ப்ரோமோக்குள்ள ப்ரோமோவா...பிக்பாஸ் ஸ்பெஷல் கெஸ்ட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து விட்ட நிலையில் விரைவில் இறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளது. ஃபினாலே வாரம் நடைபெற்று கொண்டிருப்பதால் சிறப்பு விருந்தினர்களின் வருகையும் நடக்கிறது.
நேற்றைய எபிசோடில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களான சுருதி, நாடியா சாங், சிபி, அபினய் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக போனில் பேசியதுடன் நேரிலும் சிலர் வந்துள்ளனர்.

பிக்பாஸ் ஃபினாலே எப்போ
106 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 102 வது நாள். அதனால் 106வது நாளான ஜனவரி 16ம் தேதியன்று ஃபைனல்ஸ் நடத்தப்படும் என கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இந்த ஆண்டு இறுதிப் போட்டி, சில மாற்றங்களுடன் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வந்த தாமரை
இன்றைய 102 வது நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில் தாமரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். வெளியேறிய நான்கு நாட்களில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அவரை பாவனி, பிரியங்கா, ராஜு, அமீர் ஆகியோர் சந்தோஷமாக வரவேற்கின்றனர். வழக்கம் போல் ராஜு, தாமரை ஃபன் பேச்சுக்கள் நடக்கிறது.

இன்றைய ஸ்பெஷல் கெஸ்ட்
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடுத்த ஸ்பெஷல் கெஸ்ட் யார் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ராஜு, விஜய் டிவி தொகுப்பாளராக மாறி தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய் டிவி.,யில் புகழ்பெற்ற சீரியல்களான செந்தூரப்பூவே, ஈரமான ரோஜாவே 2 டீமை சேர்ந்த நடிகர்கள் வீட்டிற்குள் வருகிறார்கள். பிக்பாஸ் போட்டியாளர்களை பாராட்டி நடிகர் ரஞ்சித் பேசுகிறார்.

இது தான் காரணமா
செந்தூர பூவே சீரியல் சமீபத்தில் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சீரியல் ஜனவரி 17ம் தேதி முதல் மீண்டும் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதே போல் புதிய சீரியலான ஈரமான ரோஜாவே 2 சீரியலும் ஜனவரி 17ம் தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பிக்பாஸ் முடிந்த பிறகு அந்த நேரத்தில் இந்த இரு சீரியல்களும் தான் ஒளிபரப்பாக உள்ளன.
Recommended Video

கலாய்க்கும் நெட்டிசன்கள்
அதனால் பிக்பாசின் ஃபினாலே வாரத்திலேயே இந்த சீரியல்களுக்கான ப்ரோமோவையும் விஜய் டிவி துவக்கி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் ப்ரோமோவிற்குள் சீரியல்கள் ப்ரோமோவை ஒளிபரப்புகிறீர்களே. ஒரே கல்லில் இரண்டு மாங்காயா என விஜய் டிவியை கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











