இன்னைக்கு ஜெயில் டேவா.. பாலாவை ஜெயில்ல போட சொன்னா.. ரசிகர்களை ஜெயில்ல போட்டுட்டீங்களே!

சென்னை: விஜய் மியூசிக்கில் வெளியான அன்சீன் புரமோவையும் பார்த்து ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சி முழுவதுமே ஜெயில் டாஸ்க் போலவே மாறிவிட்டன.

இதுவரை வெளியான 3 நிகழ்ச்சி புரமோ மற்றும் அன்சீன் புரமோ என எல்லாவற்றிலும் பாலாஜி முருகதாஸ், சுச்சி தரிசனம் தான்.

ஒய் திஸ் கொலவெறி

ஒய் திஸ் கொலவெறி

போரிங் போட்டியாளர் என்று தான் கண்ணாடி சிறைக்குள் அவர்களை பிக் பாஸ் அடைத்துள்ளார். ஆனால், அங்கே போயும் பாட்டு பாடுறேன் என்கிற பேரில், இருவரும் போடும் மொக்கை அய்யோ சாமி தாங்க முடியலை. ஒய் திஸ் கொலவெறி பாடலை சுச்சியை பார்த்து பாடுகிறார் பாலா.

ஹேப்பியா இல்லை பாலா

ஹேப்பியா இல்லை பாலா

காட் ஐ எம் டையிங் நவ்.. ஷீ இஸ் ஹேப்பி ஹவ் என பாலா சுச்சியை பார்த்து பாடிய உடனே, நான் ஹேப்பியா இல்லை பாலா என சுசித்ரா சீரியல் வில்லி போல, பேச ஆரம்பித்து விட்டார். அன்சீன் புரமோவிலும் இவர்கள் இருவரும் தானா என்று புரமோவை பார்த்து விட்டே அப்படியே ஏகப்பட்ட பட்ட பேர் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

யாருக்கு ஜெயில்

யாருக்கு ஜெயில்

பாலாவுக்கு ஜெயில் கிடைச்சிடுச்சுன்னு முதல் புரமோவை பார்த்து ஹேப்பியான ரசிகர்கள், தற்போது 4 புரமோவிலும் அதே கொடுமையை பார்த்து விட்டு, ஆக்சுவலா யாருக்கு ஜெயில் என கன்ஃப்யூஸ் ஆகி உள்ளனர். இதுக்கு இன்றைய ஷோவை பார்க்காமலே போயிடலாம். இதுக்கு மேல வேற எதுவும் இருக்காது டோய் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

யார் அடித்தாரோ

யார் அடித்தாரோ

மேலும், பாலாவை பார்த்து சுச்சி கண்ணீர் விடுவது எல்லாம் ரொம்ப ஓவர். தொடர்ந்து ரெண்டு வாரம் கண்ணாடி சிறைக்குள் போயிட்டு வந்த ஆரியே கவலைப்படாம இருந்தார். ஒரே ஒரு நாளில் ஜெயிலுக்குப் போயிட்டு, தென்பாண்டி சீமையிலே யார் அடித்தாரோ பாட்டும், சுச்சியின் நடிப்பு அழுகையும் என அன்சீன் புரமோ ரசிகர்களை ரொம்பவே காண்டாக்கி உள்ளது.

போதும் நிறுத்துங்க

போதும் நிறுத்துங்க

போதும் வலிக்குது, இதுக்கு மேல எங்களால தாங்க முடியாது என பிக் பாஸிடம் கெஞ்சாத குறையாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பாலாவை வச்சு செய்றாங்களோ இல்லை நம்மளை நல்லாவே வச்சு செஞ்சிட்டாங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X