பிரியங்காவை ஜெயிக்க வைக்க உள்ளே வந்த ஸ்லீப்பர் செல் நிரூப்… நெட்டிசன்ஸ் செம கலாய் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் உன்ன மாதிரி பலமான ஆள்கூட என்னால் மோத முடியாது என்று பிரியங்ககா கூற நிரூப் பிரியங்கா இடையே காரசாரமான வாக்குவாதம் நடக்கிறது.
Recommended Video
பிரியங்காவின் இந்த பேச்சால் கடுப்பான நிரூப், பிக்பாஸ் ப்ளீஸ் டோர திறந்து விடுங்க நான் வெளியில போய்டுறேன் என்று ஆத்திரத்தில் கத்துகிறார்.
இதைப்பார்த்த நெட்டிசன்ஸ், போட்டி போட முடியாதுனா அவங்க தான் வெளியில் போகனும் நீங்க ஏன் வெளியில் போகனும்னு சொல்றீங்க என்று நிரூப்பை கேள்வி கேட்டு வருகின்றனர்

எல்லாம் நான் தான்
இந்த ப்ரேமோவில் பிரியங்காவின் பேச்சைக்கேட்டு கடுப்பான நெட்டிசன் ஒருவர், எழவு வீடா இருந்தா, நான் தான் பொணமா இருக்கணும்... கல்யாண வீடா இருந்தா, நான் தான் பொண்ணா இருக்கணும். என பதிவிட்டுள்ளார்.

வாய் கிழிய பேசுவான்
மற்றொரு நெட்டிசன் நிரூப் உனக்கு இது தான் தெரியும் போல நேத்து தான் கமல் சொன்னாரு உங்களுக்கு ஒருத்தர மட்டும் போட்டியாளர் அப்போ கூட இந்த வளந்து கெட்டவனுக்கு புரியல போல இதுவே சிபி வருண் இவங்க யாரவது இப்படி சொல்லிருந்தா மூடிகிட்டு பேசாம இருந்துருப்பான் பிரியங்கா கிட்ட மட்டும் தான் வாய் கிழிய பேசுவான் . என பதிவிட்டுள்ளார்.

நீங்கதான் வெளியில் போகனும்
ப்ரோமோவை பார்த்து கடுப்பான இணையவாசி ஒருவர், போட்டி போட முடியாதுனா, நீங்க தான் மேம் டாஸ்க் விட்டு வெளியே போகனும். அடேய் நிரூப் டைரக்ட் ஆ பாயிண்ட் புடிச்சு பேசாம, டோர் ஆ தோறாங்க.. நான் போறேன்னு சொல்லிட்டு இருக்க. அந்த கதவு தொறந்து.. ரெண்டு பேரையும் வெளிய அனுப்பி விடுங்க பிக்பாஸ். என பதிவிட்டுள்ளார்.

நாள் முழுக்க பேசுவாங்க
மற்றொரு இணையவாசி, சிம்பிளா ஒரே ஒரு கேள்வி... யாருக்கு இது வேண்டியதில்லை... அவர் வெளியே நிற்கட்டும்.... That's all இதுக்கு போய் முழு நாள் பேசுவாங்க போல... தைரியமான ஆளு ராஜு என்னை மக்கள் பைனல்ஸ் அனுப்பி வைப்பார்கள் என்று சொல்லி வெளியே நிற்கலாம். என பதிவிட்டுள்ளார்.

ஸ்லீப்பர் செல்
மற்றொரு நெட்டிசன், போட்டி போட முடியாதுன்னு சொன்னா, நீ கிளம்பி போன்னு சொல்லுயா. அதை விட்டுட்டு கதவை திற நான் ஓட போறேன்னு ஒப்பாரி வைக்குற? பிரியங்காவை வெற்றி பெற வைக்க உள்ளே வந்த ஒரு ஸ்லீப்பர் செல் மாதிரியே நிரூப் எதையாவது உருட்டிட்டு இருக்கார். இந்த வாரம் டபுள் எலிமினேஷனில் 2 பேரையும் அனுப்பிடுங்க.என பதிவிட்டுள்ளார்.

தாமரை பைனல்ஸ் வந்தாச்சு
ஒரு மாசமா ராஜு பிரியங்கா தாமரை பைனலில் வந்தாச்சு என்று பேசப்படுகிறது. ஸோ, இந்த மூவருக்கு TTF வேண்டியதில்லை மூவரில் ஒருவர் வெளியேறி சட்டென்று PHYSICAL TASK ஆரம்பிக்க வழி விடலாமே.... என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











