twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதை ஏன் டா அன்சீன்ல போடுறீங்க.. தலையில் முட்டை அடித்து விளையாடும் ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பான ஃபேன்ஸ்!

    |

    சென்னை: ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும், முட்டையை வைத்து விளையாடி, தலையில் அடித்துக் கொள்ளும் வேற லெவல் புரமோ அன்சீன் புரமோவாக வெளியாகி உள்ளது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

    முதல் மற்றும் இரண்டாவது புரமோவில், பாலா, ஆரி போன் டாஸ்க் ஓடியது.

    மூன்றாவது புரமோவில் அர்ச்சனாவுக்கு கால் பண்ண ஆஜீத், அர்ச்சனாவிடம் உங்க கேம் ஸ்ட்ராட்டஜி தான் என்ன என்பது போல் கேள்வி எழுப்பினார்.

    இன்னைக்கு ஃபன் இருக்கு

    இன்னைக்கு ஃபன் இருக்கு

    பிக் பாஸ் நிகழ்ச்சியில், தொடர்ந்து சண்டையே போட்டுக் கொண்டிருப்பதால், ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகி உள்ளனர். சண்டையாகவே இருந்தாலும், தொடர்ந்து நடந்தால் அதுவும் போரிங் ஆகிடும். அதனால், இன்றைய நிகழ்ச்சியில் முட்டையை வைத்து அடித்துக் கொள்ளும் ஜாலியான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முட்டையை அடித்து

    முட்டையை அடித்து

    முட்டையை தலையில் அடித்து ஹவுஸ்மேட்கள் விளையாடும் செம சூப்பரான விஷயம் இன்றைய நிகழ்ச்சியில் உள்ளது என்பதை அன்சீன் புரமோவாக போட்டுக் காட்டி உள்ளனர். ரம்யா பாண்டியன் ஷிவானி தலையில் முட்டையை அடிப்பதும், பாலா ரம்யா தலையில் முட்டையை அடிப்பதும், நிஷா ஆரி தலையில் முட்டை அடிப்பதும் என புரமோவே செம சூப்பர்.

    சோமை துறத்தும் கேபி

    சோமை துறத்தும் கேபி

    புரமோவில் இறுதியில் சோமசேகரை கேபி துரத்திக் கொண்டு ஓடுவது என வேற லெவல் என்டர்டெயின்மென்ட்டாக இந்த புரமோ இருக்கு. அனிதாவுக்கு நிஷா முட்டை அடிப்பது. ரியோவுக்கு பாலா அடிப்பது என ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது. இதைப் போய் ஏன் அன்சீன் புரமோவா போட்டீங்க என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    காண்டான ரசிகர்கள்

    காண்டான ரசிகர்கள்

    ஆனால், இதனை மெயின் நிகழ்ச்சியில் வைக்காமல் ஏன் அன்சீனில் வைக்கிறீங்க என பிக் பாஸ் குழுவிடம் ரசிகர்கள் செம காண்டாகி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எப்படி இருந்தாலும், இந்த சீன் இன்றைய எபிசோடிலே இடம் பெறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Recommended Video

    Captaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா? BALA vs Jithan RAMESH
    எடிட்டர் வேலை

    எடிட்டர் வேலை

    எபிசோடில் வரும் காட்சிகளை அன்சீன் புரமோவில் வைப்பது. அன்சீன் காட்சிகளை எபிசோடில் வைப்பது, புரமோவில் ஒன்று காட்டி விட்டு, நிகழ்ச்சியில் அதனை கட் செய்து விடுவது என பிக் பாஸ் எடிட்டர் எப்போதுமே பாதி தூக்கத்தில் வேலை செய்கிறாரோ என்றும் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Bigg Boss Tamil 4 unseen promo reveals housemates attacks others with eggs. Fans request to show this in today episode.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X