பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் மலேசியா போட்டியாளரும் பங்கேற்பு.. 10வது போட்டியாளராக நுழைந்த நதியா யார்?

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் நதியா சங் 10வது போட்டியாளராக அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகி உள்ளது.

இந்த முறை போட்டியாளர்கள் பலரும் பல்வேறு துறைகளில் இருந்து வந்தவர்களாக உள்ளது இந்த சீசனுக்கு பிளஸா மைனஸா என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

இதுவரை பத்து பேர்

இதுவரை பத்து பேர்

பிக் பாஸ் சீசன் 5ல் இதுவரை 10 பேர் போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர். முதல் போட்டியாளராக கானா பாடகி இசைவாணி, இரண்டாவது போட்டியாளராக ராஜு ஜெயமோகன், மூன்றாவதாக மதுமிதா, நான்காவதாக அபிஷேக் ராஜா, 5வதாக நமிதா மாரிமுத்து, 6வதாக பிரியங்கா, 7வதாக அபிநய், 8வது போட்டியாளராக பாவ்னி ரெட்டி, 9வது போட்டியாளராக சின்ன பாப்பா மற்றும் 10வது போட்டியாளராக மலேசியவை சேர்ந்த நதியா சங் நுழைந்துள்ளார்.

மலேசியா போட்டியாளர்

மலேசியா போட்டியாளர்

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில மலேசிய போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இந்த சீசனிலும் ஒரு மலேசியா போட்டியாளர் கலந்து கொண்டிருக்கிறார். மலேசியாவை சேர்ந்த பிரபல டிக் டாக் கலைஞர் நதியா சங் தான் அந்த 10வது போட்டியாளர்.

இவர் மட்டுமே

இவர் மட்டுமே

ஜிபி முத்து உள்ளிட்ட டிக்டாக் பிரபலங்கள் கலந்து கொள்ளப் போவதாகன தகவல்கள் வெளியான நிலையில், அவர் பங்கேற்கவில்லை. இப்போதைக்கு டிக் டாக் பிரபலமாக நதியா சங் கலந்து கொண்டு இருக்கிறார். ஏகப்பட்ட பெண் போட்டியாளர்கள் என்பதால், கடந்த சீசனை விட இந்த சீசன் நிச்சயம் கலர்ஃபுல்லாக கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 போட்டியாளர்கள்

18 போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் லாஞ்சிலேயே மொத்தம் 18 போட்டியாளர்கள் அறிமுகம் ஒருவர் ஒருவராக நடைபெற்று வருகிறது. கானா பாடகர், நாட்டுப்புற கலைஞர், திருநங்கை, யூடியூபர், சின்னத்திரை நடிகர்கள், டிக் டாக் பிரபலம், காஸ்ட்யூம் டிசைனர், நடிகர் என பல்வேறு தரப்பு போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பெண்கள் அதிகம்

பெண்கள் அதிகம்

மொத்தம் 18 பேர் பங்கேற்க போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 7 ஆண்களும் 10 பெண்களும் ஒரு திருநங்கையும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள நிலையில், சரி சம போட்டியாக இந்த சீசன் இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லா இருக்குமா? இல்லை போர் அடிக்குமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்கள் அதிகம் இல்லாததால் போட்டியாளர்களிடம் நடிப்பு இல்லாமல் நிஜ முகங்கள் தென்படும் என்பது மட்டும் உறுதி என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

வேட்டியை மடிச்சுக் கட்டி

வேட்டியை மடிச்சுக் கட்டி

டிக் டாக் பிரபலமான நதியா சங் வேட்டி சட்டை அணிந்து கொண்டு தர லோக்கலாக டங்கா மாரி பாடலுக்கு வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு செம குத்து குத்தி நிகழ்ச்சியில் அதிரடி என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் கமல்ஹாசனிடம் பேசிய நதியா சங் தன்னை பற்றி கூறினார்.

3 பெண் குழந்தைகள்

3 பெண் குழந்தைகள்

நதியா சங்கிற்கு திருமணம் ஆகி விட்டதாகவும், மூன்று அழகான பெண் குழந்தைகளுக்கு தான் ஒரு அம்மா என்றும் அவர் கூறியுள்ளார். மூன்று பெண் குழந்தைகளை விட்டு விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நதியா வந்துள்ளது சில சாதனைகளை செய்ய வேண்டும் என்கிற ஆவல் இருப்பதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X