For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Bigg Boss Tamil 4 Unseen: மொட்டை சுரேஷ் குறட்டை தாங்க முடியல.. பங்கம் பண்ணும் ரியோ ராஜ்.. வொர்த்!

  |

  சென்னை: விஜய் டிவியில் இரவு 9.30 முதல் 10.30 வரை ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஏகப்பட்ட நல்ல காட்சிகளை எடிட்டர் இரக்கமே இல்லாமல் வெட்டி விடுகிறார்.

  யார் captain?தலையில் அடித்து கொண்ட Sanam Shetty | Promo 1

  பிக் பாஸ் தமிழ் 4வது சீசனின் நான்காம் நாள் எபிசோடின் அன்சீன் காட்சிகள் ஹாட்ஸ்டாரின் தயவால் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

  அதில், மொட்டை தல சுரேஷை ரியோ ராஜ் பங்கம் பண்ணும் காட்சிகள் அட போட வைக்கின்றன.

  உங்களால குழந்தைய சரியா வளர்க்க முடியலன்னா.. அப்புறம் எதுக்கு பெத்துக்குறீங்க.. கொதித்த ரசிகர்கள்!

  மொறட்டு பார்வை

  மொறட்டு பார்வை

  பார்க்கத்தான் தாத்தா மாதிரி வயசானவராக இருக்கிறார். ஆனால், செய்வதெல்லாம் வில்லத்தனம் தான். தன்னை ஒரு கடும் போட்டியாளராக காட்டிக் கொள்ள நினைக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி எல்லோரிடமும் வான்டட்டாக போய் பேசி சண்டை இழுத்து விட்டு புரமோவில் வந்து விடுகிறார்.

  மரண மாஸ்

  மரண மாஸ்

  இந்த சீசனில் பிக் பாஸ் ரசிகர்களுக்கும் மீம் க்ரியேட்டர்களுக்கும் பக்காவான மரண மாஸ் என்டர்டெயின்மென்ட்டே நம்ம மொட்டை பாஸ் தான். அவர் இல்லை என்றால், பிக் பாஸ் முதல் வாரம் விறுவிறுப்பாக சென்றே இருக்காது என்றே சொல்லலாம். அதுவும் ஆடும் போது தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு அவர் போடும் ஸ்டெப்களுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

  செம தில்லு

  செம தில்லு

  "எங்க தல மாறி தில்லா இருக்க கத்துகடா" என ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் சண்டையின் போது, அரை டவுசர் போட்டுக்கிட்டு சோபா மீது காலை தூக்கி வைத்துக் கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தி கொடுத்த போஸை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு மீம் மெட்டிரீயலாகவே மாற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

  மொட்டை சுரேஷையே ஓட்டும் ரியோ

  மொட்டை சுரேஷையே ஓட்டும் ரியோ

  இந்நிலையில், போன எபிசோடில் மொட்டை தலை சுரேஷ் சக்கரவர்த்தியே நம்ம ரியோ ராஜ் ஓட்டியுள்ள காட்சிகள் அன்சீனில் வெளியாகி வைரலாகி வருகிறது. அட போங்கய்யா இப்படி நல்ல நல்ல சீனை எல்லாம் ஏன் கட் பண்றீங்க என ரசிகர்கள் விஜய் டிவியை வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  குறட்டை விடுறாரு தூங்க முடியல

  குறட்டை விடுறாரு தூங்க முடியல

  பிக் பாஸ் வீட்டில் பாத்ரூமுக்கு போடப்பட்ட கண்டிஷன் கமல் சாரின் பரிந்துரையின் பேரில் முதல் நாளே திறக்கப்பட்டது. ஆனால், இன்னமும் ஆண்களுக்கான பெட்ரூம் சாவி கொடுக்கப்படவில்லை. இதனால், கார்டன் ஏரியாவிலே ஆண்கள் படுத்துக் கொள்கின்றனர். மொட்டை பாஸ் விடும் குறட்டை சத்தத்தால் தூங்க முடியல தயவு செஞ்சு, அவருக்காவது ஒரு பெட் கொடுங்க பிக் பாஸ் என ரியோ முறையிடும் அன்சீன் வைரலாகி வருகிறது.

  ஓவரா கேட்டா அப்செட் ஆகிடுவாரு

  ஓவரா கேட்டா அப்செட் ஆகிடுவாரு

  ரியோ ராஜை தொடர்ந்து, சுரேஷ் சக்கரவர்த்தியும், கேமராவுக்கு முன்பு நின்று கொண்டு, ப்ளீஸ் பிக் பாஸ் என பச்சை குழந்தை மாதிரி சொன்னதையே பல முறை சொல்லி கடுப்பேற்ற, இப்படி ஓவரா கேட்டா பிக் பாஸ் அப்செட் ஆகிடுவாரு போதும் வாங்க என ரியோ மீண்டும் பங்கமாக மொட்டை சுரேஷை கலாய்த்துள்ளார். ஆனால், அனிதா சம்பத்திடம் கோபித்துக் கொண்டபடி ரியோவிடம் அவர் கோபமே கொள்ளவில்லை.

  செம நியூஸ்

  செம நியூஸ்

  இப்படி அன்சீன் காட்சிகளை விஜய் டிவி வெளியிடவில்லை என்கிற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து ரசிகர்கள் வைத்து வருவது விஜய் டிவியின் காதுகளையும் எட்டி உள்ளன. வரும் திங்கள் முதல் வெள்ளி வரை அன்சீன் காட்சிகள் இரவு 10.30 மணிக்கு மேல் விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

  English summary
  Bigg Boss Tamil 4 Unseen must be a worth watchable one, Rio Raj trolls Suresh Chakaravarthy for asking another bed room key in Bigg Boss house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X