பிக் பாஸ் வீட்டில் கேங் சேர்க்கும் பிரியங்கா…வெளியானது 2வது ப்ரோமோ !
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இந்த ப்ரோமோவில் பிரியங்கா தனியாக கேங் அமைத்து அவர்களுடன் பேசி வருகிறார்.
நம்ம மூனு பேர் மேல நிறைய வெறியோட இருப்பாங்க என்கிறார் பிரியங்கா.

பரபரப்புடன்
பிக் பாஸ் வீடு நேற்று நாமினேஷன், தலைவர் தேர்வு என மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. இதில், கடைசி வரை பலூனை பாதுகாத்து வைத்திருந்த தாமரைச்செல்வி பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

15 பேரும் நாமினேஷன்
இதையடுத்து நடந்த நாமினேஷனில் இசைவாணி அதிக வாக்குகளை பெற்றார். மேலும், தாமரைச்செல்வி மற்றும் பாவனியைத் தவிர மற்ற 15 போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் ஆகியுள்ளனர்.

அபிஷேக் ராஜா விமர்சனம்
இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெண் போட்டியாளர்கள் சிலர் குறித்து அபிஷேக் ராஜா விமர்சனம் செய்கிறார். இதில் நதியா சங், இசைவாணி, ஐக்கி பெர்ரி மற்றும் பாவனி ரெட்டியை எடை போட்டு விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு இமான் அண்ணாச்சி சரியான சொன்ன என்பது போல கையைத் தட்டுகிறார்.

கேங் சேர்க்கும் பிரியங்கா
தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் பிரியங்கா, இந்த கேங் மேல நிறைய பேர் வெறி ஆவாங்க, கரைக்டா நாம 3 பேரும் இந்த மாதிரி போட்டு இருக்கோம் பாத்தியா.... அது... நாம கேங் ஃபாம் பண்ணுவோம்னு பண்ணல என்கிறார். இதையடுத்து பேசும் அபிஷேக் நீ என்மேல ரொம்ப அன்பு வச்சி இருக்கல அந்த கோவம் அவன் கண்ணுல தெரிகிறது என்றார். இதற்கு பிரியங்கா எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை என்கிறார்.

இது ட்ரையல் தான்
இது ட்ரையல் தான்... இன்னும் கொஞ்ச நாள்ல டபுள் தமாக்காவாக மாறும் என்கிறார் அபிஷேக். இதற்கு நிரூப், அப்போ அவன் கிளம்பிடுவான் என்கிறார் இதையடுத்து நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் சிரித்துக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











