ப்ளீஸ்... கதவை திறங்க நான் வெளியில போறேன்.. பிரியங்காவால் கடுப்பான நிரூப் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிரியங்காவின் பேச்சால் கடுப்பான நிரூப் வெளியில் போகிறேன் என்று கூறுகிறார்.
Recommended Video
பிக் பாஸ் வீட்டில் தற்போது தாமரை, பிரியங்கா, பாவனி, அமீர்,ராஜு,நிரூப். சிபி, சஞ்சீவ் என மொத்தம் 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இதில் முதலிடத்திற்கு செல்லும் போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

டபுள் எவிக்ஷன்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதையடுத்து குறைந்த வாக்குகளை பெற்ற வருண் மற்றும் அக்ஷரா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதையடுத்து , எஞ்சி இருக்கும் நாட்களிலும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கிராண்ட் பைனல்
இதையடுத்து இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கிராண்ட் பைனல் தொடங்கிவிட்டது என்று பிக்பாஸ் கூறியிருக்கிறார். பைனல் லிஸ்ட் ஆக யார் முதலாவதாக சேவ் ஆவார்கள் என்று இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறி வருகின்றனர். யார் இந்த இடத்திற்கு செல்வதற்கு தகுதி இல்லை என்பதன் காரணத்தை சொல்ல சொல்லி பிக்பாஸ் எப்போதும் போல கொளுத்திப் போட்டுள்ளார்.

கடுப்பான நிரூப்
இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்கா நிரூப்பிற்கு டிக்கெட் டு பினாலே கிடைப்பதில் விருப்பம் இல்லை என்று கூறுகிறார். உன்ன மாதிரி பலமான ஆள்கூட என்னால் மோத முடியாது என்கிறார். பிரியங்காவின் இந்த பேச்சால் கடுப்பான நிரூப், பிக்பாஸ் ப்ளீஸ் டோர திறந்து விடுங்க நான் வெளியில போய்டுறேன் என்று ஆத்திரத்தில் கத்துகிறார்.

ரசிகர்கள் ஆர்வம்
ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த நிரூப், பிரியங்கா நாட்கள் செல்ல செல்ல பரம எதிரியாகவே மாறிவிட்டனர்.தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவை பார்த்தால் இன்றைக்கு தரமான சம்பவம் இருக்கு என்று பிக் பாஸ் ரசிகர்கள் இன்றைய எபிசோடை பார்க்க இப்போதே தயாராகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











