கப் முக்கியம் பிகிலு.. ராஜுவை ஊக்கப்படுத்திய இமான் அண்ணாச்சி.. பாவனி, தாமரையும் செம ஹேப்பி!
சென்னை: ஃபினாலே வாரத்திற்கு முந்தைய வாரமான இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகி வைரலாகி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்கள் போன் கால் மூலமாக போட்டியாளர்களுடன் பேசும் காட்சிகள் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன.
வருண், அக்ஷரா, சுருதி மற்றும் இமான் அண்ணாச்சி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

எவிக்ட் ஆன போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இதுவரை எவிக்ட் ஆகி வெளியேறிய போட்டியாளர்களில் சிலர் போன் கால் மூலமாக ஹவுஸ்மேட்களுடன் பேசும் அட்டகாசமான பகுதி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் இடம்பெற்றுள்ளது. இமான் அண்ணாச்சி, வருண், அக்ஷரா மற்றும் சுருதி பேசும் காட்சிகள் இந்த 3வது புரமோவில் இடம்பெற்றுள்ளது.

வெளியே வாங்க தாமரை
வருண் மற்றும் அக்ஷரா தாமரை செல்விக்கு ஆதரவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வருணே வந்துருல்லே என கிராண்ட் ஃபினாலேவுக்கு தாமரை அக்கா பெரும் நம்பிக்கையுடன் அழைக்க.. நான் வரது இல்லை.. நீங்க தான் வரணும் என வருண் இந்த வாரம் தாமரை எவிக்ட் ஆகப் போவதை மறைமுகமாக சொன்னது போலவே அந்த உரையாடல் இருந்தது.

ஆல்ரெடி வின்
வருணிடம் ஜெயிச்சுட்டு வந்துடுறேன் என தாமரை வாய் நிறைய சிரிப்பு பொங்க சொல்ல நீங்க ஆல்ரெடி வின் பண்ணிட்டீங்க அக்கா என அக்ஷராவும் இன்று தாமரை தான் எவிக்ட் ஆகி வெளியே வரப் போகிறார் என்பது போலவே பேசும் காட்சிகள் ரசிகர்களை சற்றே கடுப்பாக்கி உள்ளன.

பாவனிக்கு சுருதி சப்போர்ட்
பாவனிக்கு பக்க பலமாக இருந்து வந்த சுருதி எவிக்ட் ஆன பிறகு பாவனி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், பாவனிக்கு ஆதரவான வார்த்தைகளை சுருதி பேச பாவனி ஆர்மியினர் ரொம்பவே சந்தோஷம் அடைந்துள்ளனர். இறுதி வாரம் ரொம்ப டஃப்பா இருக்கும் கடைசி வரைக்கும் போராடு பாவனி என சுருதி உத்வேகப்படுத்தி உள்ளார்.

கப் முக்கியம் பிகிலு
3வது புரமோவின் கடைசியில் இமான் அண்ணாச்சி ராஜுவிடம் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராஜுவுடன் நெருங்கிய நட்புடன் பழகி வந்த இமான் அண்ணாச்சி கேட்டுக்கு வெளியவே வெயிட் பண்ணிட்டு இருப்பேன் கப்போட வா ராஜு.. கப் முக்கியம் பிகிலு என சொல்ல அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்யும் புரமோ வெளியாகி ராஜு ஆர்மியினரை சந்தோஷப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











