியே போறாரா?

வேல்முருகன் ஷிவானி உடன் நடனம் ஆடுவதை பார்த்து பொறுக்க முடியாத ரியோ ராஜ், சப்போஸ் இந்த வாரம் நீ வெளியே போய்ட்டேனா இந்த மாதிரி பண்ணு என கலாய்த்ததும், என்னைய வச்சி செய்றாங்க பிக் பாஸ் என கேமரா முன் நின்று வேல்முருகன் பேசும் போது, நீ எங்களை வச்சி செய்யாத என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இதை அன்சீன்லயே வச்சுடுங்க

இதை அன்சீன்லயே வச்சுடுங்க

மேலும், பிக் பாஸ் ரசிகர்கள், தயவு செஞ்சு இந்த கருமத்தை எல்லாம் அன்சீன்லயே வச்சுடுங்க என பிக் பாஸ் எடிட்டருக்கு பெரிய ரெக்வஸ்ட் வைத்து வருகின்றனர். பார்க்கலாம் இன்னைக்கு மெயின் எபிசோட்ல இது வருதா? இல்லை அன்சீன்லயா என்றும், ஷிவானி செம க்யூட்டா ஆடுறாங்களே என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X