Don't Miss!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதுவும் லீக் ஆகிடுச்சா.. இன்னைக்கு நடக்கப் போற செங்கல் டாஸ்க்ல யார் ஜெயிக்கப் போறது தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் எடிட்டர் புரமோவை எப்படித்தான் கட் பண்ணாலும், நம்ம பிக் பாஸ் ரசிகர்கள், ஒவ்வொரு ஃபிரேமையும் எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப்பில் ஜூம் பண்ணி பார்த்து, எல்லாத்தையும் லீக் பண்ணிடுறாங்க..
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள், அந்த செங்கல் டாஸ்க்கில் இந்த ஜோடி தான் ஜெயித்தது என ஆதாரத்துடன் வாதாடி வருகின்றனர்.
இனிமே எந்த நம்பரை காட்டுவதாக இருந்தாலும் பிளர் பண்ணுங்க பிக் பாஸ் எடிட்டர் எல்லாமே லீக் ஆனா போர் அடிக்கும்ல!
நீங்க இங்க சிங்கம் இல்லை.. என்னை எச்சரித்த சுதா கொங்கரா.. நடிகர் சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!
மூணு மணி எடிட்டர்
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ சரியாக 3 மணிக்கு வெளியான நிலையில், அவரையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த மூணு மணி எடிட்டர் முழிச்சிக்கிட்டாரு போல.. யோவ் பிக் பாசு எடிட்டருக்கு ஒரு டீ சொல்லுயா என மீம்களை போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர்.
இதெல்லாம் ஒரு டாஸ்க்கா?
சும்மா டான்ஸ், அழுகாச்சி, வாய் சண்டை போட்டா பிசிக்கல் டாஸ்க் கொடுக்க வேண்டியது. பிசிக்கல் டாஸ்க் கொடுத்தா, இதெல்லாம் ஒரு டாஸ்க்கா? என பிக் பாஸை திட்ட வேண்டியது என்ன ஃபேன்ஸோட பொழப்பு இப்படி ஆகிடுச்சே.. இந்த ஃபன்னில் என்ன பாம் இருக்கப் போகிறதோ என்றும் பதறுகின்றனர்.
எந்த ஜோடியா இருக்கும்
பிக் பாஸ் மூன்றாவது புரமோவில் சோமசேகர் ரம்யா, 1:23 நிமிஷம், ரமேஷ் சனம், 2:13 நிமிஷம், ரியோ நிஷா 1:86 நிமிஷம் என டைம் போடும் அட்டவணை ஷாட்டும் காட்டப்பட்டுள்ளது. எல்லாத்துக்கும் மேல் 1:06 நிமிஷத்தில் ஒரு ஜோடி கிராஸ் பண்ணியிருக்கு அது எந்த ஜோடியா இருக்கும் என்ற கேள்விகளையும், ஆரி சுச்சியாகத் தான் இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
வெல்கம் டு பிக் பாஸ் 4
இன்றைய இரண்டாவது புரமோவில் கேபி மற்றும் ஷிவானி நாராயணன் இடையே ஏற்பட்ட சண்டையை பார்த்த ரசிகர்கள், அதுக்கு ரியோ ராஜ் கொடுக்கும் சூப்பரான பன்ச் ஆன வெல்கம் டு பிக் பாஸ் 4 என்பதை போட்டு செம ஓட்டு ஓட்டி வருகின்றனர். ரியோ ராஜின் குறும்புத்தனம் ஏகப்பட்ட ரசிகர்கள் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஓவர் சீன் அர்ச்சனா
ஒண்ணுமே பண்ணலைன்னாலும், நல்லா சவுண்டா பேசி பெரிய அளவில் பர்ஃபார்ம் பண்ணிவிடுவார் அர்ச்சனா என்பதை இந்த நெட்டிசன் பயங்கரமாக ட்ரோல் செய்துள்ளார். செங்கல் மீது கால் வைத்ததும், யாரும் பார்க்கல பார்க்கல என கத்தி கூச்சலிட்ட அர்ச்சனாவின் ஓவர் சீனை, முள் மீது கால் வைத்தது போல கத்துகிறாரே என கலாய்த்துள்ளார்.
எந்த ஜோடி ஜெயித்தது?
இந்த செங்கல் மீது ஏறி ஜெயிக்கும் போட்டியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்து ரசிப்பதற்கு முன்னதாகவே, இந்த போட்டியில் எந்த ஜோடி ஜெயித்தது என்ற உண்மையையும் புரமோவில் இருந்தே ஜூம் செய்து சில தீவிர ரசிகர்கள் லீக் செய்து விட்டனர். ஆரி சுச்சியை விட பாலாஜி ஷிவானி டீம் 1.01 நிமிடத்தில் வெற்றி பெற்றது எனக் கூறி வருகின்றனர்.